ஒட்டன் சத்திரம் பகுதி தீண்டாமை அவலங்கள்

ஒட்டன் சத்திரம் பகுதியில் நிலவும் தீண்டாமை அவலங்கள் பற்றி, ஏற்கனவே இரண்டு பட்டியல்களை வெளியிட்டுள்ளோம். இது 3வது பட்டியல்:

1. கீரனூர் - கள்ளிமந்தயம் - ராசேந்திரன் தேநீர் கடை, அருள் தேநீர் கடை, அகத்தியர் தேநீர் கடை - இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், மல்லீசுவரன், காளியம்மன், விநாயகர் கோவில்களில் தலித்துகள் அனுமதி இல்லை. சுடுகாடு இரண்டு. (அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டது.)

 இந்த ஊரில் தான் சமீபத்தில் தெருவிளக்கு எரியவில்லை என ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்ட அருந்ததியர் இனத்தைச் சார்ந்தவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டு, ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் தலித் அருந்ததியர் இன மக்களுக்கு குடிநீர் மறுக்கப்பட்டு மூன்று மாத காலமாக சொல்லொண்ணாத் துன்பத்தை அனு பவிக்கிறார்கள். இந்த ஊராட்சி மன்றத் தலைவருக்குத்தான் தீண்டாமை ஒழிப் பிற்கான ‘உத்தமர் காந்தி விருது’ தமிழக அரசால் இரண்டு முறை வழங்கப்பட் டுள்ளது.

2. கரியாம்பட்டி - கள்ளி மந்தயம் : சின்னப்பன் தேநீர் கடை, பெரியப்பன் தேநீர் கடை, அசோகன் தேநீர்  கடை, சிவா தேநீர் கடை, வீராச்சாமி தேநீர் கடை, சுரேஷ் தேநீர் கடை.

 இரட்டைக்குவளை, இரட்டை பெஞ்ச், இங்குள்ள மூன்று சலூன் கடைகளில் முடிவெட்டத் தடை. சுடுகாடு இரண்டு. காளியம்மன், விநாயகர் கோவில்களில் நுழைய அனுமதி இல்லை.

3. நாச்சியப்பன் கவுண்டன் வலசு - அம்பிளிக்கை - சுடுகாடு இரண்டு. மாரியம்மன், விநாயகர் கோவில்களில் நுழைய அனுமதி இல்லை. தலித்துகள் நடக்க பாதையே இல்லை.

4. சக்கம்பட்டி - அம்பிளிக்கை : நடராஜ் தேநீர் கடை, சின்ராஜ் தேநீர் கடை, கண்ணம்மாள் தேநீர் கடை, செல்லம் மாள் தேநீர் கடை. -  இரட்டைக்குவளை, இரட்டை பெஞ்ச், காளியம்மன், விநாயகர் கோவில்களில் நுழைய அனுமதி இல்லை. இங்குள்ள கலையரங்கில் தலித்துகள் அமர அனுமதி இல்லை.

5. வெரியப்பூர் : பூபதி நாயுடு தேநீர் கடை, கோபால் நாயுடு தேநீர் கடை, வரதராசன் நாயுடு தேநீர் கடை - இரட்டைக் குவளை, இரட்டை பெஞ்ச், ஈசுவரன் சலூனில் முடிவெட்ட தடை.

6. மூனூர் : தங்கவேல் தேநீர் கடை, சுப்பிர மணி தேநீர் கடை, கந்தசாமி தேநீர் கடை - இரட்டைக்குவளை, இரட்டை பெஞ்ச், பஸ் ஸ்டாப்பில் அமர அனுமதி இல்லை. காளியம்மன், விநாயகர் கோவில்களில் நுழைய அனுமதி இல்லை.

7. நாகப்பன்பட்டி : மாரியம்மன், பொடாரி யம்மன் கோவில்களில் நுழைய அனுமதி இல்லை.

8. அந்திக்கோம்பை : கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் தலித்துகள் (அருந்ததியர்கள்) என்பதால் பாயை விரித்து கீழே அமர்ந்து பணி புரிகிறார்கள்.

Pin It