(1891-1964)
1990
இளமையில் பக்திக் கவிஞராக மலர்ந்து, தேசியக் கவிஞராக வளர்ந்து, சுயமரியாதை இயக்கத்தின் புரட்சிக் கவிஞராக முதிர்ந்து, மனித நேயக் கவிஞராக நிறைவு பெற்றவர். தமிழ் வளர்ச்சி, பெண் விடுதலை, சமுதாயச் சீர்திருத்தம், மடமை ஒழிப்பு, பொருளாதாரச் சமத்துவம் ஆகிய குறிக்கோள்களுக்குத் தம் எழுத்துகளால், ஓயாமல் குரல் கொடுத்தவர். 1929ஆம் ஆண்டிலேயே கருத்தடை பற்றிய சிந்தனைகளைக் கவிதையில் வடித்தவர். நல்ல குடும்பத்தைப் பல்கலைக் கழகம் என்றவர். தமிழால் பாரதிதாசனும், பாரதிதாசனால் தமிழும் பெருமை பெற்றன என்பது நாடறிந்த உண்மை.
பாரதிதாசன் பாடல்கள் காலவரிசை
1. 1920 மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு
2. 1925 மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம்
3. 1926 மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
4. 1930 கதர் இராட்டினப்பாட்டு
5. 1930 சிறுவர் சிறுமியர் தேசியகீதம்
6. 1930 தொண்டர் படைப்பாட்டு
7. 1930 தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு
8. 1930 சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
9. 1931 சுயமரியாதைச் சுடர்
10. 1937 புரட்சிக்கவி
11. 1938 பாரதிதாசன் கவிதைகள்
12. 1941 எதிர்பாராத முத்தம்
13. 1942 குடும்ப விளக்கு
14. 1942 இசையமுது
15. 1944 இருண்ட வீடு
16. 1944 அழகின் சிரிப்பு
17. 1944 காதல் நினைவுகள்
18. 1944 குடும்ப விளக்கு (இரண்டாம் பகுதி) - விருந்தோம்பல்
19. 1944 பாண்டியன் பரிசு
20. 1945 தமிழியக்கம்
21 1948 முல்லைக்காடு
22. 1948 காதலா? கடமையா?
23. 1948 இந்தி எதிர்ப்புப் பாட்டு
24. 1948 கடல் மேற் குமிழிகள்
25. 1948 குடும்ப விளக்கு மூன்றாம் பிரிவு, திருமணம்
26. 1948 அகத்தியன் விட்ட புதுக்கரடி (ஒரே தொகுப்பில்)
27. 1948 நல்ல முத்துக் கவிதை (ஒரே தொகுப்பில்)
28. 1948 திராவிடர் திருப்பாடல் (ஒரே தொகுப்பில்)
29. 1949 ஏற்றப்பாட்டு
30. 1949 பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி
31. 1949 தமிழச்சியின் கத்தி
32. 1949 பாரதிதாசன் ஆத்திச் சூடி
33. 1949 திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
34. 1950 குடும்ப விளக்கு நான்காம் பிரிவு - மக்கட்பேறு
35. 1950 குடும்ப விளக்கு ஐந்தாம் பிரிவு - முதியோர் காதல்
36. 1951 அமிழ்து எது?
37. 1952 பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் தொகுதி (இரண்டாம் பதிப்பு)
38. 1952 இசையமுது - இரண்டாம் பகுதி
39. 1954 பொங்கல் வாழ்த்துக் குவியல்
40. 1955 பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதி
41. 1956 தேனருவி
42. 1958 இளைஞர் இலக்கியம்
43. 1959 குறிஞ்சித் திட்டு
44. 1962 கண்ணகி புரட்சிக் காப்பியம்
45. 1962 மணிமேகலை வெண்பா
46. 1964 பாரதிதாசன் பன்மணித்திரள்
47. 1977 காதல் பாடல்கள்
48. 1977 குயில் பாடல்கள்
49. 1977 பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி
50. 1978 தேனருவி (38 பாடல்கள்)
51. 1978 ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
52. 1978 தமிழுக்கு அமுதென்று பேர்
53. 1978 புகழ் மலர்கள்
54. 1978 நாள் மலர்கள்
55. 1978 வேங்கையே எழுக
56. 1980 பாரதிதாசன் ஆத்தி சூடி + பொங்கல் வாழ்த்துக்குவியல் + இளையோர் ஆத்தி சூடி
57. 1982 பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள் + புதிய பாடல்கள் 17)
பாடுபொருள் அடிப்படையில் பூம்புகார் பதிப்பகம் பகுத்தும், தொகுத்தும் வெளியிட்டவை
1. 1992 பாரதிதாசன் கவிதைகள் - உயர்ந்தோர் (+ ஓரு புதிய பாடல்)
2. 1992 இயற்கை
3. 1992 தமிழ் (+ ஒரு புதிய பாடல்)
4. 1992 சிறுகாப்பியங்கள்
5. 1992 இளைஞர் இலக்கியம் 1
6. 1992 சமுதாயம் (+ இரண்டு புதிய பாடல்கள்)
7. 1994 இளைஞர் இலக்கியம் 2
8. 1994 பொங்கல் வாழ்த்து இலக்கியம் (+ ஆறு புதிய பாடல்கள்)
9. 1994 காதல் (+ இரண்டு புதிய பாடல்கள்)
குறிப்பிடத்தக்க பிற தொகுப்புகள்
1. 1993 பாரதிதாசன் கவிதைகள்
(பாவேந்தர் பாடல்களின் முழுத் தொகுப்பு), ஆ. திருவாசகன், சுரதா கல்லாடன் (தொ.ஆ.)
2. 1994 உலகம் உன் உயிர் (தலையங்க கவிதைகள் (+ நான்கு புதிய கவிதைகள்), ச.சு. இளங்கோ (ப.ஆ.)
3. 1995 பாரதிதாசன் வண்ணப்பாடல்கள் (+ நான்கு புதிய பாடல்கள் ய. மணிகண்டன், (தொ.ப.)
4. 2000 பாரதிதாசன் திரைப்பாடல்கள், வாமனன் (தொ.ஆ.) பிறர் படைப்புகளுடன்
பாரதிதாசன் கவிதைகளும் சேர்க்கப்பட்டு வெளிவந்த நூல்கள்
1. 1937 இந்தி எதிர்ப்புப் பாடல்கள், குடிஅரசுப் பதிப்பகம், ஈரோடு
2. 1945 எது இசை? கமலா பிரசுராலயம், சென்னை
3. 1946 தன்மானத் தாலாட்டு, ஸ்ரீ இலக்ஷ்மி நூல் பதிப்பகம், திருவத்திபுரம் வ.ஆ.
4. 1948 மகாகவி பாரதியார், ஞாயிறு நூற் பதிப்பகம், புதுச்சேரி
இவற்றில் இடம் பெற்ற பாரதிதாசன் பாடல்கள் வேறு கவிதைத் தொகுப்புகளில் சேர்க்கப்பெற்றுள்ளன.
முன்னர் வேறு நூல்களில் இடம்பெற்ற பாடல்களே தெரிவு செய்து தொகுக்கப்பட்டு வேறு பெயரில் வெளிவந்த நூல்கள்
1. 1942 காதற்பாட்டு
2. 1958 தாயின்மேல் ஆணை
3. 1993 தமிழ் உணர்ச்சி
இத்தகைய தொகுப்பு நூல்கள் பல வெளிவந்துள்ளன.
பாரதிதாசன் நாடகங்கள் - காலவரிசை
நூல் வடிவில் வெளி வந்தவை
1. 1939 இரணியன் அல்லது இணையற்ற வீரன்
2. 1944 நல்ல தீர்ப்பு
3. 1944 கற்கண்டு
4. 1944 பொறுமை கடலினும் பெரிது (ஒரே தொகுப்பில்)
5. 1946 அமைதி
6. 1947 சௌமியன்
7. 1948 படித்த பெண்கள்
8. 1949 சேரதாண்டவம்
9. 1950 இன்பக்கடல் (ஒரே தொகுப்பில்)
10. 1950 சத்திமுத்தப் புலவர் (ஒரே தொகுப்பில்)
11. 1951 கழைக்கூத்தியின் காதல்
12. 1959 பாரதிதாசனின் நாடகங்கள்
(அ.) கற்கண்டு
(ஆ.) பொறுமை கடலினும் பெரிது
(இ.) இன்பக்கடல்
(ஈ.) சத்திமுத்தப் புலவர்
13. 1967 பிசிராந்தையார்
14. 1978 தலைமலை கண்ட தேவர்
(அ.) தலைமலைகண்ட தேவர்
(ஆ.) கழைக் கூத்தியின் காதல் (1951)
(இ.) குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும்
(ஈ.) ஆரிய பத்தினி மாரிஷை
(உ.) ரஸ்புடீன்
(ஊ.) அம்மைச்சி
(எ.) வஞ்சவிழா
(ஏ.) விகடக் கோர்ட்
15. 1980 கோயில் இரு கோணங்கள்
(அ.) கோயில் இரு கோணங்கள்
(ஆ.) சமணமும் சைவமும்
(இ.) மூளை வைத்தியம்
(ஈ.) குலத்தில் குரங்கு
(உ.) மருத்துவர் வீட்டில் அமைச்சர்
(ஊ.) ஆரிய பத்தினி மாரிஷை (தலைமலை கண்ட தேவர் நூலிலும்)
(எ.) முத்துப் பையன் (குழந்தை நாடகம்)
(ஏ.) மேனி கொப்பளித்ததோ?
16. 1992 குமர குருபரர் நாடகம் (1944 - திரைப்படத்திற்காக எழுதியது)
17. 1994 பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
(க.) அச்சு வடிவம் பெறாமலிருந்த நாடகங்கள்
(அ.) இசைக்கலை ( யசோதர காவியம்)
(ஆ.) பறவைக்கூடு மி & II (சைகோன் பின்னணி)
(இ.) மக்கள் சொத்து (கதை வடிவினது)
(உ.) நூல் வடிவம் பெறாமலிருந்த நாடகங்கள்
(அ.) ஐயர் வாக்குப் பலித்தது
(ஆ.) கொய்யாக்கனிகள் (கவிதை நாடகம் - முற்றுப் பெறாதது)
(இ.) சங்கீத வித்வானோடு
(ஈ.) ஆக்கம்.
(உ.) வினை
18. 2003 போர்க்காதல்
(அ.) போர்க்காதல்
(ஆ.) கொய்யாக்கனிகள் (முற்றுப் பெற்றது)
(இ.) படித்த பெண்கள்
(ஈ.) ஆனந்த சாகரம்
2. நாடகப் பாங்கின
காவியம் சிறு காப்பியம் எனும் தலைப்புகளில் தொகுதிகளில் இடம் பெற்றவை
19. 1937 புரட்சிக்கவி (1944 - சிறு மாற்றங்களுடன் நாடகமாக நடத்தப்பெற்றது)
20. வீரத்தாய் (1935 - நெட்டப்பாக்கம் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் நடிப்பதற்கு முதலில் நாடகமாக எழுதப்பட்டது.
1938 பாவேந்தரின் மூத்த மகள் வீரத்தாயாகவும் மகன் சுதர்மனாகவும் நடிக்க நடத்தப்பெற்றது.
21. 1949 ஒன்பது சுவை
22. 1949 போர் மறவன்
23. 1949 காதல் வாழ்வு
V. பெயரளவில் நாடகம் எனக் குறிக்கப்பெற்றவை - நாடக வடிவில் நூல்களாக வெளிவராதவை
1. தமிழச்சியின் கத்தி (1937)
2. பாண்டியன் பரிசு (1940)
3. கருஞ்சிறுத்தை (1949)
பாரதிதாசனின் பிற உரைநடை ஆக்கங்கள்
மி. கட்டுரைகள்
1. 1980 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? (சொல்லாய்வுகள்)
2. 1980 பாட்டுக்கு இலக்கணம்
3. 1983 மானுடம் போற்று
4. 1992 பாரதியாரோடு பத்தாண்டுகள் (+ பொழிவுகள், கவிதைகள்)
5. 1994 உலகுக்கோர், ஐந்தொழுக்கம் (தலையங்கக் கட்டுரைகள்)
6. 1996 இலக்கியக் கோலங்கள் (பாடல் விளக்கக் குறிப்புகள், செய்திகள்)
II. உரை
1. 1992 பாரதிதாசன் திருக்குறள் உரை: டாக்டர் ச.சு. இளங்கோ (ஆ.ப.)
2. 1994 பாவேந்தர் பார்வையில் வள்ளுவம் - திருக்குறள் உரை: முனைவர் நா. செங்கமலத்தாயார் (தொ.ஆ.)
III. புனை கதைகள்
1. 1955 பாரதிதாசன் கவிதைகள் (+ கட்டுரைகள், கிண்டல் துணுக்குகள்)
2. 1980 ஏழைகள் சிரிக்கிறார்கள் (நீக்கம் + புதிய கதைகள்) ச.சு. இளங்கோ (தொ.ஆ.)
3. 1994 பாரதிதாசன் சிறுகதைகள் (நீக்கம் + புதிய கதைகள்) மு. சாயபுமரைக்காயர் (தொ.ஆ.)
4. 1994 பாரதிதாசன் புதினங்கள்
அ. அன்னை
ஆ. விஞ்ஞானி
இ. அனைவரும் உறவினர்
ஈ. பக்த ஜெயதேவர்
உ. குமரகுருபரர்
ஊ. எதிர்பாராத முத்தம்
எ. ஆத்மசக்தி
ஏ. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை
ஐ. ஆலஞ்சாலையும் வேலஞ் சேரியும்
IV. கிண்டல் துணுக்குகள்
1981 சிரிக்கும் சிந்தனைகள்
V. வினாவிடைகள்
1981 கேட்டலும் கிளத்தலும்
VI. திரைக்கதை உரையாடல்கள்
1. 1940 காளமேகம்
2. 1945 ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
3. 1946 சுபத்ரா
4. 1947 சுலோசனா
5. 1950 பொன்முடி
6. 1952 வளையாபதி
7. 1964 மகாகவி பாரதியார் வரலாறு
சொற்பொழிவுகள்
1. 1947 கவிஞர் பேசுகிறார்
2. 1950 முத்தமிழ் + (பிறர் பொழிவுகள்)
3. 1954 தமிழ் இன்பம்
4. 1980 பாரதிதாசன் பேசுகிறார் + (புதிய பொழிவுகள்)