கொரோனா ஊரடங்கு காலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இணையக் கருத்தரங்கங்கள் ‘Team Link’ மற்றும் முகநூல் வழியாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. 01.04.2020 அன்று ‘Team Link’ வழியாக தொடங்கப்பட்ட கருத்தரங்கங்கள் 31.05.2020 அன்று வரை நடைபெற்ற கருத்தரங்கம் தினமும் காலை 11:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது.
‘தோழர் பெரியாரின் சமதர்மம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி - ஏப் 1 அன்றும், ‘இடஒதுக்கீடு சிக்கல்கள்’ என்ற தலைப்பில் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் - ஏப் 2 அன்றும், ‘நாத்திகமும் அறிவியல் மனப்பான்மையும்’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரன் - ஏப் 3 அன்றும், ‘மருத்துவத் துறையில் திராவிட இயக்கத்தின் சாதனை’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாணவர் கழகம் பிரசாந்த் ஏப் 4 அன்றும், ‘கொளுத்துவோம் மனுதர்மத்தை’ என்ற தலைப்பில் – தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் ஏப் 5 அன்றும், ‘மணியம்மையார் போர்க் குணம்’ என்ற தலைப்பில் தேன்மொழி ஏப் 6 அன்றும்,
‘பெரியாரியலாளர்களின் இயக்கப் பணிகள்’ என்ற தலைப்பில் தலைமைக்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் ஏப் 7 அன்றும், ‘புதிய கல்விக் கொள்கை’ – என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் வீரா கார்த்திக் ஏப் 8 அன்றும், ‘புத்தமும் பெரியாரியமும்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாணவர் கழகம் சந்தோஷ் ஏப் 9 அன்றும், ‘பார்ப்பனீயம் அன்றும் இன்றும்’ என்ற தலைப்பில் – கோவை மாவட்டச் செயலாளர் வெள்ளியங்கிரி ஏப் 10 அன்றும், ‘திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம்’ என்ற தலைப்பில் தேனி மாவட்டம் துரை ஏப் 11 அன்றும், ‘பண்பாட்டுத் தளத்தில் பெரியார்’ என்ற தலைப்பில் அய்யனார் ஏப் 12 அன்றும், ‘அம்பேத்கரின் பார்வையில் புரட்சி’ –என்ற தலைப்பில் ஜெயபிரகாஷ் ஏப் 13 அன்றும் கருத்துரையாற்றினார்கள்.
ஏப் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வைக்கம் போராட்டம் குறித்து சிறப்பு கருத்தரங்க உரை நிகழ்த்தினார்.
ஏப் 15 முதல் காலை 11 மணிக்கு தொடங்கிய கருத்தரங்கில், ‘ஊரடங்கு சட்டங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள்’ குறித்து கழக வழக்கறிஞர் துரை அருண், ஏப் 16 ‘பெரியார் கண்ட களங்கள் - ஜாதி ஒழிப்பு’ - கொளத்தூர் குமார், ஏப் 17 ‘தமிழ்ப் புத்தாண்டும் தமிழர் திருநாளும்’ - கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் மதியழகன், ஏப் 18 ‘நீதிக்கட்சி அரசு சாதித்தது என்ன?’ - தமிழ்நாடு மாணவர் கழக சபரிகிரி, ஏப் 19 ‘திராவிடர் இயக்கத்தால் தமிழர் அடைந்த நன்மைகள்’ - கோவை மாவட்ட செயலாளர் நிர்மல்குமார், ஏப் 20 ‘பெரியாரும் தமிழும்’ - தோழர் கனல்மதி, ஏப் 21 ‘புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்’ - அன்பு தனசேகர், ஏப் 22 ‘ வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றி ஒரு பார்வை’ - வேலூர் மாவட்ட செயலாளர் இரா பா சிவா, ஏப் 23 ‘ஆரியப் படையெடுப்பு’ - தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஏப் 24 –’தமிழ் இசையும் திராவிடர் இயக்கமும்’ - இசைமதி, ஏப் 25 –’பெண், உடை, அரசியல் - பெரியாரியல் பார்வை’ - திவிக வடசென்னை மாவட்ட செயலாளர் இராஜீ, ஏப் 26 ‘ஜாதி ஒழிப்பே உண்மையான விடுதலை’ - கடலூர் மாவட்ட அமைப்பாளர் மதன்குமார், ஏப் 27 ‘வைதீக மரபுக்கு எதிராக தமிழ் முற்போக்கு மரபு’ - காஞ்சி மாவட்டப் பொறுப்பாளர் இரவிபாரதி, ஏப் 28 ‘தாய்மொழி வழிக் கல்வி அவசியமும் மாநில கல்வி உரிமையும்’ - தருமபுரி மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ்குமார், ஏப் 29 ‘தேசியக் கல்விக் கொள்கை’ - வீரா கார்த்திக், ஏப் 30 ‘திவிக இயக்கப் பணிகள்’ - கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஆகியோர் பேசினர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கமாய் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘ஜாதியமைப்பும் உழைப்பாளர் தினமும்’ என்ற தலைப்பில் மே 1 அன்று கருத்துரையாற்றினார்.
அதன் பின்னர் காலை 10.30 மணிக்கே தொடங்கும் கருத்தரங்கம் ‘பெரியாரியல் நூல் வாசிப்பை பரவலாக்குவோம்’ என்ற அடிப்படையில் கருத்தரங்கில் பேசக்கூடிய தோழர்கள் கழக வெளியீடு அல்லது ஏதேனும் ஒரு நூலை தேர்ந்தெடுத்து வாசித்து அதிலுள்ள கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மே 2 - சட்ட எரிப்புப் போராட்டம் – திருச்சி செல்வேந்திரன் நூலைப் பற்றி விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பெரியார் சாக்ரடீஸ், மே 3 - ‘A Brief answer to the Big Questions – Stephen Hawkings’ நூலின் முதல் 5 பகுதியை பற்றி தமிழ்நாடு அறிவியல் மன்றம் அறிவழகன் முதலில் கருத்துரையாற்ற, ‘திராவிடர் இயக்கமும் வேளாளரும்’ பேராசிரியர் வேங்கடாசலபதி நூலைப் பற்றி கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கருத்துரையாற்றினார். மே 4 - ‘சங் பரிவாரின் சதி வரலாறு’ விடுதலை இராசேந்திரன் நூலைப் பற்றி திருப்பூர் மாவட்டச் செயலாளர் நீதிராசன், மே 5 - ‘ஜோதிடப் புரட்டு’ – நக்கீரன் நூலைப் பற்றி தமிழ்நாடு அறிவியல் மன்ற ஆசிரியர் சிவக்குமார், மே 6 - ‘விஞ்ஞானிகளை அழித்த மதவெறி’ திவிக வெளியீட்டை பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.
மே 7 - ‘உயர் எண்ணங்கள் 2’ தந்தை பெரியார் நூலைப் பற்றி தமிழ்நாடு மாணவர் கழகம் அறிவுமதி, மே 8 - ‘பணத்தோட்டம்’ அறிஞர் அண்ணா நூலைப் பற்றி பிரகாசு, மே 9 - ‘பெண்ணால் முடியும்’ மஞ்சை வசந்தன் நூலைப் பற்றி கோபி மணிமொழி, மே 10 - ‘கருஞ்சட்டை கலைஞர்’ கொளத்தூர் மணி எழுதிய நூலைப் பற்றி தமிழ்நாடு மாணவர் கழக அன்னூர் பொறுப்பாளர் விஷ்ணு, மே 11 - ‘ஜனநாயகத்தின் முட்டாள்தனம்’ தந்தை பெரியார் நூலைப் பற்றி சென்னிமலை கவிப்பிரியா, மே 12 - ‘பெரியார் அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு’ ஆ இராசா எழுதிய நூலைப் பற்றி கோவை மு அறிவரசு, மே 13 - ‘இனி வரும் உலகம் –தத்துவ விளக்கம்’ தந்தை பெரியார் நூலைப் பற்றி கொளத்தூர் சுதா, மே 14 - ‘பெண் மொழி மா’ ஏ.எஸ்.பத்மாவதி நூலைப் பற்றி சென்னை அறிவுமதி அன்பரசன், மே 15 - ‘தாலி ஒரு மாயை ஆணாதிக்க குறியீடு’ நல்லூரான் எழுதிய நூலைப் பற்றி ஈரோடு மணிமொழி, மே 16 - ‘இந்திய விடுதலையின் இறுதி நாட்கள்’ தார்க்ஷியா நூலைப் பற்றி கோவை மாவட்ட செயலாளர் வெள்ளியங்கிரி, மே 17 - ‘இந்துவாக நான் சாகமாட்டேன்’ புரட்சியாளர் அம்பேத்கர் நூலைப் பற்றி மேட்டூர் மதிவதனி, மே 19 - ‘இளைஞர்களே உங்களுக்கு தெரியுமா?’ திவிக வெளியீடு குறித்து இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் ஆகியோர் கருத்தரையாற்றினர்.
மே 20 - ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ பிரேம் நாத் பசாஸ் நூல் குறித்து கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மே 21 - ‘தத்துவ தலைமை பாட்டாளியம், தலித்தியம் தமிழியம்’ தணிகைச் செல்வன் நூலைக் குறித்து சிவகாமி, மே 22 - ‘இந்து மதம் எங்கே போகிறது?’ அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார் நூல் குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மே 23 - ‘சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்’ முனைவர் வளர்மதி நூல் குறித்து வைத்தீஸ்வரி, மே 24, - ‘காஞ்சி சங்கராச்சாரி யார்? ஓர் ஆய்வு’ கி வீரமணி எழுதிய நூல் குறித்து யுவராஜ், மே 25 - ‘சடங்குகளின் கதை - அக்னிஹோத்திரம்’ இராமானுச தாத்தாச்சாரியார் நூல் குறித்து முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், மே 26 - ‘மபொசியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?’ வாலாசா வல்லவன் நூலைப் பற்றி குகன், மே 27 - ‘1912லிருந்து 1973 வரை திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்’ தஞ்சை மருதவாணன் நூலைப் பற்றி கொளத்தூர் சந்தோஷ், மே 28 - ‘மகத்தான ருஷ்யப் புரட்சியின் மலரும் நினைவுகள்’ – சி.கே. மதிவாணன் நூலைக் குறித்து அன்பு தனசேகர், மே 29 - ‘திராவிட இந்தியா’ டி.ஆர். சேசைங்கார் தமிழில் க.ப. அறவாணன் நூலைப் பற்றி மேட்டூர் குமரேசன், மே 30 - ‘பார்ப்பனியத்தின் வெற்றி புரட்சியாளர் அம்பேத்கர்’ நூலைப் பற்றி சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், மே 31 - ‘அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும்’ முனைவர் வளர்மதி எழுதிய புத்தகத்தில் இருந்து பரத் சரவணன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
கருத்தரங்கத்தில் பேசியவர்கள் ஒரு தலைப்பின் கீழ் பேசினர். அந்த உரையிலிருந்து கூநயஅ டுiமே வாயிலாக இணைந்திருந்த கழகத் தோழர்களால் கேள்விகளும் கேட்கப்பட்டது. கருத்தாளர் பதில்களை அளித்தனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக 62 நாட்கள் கருத்தரங்கம் இடைவிடாது நடைபெற்றது. கருத்தரங்கத்தில், கழக தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக தோழர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
கருத்தரங்கின் தொடக்கத்தில் பகுத்தறிவு பாடலை பாடி தோழர்கள் தொடங்கி வைத்தனர். ஒருவரோ அல்லது இருவரோ தினந்தோறும் புதிய பாடல்களை பாடி நிகழ்வை சிறப்பித்தது தோழர்களின் மத்தியில் சோர்விலாது கருத்தரங்கம் செல்ல வழிகாட்டியாக அமைந்தது. மேட்டூர் டிகேஆர் இசைக்குழுவின் சார்பில் கோவிந்தராஜ், அருள்மொழி அவர்களோடு இணைந்து கோவையில் இருந்து இசைமதி மற்றும் கிருஷ்ணன், திருப்பூரில் இருந்து யாழினி, யாழிசை, அமுதினி, பாண்டியநாதன், நஜிமுன்னிசா, பெரியார் பிஞ்சு சுருதி மற்றும் சாக்கோட்டை இளங்கோவன் ஆகியோர் பகுத்தறிவு பாடல்களை பாடினர்.
ஜுன் மாதங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் சிறப்புக் கருத்தரங்கங்கள் 29.06.2020 அன்று தொடங்கப்பட்டு ஒரு சில நாட்கள் இடைவெளிகளுடன் 17.07.2020 வரை மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. கருத்தாளர்களை மாணவர் கழகத் தோழர்களின் அறிமுக உரையுடன் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மட்டுமல்லாது பிற அமைப்பு, இயக்கங்களை சார்ந்த தோழர்களும் திவிக கருத்தரங்கில் கருத்துரையாற்றினர். இந்நிகழ்வுகள் திராவிடர் விடுதலைக் கழக முகநூல் மற்றும் 'யூ டியூப்' பக்கங்களில் நேரலையாகவும் ஸ்ட்ரீம்யார்ட் மூலம் பதிவேற்றப்பட்டன.
63ஆவது கருத்தரங்கம் ஜுன் 29 - ‘பெரியார் சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும்’ என்ற தலைப்பில் கொளத்தூர் மணி; 64ஆவது கருத்தரங்கம் ஜுலை 1 - ‘இராவண காவியம்’ என்ற தலைப்பில் புலவர் செந்தலை கவுதமன் ; 65ஆவது கருத்தரங்கம் ஜுலை 3 - ‘கொரோனா காலத்திலும் ஜாதிய வன்முறைகள்’ என்ற தலைப்பில் எவிடென்ஸ் கதிர்; 66வது கருத்தரங்கம் ஜுலை 5 - ‘கரும்புலிகள் நாள் முதல் கரும்புலி மில்லர் வீரச்சாவு’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் தடா ஓ சுந்தரம்; 67ஆவது கருத்தரங்கம் ஜுலை 6 - ‘சுற்றுச்சூழல் சீரழிவும் கொரோனாவும்’ என்ற தலைப்பில் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்; 68ஆவது கருத்தரங்கம் ஜுலை 8 - ‘பெரியாரும் திராவிடர் இயக்கமும் இலங்கையில் ஏற்படுத்திய தாக்கம்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் பாமரன்; 69ஆவது கருத்தரங்கம் ஜுலை 10 - ‘அம்பேத்கர் மீதான அவதூறுகள்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவர் மதிவண்ணன்; 70ஆவது கருத்தரங்கம் ஜுலை 11 - ‘பெரியார் மணியம்மை திருமணம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி; 71ஆவது கருத்தரங்கம் ஜுலை 12 - ‘க்ரீமிலேயரா? கிருமிலேயரா?’ என்ற தலைப்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சங்க செயலாளர் அன்பு தனசேகர்; 72ஆவது கருத்தரங்கம் ஜுலை 13 - ‘மாற்றுத் திறனாளிகள் ஒரு வித்தியாசமான பார்வை’ என்ற தலைப்பில் டிசம்பர் 3 இயக்கம் பேராசிரியர் தீபக்; 73ஆவது கருத்தரங்கம் ஜுலை 15 - ‘கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் விழா சிறப்பு கருத்தரங்கம்’ கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்; 74ஆவது கருத்தரங்கம் ஜுலை 17 - ‘குழந்தைகள் மீதான வன்முறைகள்’ என்ற தலைப்பில் தோழமை அமைப்பு தேவநேயன்; 75ஆவது கருத்தரங்கம் ஜுலை 20 - ‘திசை திருப்பும் காவிகள்’ என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் சுந்தரவள்ளி; 76ஆவது கருத்தரங்கம் ஜுலை 22 - ‘கீழடி’ என்ற தலைப்பில் வழக்கறிஞர் கனிமொழி மதி; 77ஆவது கருத்தரங்கம் ஜுலை 27 - ‘உலக மயமாக்கலும் ஜாதிய முரண்களும்’ என்ற தலைப்பில் இளந்தமிழகம் செந்தில்; 78ஆவது கருத்தரங்கம் ஆக 12 - திவிக 9ஆம் ஆண்டு தொடக்கவிழா சிறப்பு கருத்தரங்கம் - கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘கடந்து வந்த பாதை’ என்ற தலைப்பிலும்; கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘பெரியாரியல் எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பிலும் கருத்துரை; 79ஆவது கருத்தரங்கம் ஆக 16 - 2013-2019 வரையிலான 7 ஆண்டுகளின் பரப்புரை பயண ஒருங்கிணைப்பாளர்களின் கலந்துரையாடல்; 80ஆவது கருத்தரங்கம் ஆக 21 - ‘ பெரியாரும் மதமாற்றமும்’ என்ற தலைப்பில் கவிஞர் யாழன் ஆதி; 81ஆவது கருத்தரங்கம் ஆக 24 - ‘ஒடுக்கப்பட்டோரும் திராவிடர் இயக்கமும்’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரன்; 82ஆவது கருத்தரங்கம் ஆக 26 - ‘முற்போக்கு தமிழ் மரபு’ என்ற தலைப்பில் முனைவர் சி இளங்கோ; 83ஆவது கருத்தரங்கம் ஆக 30 - ‘திருநர் பார்வையில் சமூகம்’ என்ற தலைப்பில் கிரேஸ் பானு; 84ஆவது கருத்தரங்கம் ஆக 31 - ‘பெரியாரின் இடதுசாரி தமிழ்த்தேசியம்’ என்ற தலைப்பில் திவிக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன்.
கருத்தரங்கம் சிறப்புடன் தொடர்ந்து நடைபெற கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி மற்றும் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் தேன்மொழி அவர்கள் ஒருங்கிணைத்தனர்.
மேலும் கருத்தரங்கத்திற்கு தேவையான பதாகைகளை திருப்பூர் கதிர்முகிலன் மற்றும் அன்னூர் தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர் விஷ்ணு உடனுக்குடன் வடிவமைத்துக் கொடுத்தனர்.
தொடர்ச்சியாக நடைபெற்ற இணையக் கருத்தரங்கங்களை தொய்வில்லாமல் இணையதள பிரிவு நடத்தி இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் பெரியாரியல் கருத்துக்களை மக்களிடம் சென்று சேர்த்தனர்.
- விஜய்குமார்