திராவிடம் தான் எனது எதிரி என்று சீமான் முழங்குகிறார். அவர் பேசும் தமிழ்த்தேசியத்துக்கு முதன்மை எதிரி ‘இந்தியம்’ அதாவது ‘இந்திய அரசு’ அதைப் பேசுவதற்கு அவருக்கு அச்சம். சட்டம் பாயும்; தேர்தலில் நிற்க முடியாது. எனவே மக்களை ‘திசை திருப்ப’ ‘திராவிடத்தை’ முன்னிறுத்துகிறார். அவரது நாம் தமிழர் கட்சியின் தலைவர் – வழிகாட்டி தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் தான் என்கிறார். சரி, மேதகு பிரபாகரன் திராவிடத்துக்கு எதிரியா? இல்லை.
1978இல் கியூபாவில் உலகப் போராளிகள் மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த ஆங்கில அறிக்கையில் என்ன கூறப்பட்டிருந்தது?
WHO ARE THE THAMILS (DRAVIDIANS)?
The Thamils have ancient and thamil language which is one of the oldest language of india that formed the dravidian family spoken today in thamilnadu of india, thamil eezham of Ceylon, singapore, malaysia, fiji islans, south africa and in other country bye more than 65 million people. In Ceylon thamils are 3 million in number.
“இந்தியாவின் மூத்த மொழிகளில் ஒன்றான எங்கள் தமிழுக்கு நீண்ட கலாச்சார அடையாளம் உண்டு. நாங்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் எங்கள் மொழி பேசும் மக்கள் 63 மில்லியன் பேர். சிலோனில் நாங்கள் 3 மில்லியன் பேர்”
- விடுதலை இராசேந்திரன்