Mattuvil Gnanakumaranதமிழ்க் கவிஞர் வட்டத்தின் (தகவம்) 2008 ம் ஆண்டின் முதல் காலாண்டின் சிறந்த சிறுகதைக்கான விருது வீரகேசரியில் வெளியான கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரனின் “பள்ளிக் கூடம்" சிறுகதைக்கு கிடைத்திருக்கிறது.

தமிழ்க் கவிஞர் வட்டம் (தகவம்) 2008 ம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான விருது வழங்கும் விழா 18ம் திகதி ஞாயிறன்று கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்திலே மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

வருடம் தோறும் இலங்கைப் பத்திரிகை சஞ்சிகைளில் இருந்து வெளிவரும் சிறுகதைகளில் இருந்து காலண்டு அடிப்படையில் தகவம் நடுவர் குழுவினால் இவ்விருது தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படுகிறது. 2008ம் ஆண்டின் முதல்காலாண்டு சிறுகதைக்கான விருதை கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் “பள்ளிக் கூடம் சிறுகதை“ பெறுகிறார். கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்திலே நடைபெற்ற இவ்விழாவுக்கு திரு மாத்தளை கார்த்திகேசு தலைமை தாங்கினார். முதன்மை விருந்தினராக பேராசிரியர் சண்முகதாசன் கலந்து கொண்டார். பரிசுக்கதைகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேட்ட விரிவுரையாளர்.ஐனாப்.எம்.ஏ.எம் ரமீஸ் அறிமுகம் செய்துவைத்தார்.

இவ்விழாவிலே மூத்த எழுத்தாளர் தெளிவத்தை யோசப்புக்கு கௌரவமும் பாராட்டும் செய்யப்பட்டது. பாராட்டுரையை வைத்திய கலாநிதி எம். கே. முருகானந்தன் ஆற்ற பேராசிரியர் சோ.சந்திரசேகரத்தினால் பொன்னாடை போர்த்தி அவர் கௌரவிக்கப்பட்டார். வரவேற்புரையை திரு ஆ. விஐயகுமாரும் நன்றியுரையை திரு .மு. தயாபரனும் ஆற்றினார்கள்.

Pin It