விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்ச்சியை வைத்துக் கொண்டு (18.09.23) இந்துத்துவ அமைப்புகள் நீதி மன்ற ஆணைகளை கொஞ்சமும் மதிக்காமல், தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளையும் காலில் போட்டு மிதித்தும், பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை விளைவித்தும், சிறு வியாபாரிகளை மிரட்டி வசூல் செய்வதும் என தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

நீதி மன்றங்களை மதிக்காமல் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு பேராபத்துகளை விளைவிக்கும் வகையிலும் இந்த நிகழ்சியை இவர்கள் நடத்தி வருகிறார்கள்.

நீதிமன்ற ஆணைகள்,தமிழக அரசின் ஆணைகளை அமுல்படுத்தி கடமையாற்ற வேண்டிய காவல்துறை மற்றும் மாநில, மாவட்ட அரசு அதிகாரிகள் தொடர்ந்து தங்கள் கடமையை செய்யத் தவறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஆகவே, காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் நீதிமன்ற மற்றும் தமிழக அரசின் ஆணைகளை நிறைவேற்றி அவர்களின் கடமைகளை தவறாமல் ஆற்ற வலியுறுத்தி மனுக்களை ஆணை நகல்களுடன் இணைத்து அவர்களுக்கு வழங்கி தங்கள் கடமையை தவறாமல் செய்யவும் இவற்றை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ள வேண்டுகிறோம்.

அந்தந்த மாவட்ட காவல் துறை, போக்குவரத்துத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆட்சியர், வட்டாட்சியர், உள்ளாட்சித் துறை அலுவலகங்களில் மனுக்களை வழங்க கழக தோழர்களை கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இந்த மனுக்களையும், ஆணை நகல்களையும் துறை சார் அலுவலங்களில் வழங்குவது நாளிதழ்களில் செய்தியாக வர ஆவண செய்யும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.

கழகத் தோழர்கள் அரசுத் துறைகளுக்கு வழங்க வேண்டிய விண்ணப்ப படிவ மாதிரிகள், நீதிமன்ற ஆணை ஆகியவை முகநூல் பக்கத்திலும், கழக வாட்ஸ்ஆப் குழுவிலும் பதிவிடப்பட்டுள்ளது.

- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It