Buddhaசைவம் 6ஆம் நூற்றாண்டில் வேதமதத்தில் இருந்து தோன்றிய ஒரு பிரிவு. எனவே புத்தர் சைவர் என்பது தவறு. அவர் வேத மதத்தவர். பின்னாளில் சாதியை மறுத்துரைத்தவர். பிராமணர்களுடைய வேள்வியில் விலங்குகள் ஆகுதி ஆக்கப்படுவதைக் கண்டித்தவர்.

கடவுள் இல்லை, இருந்தால் உலகம் இந்தளவு அலங்கோலமாக இருக்காது என வாதிட்டவர். கடவுள் உலகைப் படைத்தார் என்றால் கடவுளை யார் படைத்தார் என்ற கேள்வி எழும். புத்தர் ஆன்மா என்ற ஒரு பொருள் இருப்பதை மறுத்தவர்.

ஒவ்வொருவனும் தனது விடுதலையை தானே முயன்று பெற வேண்டும். மற்றவர்கள் உதவி செய்ய முடியாது. தான் ஒரு வழிகாட்டி, ஆசிரியர் என்று மட்டுமே பார்க்க வேண்டும் என்றார்.

- வேலுப்பிள்ளை தங்கவேலு

Comments

4 comments

4
குமரன்
சிறுபிள்ளைத்தனமான குறிப்பு
குமரன்
சிவன் கயிலையில் உறைகிறார் என்பது சைவர்களின் நம்பிக்கை இலங்கைக்கு பவுத்தம் வருவதற்கு முன் இருந்த அரசர்களின் பெயர் சிவன் என்று முடியும் எடுத்துக்காட்டாக மூத்தசிவன் இலங்கையில் மையத்தில் சிவனொளிபாத மலை என்றும் கரையோரங்களில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட சிவன் கோயில்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன இமயம் முதல் குமரி கண்டம் வரை வாழ்ந்த மூத்த தமிழ் குடிகளின் வாழ்வியல் நெறி தான் சைவம்
குமரன்
வேத மதம் என்பது நாகரீகத்தின் அடிப்படையில் பின்தங்கிய சமூக கூட்டம் தங்களுடன் கொண்டுவந்த வாழ்வியல் முறை ஒட்டகத்திற்கு இடம் கொடுத்தது போன்று சைவத்துக்கு உள்நுழைந்து பின்னர் தமிழை வெளியேற்றி தன்னை உள் நிறுத்திக்கொண்டது தமிழர்கள் ஏமாளிகள் ஆக்கப்பட்டனர் வேத மதத்திற்கு மொழி கிடையாது தமிழர்களது அறிவுச் செல்வத்தை களவாடி அதை எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம் பின்னர் தமிழ் மொழியிலுள்ள மூல நூல்கள் அனல்வாதம் புனல்வாதம் என்ற பெயரில் ஒழிக்கப்பட்டன தமிழர்களது மரபுசார் கோயில்களில் இன்றும் கூட விலங்குகள் பறவைகள் பலியிடப்பட்டு மக்கள் உண்கிறார்கள்
குமரன்
உயிர் என்ற பொருள் இல்லையாயின் உயிருள்ள உடம்பிற்கும் உயிரற்ற உடம்பிற்கும் என்ன வித்தியாசம்?
சைவத்தைப் பொருத்தளவில் கடவுளை அளவை இயல் மூலமாக நிறுவுகிறது சைவம் முப்பொருள் உண்மையை ஏற்றுக்கொள்கிறது ஒரு பானை செய்ய வேண்டுமாயின் அதற்கு மூலப்பொருள் மண் அதை செய்யும் சாதனம் சக்கரம் இவையிரண்டும் பானையை உருவாக்காது மூன்றாவது சக்தியான குயவன் தான் பானையை உருவாக்குகிறான் முதற் காரணி மண் துணைக் காரணி சக்கரம் நிமிர்த்த காரணி குயவன் இவ்வாறுதான் இறைவன் உலகை படைக்கின்றான் இறைவன் போலவே மாயையும் (மண்) என்றுமுள்ள பொருள்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.