கங்காதார் கெய்க்வார்டு என்பவர் மும்பையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவர். மத்திய தொழிற் சங்கத்தின் துணைத் தலைவர் ஆனாலும், நான்டிட் மாவட்டத்தில் பஜ்ரங் குடியிருப்பு என்ற பகுதியில் இவர் தனக்காக ஒரு வீடு கட்ட முடியவில்லை. காரணம், இவர் மார்க்சிஸ்டாக இருந்தாலும் பிறப்பால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர். மராட்டியத்திலுள்ள “தீண்டப்படாத” சாதியான ‘மங்ஸ்’ என்ற பிரிவைச் சார்ந்தவர். பஜ்ரங் குடியிருப்பில் இவருக்காக சொந்தமான குடியிருப்பு மனை ஒன்று உள்ளது. அதில் அரசு திட்டமான ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் ஜவகர்லால் நேரு, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் அனுமதி கிடைத்தது.

மாநகராட்சியும் அவரது மனையில் வீடு கட்ட தொடங்கியது. அப்போதுதான் குடியிருப்பின் அக்கம்பக்கத்து பார்ப்பனர்கள், சாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  வீடு கட்டும் வேலையும் நிறுத்தப்பட்டு விட்டது. கங்காதர் அப்பகுதியில் மதவெறி சக்திகளுக்கும், ஊழல் பெருச்சாளிகளுக்கும் எதிராக செயல்பட்டு வந்தார். தனக்கு இழைக்கப்படும் சாதி தீண்டாமை அவமதிப்பிலிருந்து காப்பாற்றிட தனது உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் அரசுக்கு மனுத் தாக்கல் செய்துள்ளார்

Pin It