1925-1938 ‘குடிஅரசு’ 27 தொகுப்பு களையும் சென்னையில் கீற்று இணைய தளம் நடத்திய கருத்தரங்கில் தோழர்கள் விரிவாக ஆய்வு செய்தனர். ‘பெரியாருடன் ஒரு பயணம்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வரங்கம் செப். 18 ஆம் நாள் மாலை 5 மணியளவில் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நிகழ்ந் தது. கீற்று ஆசிரியர் குழுவைச் சார்ந்த தோழர் பாஸ்கர் வரவேற்புரையாற்றினார். 

1925 முதல் 1926 வரை அடங்கிய தொகுப்புகளை ச. தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்); 1927 ஆம் ஆண்டிலிருந்து 1929 வரை எழுத்தாளர் ஓவியா; 1930-1932 வரை தோழர் கொளத்தூர் மணி, 1933-1935 வரை எழுத்தாளர் பூங்குழலி, 1936-1938 வரை பேராசிரியர் ஹாஜாகனி (பொதுச்செய லாளர், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்) ஆகியோர் ஆய்வு வழங்கினர். 

‘ரிவோல்ட்’ இதழ் தொகுப்பு நூல் குறித்து பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்.  நிறைவாக கொளத்தூர் மணி தொகுப்புரை வழங்கினார். ‘கீற்று’ ஆசிரியர் குழு சார்பாக பிரபாகரன் நன்றி கூறினார். உரையாற்றிய அனைவரும் ‘குடிஅரசு’ தொகுப்புகளை ஆழமாக படித்து, ஏராளமான செய்திகளை முன் வைத்தது, கருத்தரங்கின் சிறப்பாகும். பெரியார் பற்றிய துல்லியமான வரலாற்று செய்தி  களையும், அவரது சிந்தனைகளையும் இதற்கு முன் இதுபோல் விரிவாக விவாதிக்கப்பட்டதில்லை என்று கூறும் அளவில் கருத்தரங்கம் சிறப்பாக இருந்தது என்று கருத்தரங்கில் பங்கேற்ற பலரும் கூறினர். 

பெரியார் திராவிடர் கழகம், ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதன் நோக்கம், பெரியார் பற்றிய இத்தகைய பல்வேறு பரிமாணங்கள் விவாதத்துக்கு வர வேண்டும் என்பதுதான் என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார். இதே போன்று, பல்வேறு ஊர்களில் ‘பெரி யாருடன் பயணம்’ மேற்கொள்ள பலரும் கருத்து தெரிவித்தனர். பார்வையாளர் களாக ஏராளமான இளம் தலைமுறை யினர் வந்திருந்தது, கருத்தரங்கின் மற்றொரு சிறப்பாகும்.

Pin It