சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக, பாஜக தலைமை மாந்திரீக பூஜை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஏற்கெனவே பாஜக-தான் ஆட்சியில் உள்ளது. ராமன் சிங் என்பவர் முதல்வராக இருக்கிறார். இந்நிலையில் வரப்போகும் தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாந்திரீக பூஜை நடத்தியுள்ளனர். சட்டப்பேரவை அலுவலகத் திலேயே நடத்தப்பட்ட இந்த பூஜையில், முதல்வர் ராமன் சிங் மற்றும் பாஜக அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.இது தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ராமன் சிங் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா என்று பிரதமர் மோடி ஒருபுறம் பேசிக்கொண்டிருக்க, பாஜக-வினரோ இன்னும் மந்திரவாதியை விட்டு வருவதாக இல்லை என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.ஆனால், மாந்திரீக பூஜையெல்லாம் நடக்கவில்லை என்றும், சட்டப் பேரவைக்கு வந்த மந்திரவாதி ராம்லால் காஷ்யப், பாஜக-வின் இளைஞரணி மண்டலத் தலைவராக இருப்பவர் என்றும் பாஜக-வினர் மழுப்பியுள்ளனர்

மோடி சுற்றியது 84 நாடுகள்; ஆன செலவு ரூ.1,484கோடி!

பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 52 நாடு களுக்குசுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், இதற்காக ரூ. 355 கோடியே 78 லட்சம் செலவாகி இருப்பதாகவும் பிரதமர்அலுவலகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்திருந் தது. இந்நிலையில், மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் குறித்த புதிய விவரங்கள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே. சிங், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், பிரதமர் மோடி, 2014 முதல் கடந்த நான்காண்டுகளில் 84 நாடுகளை சுற்றி வந்திருப்பதாகவும், இதற்காக சுமார் ரூ. ஆயிரத்து 484 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 2014 மே மாதம் முதல் இதுவரை பிரதமர் மோடி மொத்தம் 42 வெளிநாட்டுப் பயணங்களில் 84 நாடுகளை சுற்றி வந்துள்ளார்.

2015-16இல் மட்டும் அதிகபட்சமாக 24 நாடுகளுக்கும், 2016-17இல் 18 நாடுகளுக்கும், 2017-18இல் 19 நாடுகளுக்கும் பயணம் செய்துள் ளார்.இதற்காக 2014-15இல் ரூ. 93 கோடியே 76 லட்சமும், 2015-16இல் ரூ. 117 கோடியும், 2016-17இல் ரூ. 76 கோடியே 27 லட்சமும், 2017-18இல் ரூ. 99 கோடியே 32 லட்சமும் செல விடப்பட்டு உள்ளது. அதாவது, 2014 ஜூன் 15 முதல்2018 ஜூன் 10 வரை பிரதமர் மோடி விமானத்தில் பய ணம் செய்த வகையில் ரூ. 387 கோடியே 26 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் விமானத்தைப் பராமரிக்க கடந்த4 ஆண்டுகளில் ரூ. ஆயிரத்து 88 கோடியே 42 லட்சம் செலவாகியுள்ளது; பிரதமர் மோடி மற்ற நாடுகளின் தலைவர்களுடன் பேசுவதற்காகத் தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்ட ஹாட்லைனுக்காக ரூ. 9 கோடியே 12 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று வி.கே. சிங் தெரிவித்துள்ளார். இதனிடையே, மோடி சுற்றிப்பார்த்த நாடுகளின் எண்ணிக்கை, இன்னும் சில நாட்களில் 87 ஆக உயரப்போகிறது. அவர் ஜூலை 23 முதல் 27 வரை ஆப்பிரிக்க நாடுகளான உகாண்டா, தென்னாப் பிரிக்கா, ருவாண்டா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எப்படி யும் ஆட்சி முடிவதற்குள் ‘சதம்’அடித்து விடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பெண்களைப் புறக்கணிக்கும் அய்.அய்.டி. நிறுவனங்கள்

மாணவர்களைவிட மாணவிகள் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) அவர்களது சேர்க்கை குறைவாக உள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

கோரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற 64ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:

2017இல் ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதிய 1,60,000 பேரில் 30,000 பேர் மட்டுமே மாணவியர்.அதே ஆண்டில் ஐஐடி-யில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்த 10,878 பேரில் 995 பேர் மட்டும் மாணவியர். பொது தேர்வுகளில் மாணவியர் அதிக மதிப்பெண் பெறுகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும், மாணவர்களைவிட மாணவியர் அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆனால் ஐஐடி-களில் சேரும் மாணவியர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

கோரக்பூர் ஐஐடி-யில் மொத்தம் 11,653 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 1,925 பேர் மட்டுமே மாணவிகள். இது 16 சதவீதத்துக்கும் சற்று அதிகம். இந்த நிலை மாற வேண்டும். பெண்களை உயர்கல்வி படிப்புகளில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் அதிகஅளவில் ஈடுபடுத்த வேண்டும். இந்த செயலை செய்யாவிடில் சமூகத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்த முடியாது. இது சமூகத்தில் ஆண்-பெண் சமத்துவத்தை கடினமாக்குவதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.

Pin It