27.10.2010 புதன் கிழமை மாலை 4 மணிக்கு திருச்சி தமிழ்நாடு ஹோட்டலில் திருச்சிராப்பள்ளி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் பெரியார் பெருந்தொண்டர் முத்துசெழியன், செ.த. இராசேந்திரன், தி.தாமரைக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வராக உள்ள பாக்கியராஜ் எனும் கிறிஸ்தவ ‘பாதிரியார்’ மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் திருச்சி மாவட்ட கழகத் தலைவர் செ.த.இராசேந்திரன் பங்கேற்றதை கழக மாவட்டக் கமிட்டி கண்டித்தது. செ.த. இராசேந்திரன், தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட கழகத்திற்கு கீழ்க்கண்ட தோழர்கள் புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

 •              மாவட்ட தலைவர் - எஸ்.எஸ்.முத்து; மாவட்ட செயலாளர் - வே.க. குமார்; மாவட்ட இணை செயலாளர் - த. புதி யவன்; பொருளாளர் - மு. மனோகரன்; மாவட்ட அமைப்பாளர் - மீ.இ. ஆரோக்கியசாமி.

 •              திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக வந்துள்ள பார்ப்பன மீனா, தான் பதவியேற்ற உடனேயே பல்கலைக்கழகத்தில் சிறப்பாக இயங்கி வந்த பெரியார் உயராய்வு மய்யம், பாரதிதாசன் உயராய்வு மையம் ஆகியவற்றின் செயல்பாடுகளை முடக்கிவிட்டார். அடுத்து பெண்ணியக் கல்விக்கென தமிழ்நாட்டளவில் சிறப்பாக இயங்கி வரும் மகளிர் துறையையும் முடக்குவதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார். பாரதிதாசனின் சிந்தனை களுக்கு எதிராக, தீபாவளி பண்டிகைக்கு, பாரதிதாசன் பெயராலே இயங்கும் பல்கலைக்கழகத்தின் சார்பாக செய்தி ஏடுகளில் தீபாவளி வாழ்த்து விளம்பரம் செய்துள்ளார். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு எதிராக தான்தோன்றிதனமாக செயல்பட்டு வரும், பார்ப்பன துணைவேந்தரை வன்மையாக கண்டிக்கிறோம். தலைமை கழகத்தின் அனுமதி பெற்று துணைவேந்தரை கண்டித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

 •              பெரியார் பெருந்தொண்டர் தோழர் இளந்தாடி துரையரசன், கழகத்தில் இணைந்ததை பாராட்டி வரவேற்கிறோம்.

 •              திருவரங்கம் காவல்நிலையத்திற்கு அருகிலுள்ள பெரியார் சிலை முன்பு, சிலையை முழுவதுமாக மறைத்து, காவல்துறையின் பழுதான வாகனத்தை தொடர்ந்து நிறுத்தி வைப்பதை கண்டிப்பதோடு, உடனடியாக அந்த வாகனத்தை அகற்றி, பொது மக்கள் பார்வைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. காவல்துறையை தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது.

Pin It