கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

• கோயில்களுக்கு உரிய நான்கு சக்கர வாகனங்கள் ‘இறைவனுக்கு’ மட்டுமே உரிமையானது. அரசு தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. - இந்து அறநிலையத் துறை அறிவிப்பு

ஆகம விதிகளில் மோட்டார் வாகன விதிகளையும் சேர்த்து விட்டீர்களா? சொல்லவே இல்லை.

• ஜெர்மன் நாட்டின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை மூடப்படுகிறது; தமிழக அரசு உறுதி அளித்தபடி 1 கோடியே 24 இலட்சத்தை வழங்காததே காரணம். - செய்தி

தமிழைத் தமிழ்நாட்டில் வளர்ப்பதுதான் அம்மா ஆட்சி; ஜெர்மனியில் அல்ல என்பதை எதிர்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

• மோடி படம் - பகவத் கீதையுடன் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. - செய்தி

நல்லது; ‘செயற்கைக் கோள்’ பெயரை உடனே ‘இராமபானம்’ என்று மாற்றி விடுங்கள்!

• மூலைக்கு மூலை கோயில்கள் இருப்பதால்தான் நாம் கொரனாவி லிருந்து மீண்டோம். - இந்து மாநாட்டில் தமிழிசை

கொரானா காலத்தில் கோயில்களே மூடப்பட்டிருந்ததை தமிழிசை மறந்து விட்டார் போல!

• கடவுள் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் தனியாக அங்கீகரிக்கவில்லை; மனித சமூகத்தை மட்டுமே அங்கீகரிக்கிறார். - சென்னை உயர்நீதிமன்ற அமர்வு

உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது; கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்தி ரங்கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. எனவே பிராமணனே கடவுள் - ரிக் வேதம்.

- விடுதலை இராசேந்திரன்