யானை மீது உட்கார்ந்து யோகா செய்து காட்டிய பதஞ்சலி அதிபர் பாபா ராம்தேவை யானை கீழே தள்ளியது. - செய்தி

யானை அப்படி எல்லாம் கீழே தள்ளவில்லை; அதுவும் யோகா பயிற்சி செய்து கொண்டிருந்தது.

• 2018-19இல் அரசியல் கட்சிகளுக்கு கம்பெனிகள் வழங்கிய மொத்த நன் கொடை ரூ. 876 கோடியில் பா.ஜ.க.வுக்கு கிடைத்தது ரூ.700 கோடி. - செய்தி

அப்படியா! 176 கோடி எந்தக் கட்சிக்குப் போனது? உடனே பறிமுதல் செய்ய அமுலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்!

• மிருகக் காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டிறைச்சி போடுவதை நிறுத்தக் கோரி அசாமில் பா.ஜ.க.வின் முற்றுகைப் போராட்டம். - செய்தி

காவிக் கொடிகளோடு காட்டுக்கே போய் புலிகளை முற்றுகையிடுங்கள்; அப்பத்தான் புலிகள் அடங்கும்!

• இனி எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவே முடியாது. - பா.ஜ.க. தலைவர் முருகன்

சரி தான். பா.ஜ.க. தலைவர் முருகன், பழனி முருகனாக அவதரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு அப்படி ஒரு ‘வரம்’ கொடுத்து விட்டார் போல!

• பீகாரில் தேர்தல் கணிப்புகளை முன்கூட்டியே வெளியிட சோதிடர்களுக்கு தடை. - தேர்தல் ஆணையம்

சரியான முடிவு! தேர்தல் முடிவுகள் வரட்டும்; அப்புறம் பாருங்கள்; யார் வெற்றி பெறுவார்கள் என்பதை புட்டுப் புட்டு வச்சுருவாங்க. அது அறிவியலாச்சே, சும்மாவா!

- விடுதலை இராசேந்திரன்

Pin It