• உ.பி.யில் கழுதை சாணத்தில் உணவு மசாலா தயாரித்த ‘இந்து’ அமைப்பின் தலைவர் கைது. - செய்தி

பசு சாணம் பற்றாக் குறையாக இருக்கும் போது அவர் என்ன தான் செய்ய முடியும்?

• அ.தி.மு.க. பா.ஜக. கூட்டணி யார் தலைமையில் தேர்தலை சந்திக்கும் என்பதை எங்கள் கட்சியே முடிவு செய்யும். - பா.ஜ.க. முருகன்

சட்டசபையில் மருந்துக்குக்கூட ஒரு ஆள் இல்லாத கட்சியின் பேச்சைப் பார்த்தீங்களா? காலமடா, சாமி!

• ‘கொரானா’ காலம் என்பதால் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் நுழைய அனுமதி இல்லை. - கோயில் நிர்வாகங்கள் அறிவிப்பு

‘கொரானா’ வழியாக சொர்க்கத்துக்கு போனாகூட தடுப்பீங்களா?

• நான் அமைக்கப் போவது எம்.ஜி.ஆர். ஆட்சியின் நீட்சி. - கமலஹாசன்

ரொம்ப நன்றி சார். இப்பத்தான் முதன் முதலாக நீங்க பேசுறதே, புரிஞ்சிருக்கு!

• என்னுடைய கைலாசா தீவுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இலவசமா விமானத்தில் வரலாம்! - நித்யானந்தா

சி.பி.அய்., அமுலாக்கத் துறையினர், கிரைம் பிராஞ்ச் போலீஸ் எல்லாம் இலவசமாக வரலாமா, சுவாமி!

• 970 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுகிறது மோடி ஆட்சி. - செய்தி

எதுக்கு வீண் செலவு? இராமன் கோயில் மண்டபத்திலேயே நாடாளுமன்றத்தை வச்சுக்கலாமே!

- விடுதலை இராசேந்திரன்

Pin It