18.4.2010 அன்று த.மு.எ.க.சங்கத்தின் நாமக்கல் மாவட்டக் குழு, மாநிலக் குழு உறுப்பினரும், மாவட்டத் தலைவருமான கோ.தெய்வசிகாமணி தலைமையில் கூடியது. அதில் மாநிலக்குழு உறுப்பினரும், மாவட்டச் செயலருமான பா.ராமமூர்த்தி வேலை அறிக்கையினை சமர்ப்பித்தார்.
மாவட்டக் குழுவின் விவாதத்தில் கவிஞர் லீனா மணிமேகலை அவர்களின் இரு கவிதைகள் பற்றிய கருத்து வந்தது. மாவட்டக் குழுவினர் அனைவரும் இரு கவிதைகளையும் படித்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். கீழ்க்கண்ட தீர்மானத்தை மாவட்டக் குழு ஏகமனதாக நிறைவேற்றியது:-
கவிஞர் லீனா மணிமேகலையின் இரண்டு கவிதைகளும் மிகவும் தரம் குறைந்தும், உலக சமதர்ம சமூகம் அடைய பாடுபட்ட புரட்சியாளர்களையும் கம்யூனிஸ்டு தலைவர்களையும் மிகவும் தரம் குறைந்த பாலியல் வார்த்தைகளால் கேவலப்படுத்தி எழுதியிருப்பதும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ள்து.
த.மு.எ.க.சங்கம் இதுபோன்ற நச்சுக் கலை இலக்கியங்களுக்கும், ஆபாசத்திற்கும் எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. லீனாவின் கவிதைகள் மிகவும் கீழ்த்தரமான, ஆபாசமான அருவருக்கத்தக்க முறையில் மோசமான கடும் வார்த்தைகளைக் கொண்டு உலக பொதுவுடைமை தலைவர்களையும், புரட்சியாளர்களையும் இணைத்து எழுதியிருப்பதை இம்மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
அதற்காக கவிஞர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன் அக்கவிதைகளை திரும்ப்ப்பெற வேண்டும் எனவும் மாவட்டக் குழு கருதுகிறது.
- பா.ராமமூர்த்தி (மாவட்ட செயலாளர்)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்/கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச)-நாமக்கல் மாவட்ட குழு
அனுப்பியவர்: விமலா வித்யா, மாவட்ட பொருளாளர் (