protest farmersவிவசாய மசோதாவை இரத்து செய்யக்கோரி புறநகர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரை மேலூரில் 18.12.2020 அன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு திவிக மதுரை மாவட்ட செயலாளர் மா.பா. மணி அமுதன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் திலீபன் செந்தில், மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் பசும் பொன் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் வெ. கனியமுதன், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த. பாண்டியன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஜியாவுதீன், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் (ஹைதர் அலி) மாவட்ட துணைச் செயலாளர் -ஜாகீர் உசேன், தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சியின் தலைவர் மணி பாபா, மேலூர் சிபிஐ தாலுகா செயலாளர் கண்ணன், எரிகாற்று குழாய் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செல்வராசன் மற்றும் மே 17 இயக்கம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் - மேலூர் பகுதி விவசாய சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருமங்கலம் பகுதிப் பொறுப்பாளர் மாளவிகா பவித்ரா நன்றி கூறினார்.

                                                                     ***

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டக் கலந்துரையாடல், சென்னை தலைமை அலுவலகத்தில் 19.12.2020 அன்று மாலை 6:30 மணியளவில், தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் தொடங்கி நடை பெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார்.

‘ஈரோட்டு பூகம்பம்’ முரசொலி முகிலன் படத்தை கழகப் பொதுச் செயலாளர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து 2021 ஆண்டிற்கான நாட்காட்டி அறிமுகப்படுத்தப் பட்டது. மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதியிலிருந்து புதியதாக இணைந்த தோழர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, கழக வெளியீடுகள் வழங்கப்பட்டன.

புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் சந்தா சேர்ப்பு, கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களைத் தெரிவித்தனர். தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இறுதியாக, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், முரசொலி முகிலன் மற்றும் முரசொலி முகிலனைப் போல திராவிடர் இயக்கங்களில் தங்களை ‘மெழுகுவர்த்திகளாக்கி’ திராவிடர் இயக்கம், பெரியாரின் கொள்கைகளை கலை வடிவில் பரப்பிய தோழர்களைப் பற்றியும் நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

                                                                                 ***

திருப்பூர் கோவை மாணவர் கழகக் கூட்டத்தின் முடிவுகள்

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் திருப்பூர், கோவை பகுதி கலந்துரை யாடல், 20.12.2020 ஞாயிறன்று காலை 11 மணியளவில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் திருப்பூர் சிவகாமி இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கோவை மாவட்ட பொறுப்பாளர் விஷ்ணு தலைமை ஏற்று நடத்தினார்.

தொடர்ந்து தோழர்கள் தமிழ்நாடு மாணவர் கழகம் தற்போது வரை நடத்திய நிகழ்ச்சிகளின் செயல் பாடுகள் குறித்த நிறை, குறை மற்றும் இனி வரும் காலங் களில் எப்படி செயல்படுவது என்பது குறித்தும். இயக்கத்தை வலுப் படுத்துவது பற்றியும் அவரவர் கருத்துக்களை முன் வைத்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் கோவை மாவட்டம் விஷ்ணு, பார்த்தீபன், திருப்பூர் மாவட்டம் கனல்மதி, தேன்மொழி, பிரசாந்த், சந்தோஷ், ஈழமாறன், முத்தமிழ், பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை.

இறுதியில் கூட்டத்தின் நிறைவாக வரும் காலங்களில் தமிழ்நாடு மாணவர் கழகத்தின் செயல்பாடுகள் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானங்களாக முடிவு செய்யப்பட்டது.

1. மாதம் ஒரு முறை திராவிட சித்தாந்த தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளையொட்டி இணையக் கருத்தரங்கம் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடத்தப்படும் என தீர்மானம் செய்யப்பட்டது.

2. திவிக சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான நிகழ்ச்சிகளில் அனைத்திலும் தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களின் பங்களிப்பை கட்டாயம் கொடுப்போம் என்று முடிவு எடுக்கப்பட்டது.

3. வரும் காலங்களில் கல்வி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் போது தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் உரிய முறையில் துண்டறிக்கைப் பிரச்சாரமோ அல்லது தீர்வுகளை நோக்கிய ஆர்ப்பாட்டங்களோ முன்னெடுக்கப்படும் என்று தீர்மானம் செய்யப்பட்டது.

4. இட ஒதுக்கீடு குறித்து இளைஞர்களிடத்தில் சரியான புரிதல் இல்லாத நிலையில் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வண்ணம் தொடர்ச்சியாக இணைய வழியிலோ அல்லது மாணவர்கள், பொது மக்கள் கூடும் இடங்களில் தெருமுனைப் பரப்புரைக் கூட்டங்கள் முன்னெடுப்போம் என்று தீர்மானிக்கப்பட்டது.

5. தமிழ்நாடு மாணவர் கழகத்தை வலுப்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள படிப்பகங்கள் அல்லது நூலகத்தில் பள்ளி மாணவர் களை ஒருங்கிணைத்து புத்தக வாசிப்பு மற்றும் திராவிடக் கொள்கை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்து வோம் என்று தீர்மானம் செய்யப்பட்டது.

6. வருடத்திற்கு இரண்டு முறை தமிழ்நாடு மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் நேரடியாக சந்தித்து பேசும் வகையில் கலந்துரை யாடல் கூட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

- விடுதலை இராசேந்திரன் 

Pin It