எனக்கு யதார்த்தம் பிடித்திருக்கிறது. பாலிவுட் படங்களைப் பார்க்கும்போது அவை பொருத்தமாக இல்லை என்று தோன்றுகிறது. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு தினசரி செய்தியும் பொழுது போக்கு அம்சங்களாய் வெளிப்படுவது குறித்து விமர்சனம் உண்டு. புகழ் பெற்றவர்கள் பற்றின விஷயங்களாய் அகோர பசியில் உள்ள பொதுமக்களுக்கு வாரி வழங்கப்படுகிறது. அமிதாப் பச்சனுக்கு இன்று இருமல் என்று முக்ய செய்தி போல பல செய்திகள் பொது வெகுஜன ஊடகத்தில் எவ்வித அக்கறையுமின்றி முன்வைக்கப்படுவது வெகுஜன ஊடகங்களின் முக்கியப் பிரச்னையாகிறது. லிட்டில் ஜீஜியு என்ற முதல் முயற்சியின் இயக்குனர் சோனி தரபேரோவாலா இவ்வாறு சொல்கிறார்.

லிட்டில் ஜீஜியு பற்றி : யாரை விடவும் இதை சிறப்பாக நான் இயக்க முடியும் என்று நினைத்தேன். நான் அறிந்த உலகத்தைப் பற்றின படம். தீவிரமான பிரச்னையை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறேன். சமூகப் பிரச்னைகளை வெகு சிக்கலாக ஒருவர் சொல்ல வேண்டிய அவசியமில்லை. 11 வயது பார்ஸி இனப் பையனைப் பற்றியும் அவளின் சிக்கல்கள் பற்றியும் நகைச்சுவையுடன் சொல்லப்பட்டதாகும் இது. இரண்டு பார்சி குடும்பங்களைப் பற்றின எள்ளல் தன்மை கொண்டதாகும் இது. அழிந்து விடும் என்ற பயத்தின் விளிம்பில் இருக்கும் பார்ஸி இனத்தின் பின்னணியில் இது சொல்லப்பட்டிருக்கிறது. எனக்காக நானே எழுதின கதை இது. எனவே இதை இயக்க எனக்குத் தேவையிருந்தது.

திரைப்படத்தைக் கற்றுக் கொள்வது : திரைக்கதை எழுதுவது பற்றி நான் கற்றிருந்தால் திரைக்கதையாளராகி இருக்க மாட்டேன். ஆனால் எனது திரைப்படக் கல்வி பயிற்சி உதவியது. எழுதுவதை நான் வேலையாகக் கற்றுக் கொண்டேன். பார்முலாவுக்குள் மாட்டிக்கொள்ளாதபடி வென்றிருக்கிறேன். திரைப்படத்தைக் கற்றுக் கொள்வதென்பது நல்ல திரைப்படங்களைப் பார்க்க, அவற்றைப் பற்றி நினைக்க அவற்றை பரிசீலிக்க...

நல்ல திரைப்படம் : இது மையத்தை கவனம் கொண்டது. ஒரு நல்ல திரைப்படம் நல்ல புகைப்படம் போல, நேர்த்தியானது. உருவத்திற்கும் செயல்பாட்டிற்குமான இணைந்த பாலம்.

புத்தகங்களை திரைப்படங்களாக்குவது : நான் இலக்கியம் படித்தவள். இலக்கியத்தைத் தழுவி திரைப்படங்களாக்க விரும்புகிறேன். எழுத்தாளனாய் இலக்கியப் படைப்பில் அக்கறை கொண்டு தீவிர உழைப்பு செலுத்தப்பட்டிருக்கிறது. எழுத்தாளனுக்காக நானும் உட்படுத்திக் கொள்கிறேன். ஒரு ஊடகத்திலிருந்து இன்னொரு ஊடகத்திற்கு எழுத்தாளனை மொழிபெயர்க்கிறேன். இது கவிதை உருவாக்கம் போல. சிக்கனமாயும் ஜாக்கிரதையாகவுமானது. தவற முடியாதபடி செதுக்கப்பட வேண்டியது. எழுத்தாளர்களுக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் இடை யிலான கருத்து வேறுபாடுகள் பற்றி சொல்கையில் எழுத்தாளர்கள் இதை இயல்பானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களை ஒருவருக்கொருவர் வெற்றி கொள்ளும் வகையிலானது. திரைப் படம் நன்கு அமையுமானால் அதிகமானோர் புத்தகத்தை வாங்குவர். திரைப்படம் மோசமானதாக இருந்தால் புத்தகம் மேன்மையானது என்று சொல்வர். எப்படியும் வெளிச்சம் எழுத்தாளர் மீதுதான்.

அம்பேத்கர் படம் பற்றி : அம்பேத்கர் படம் சர்ச்சையில் மாட்டியுள்ளது. யாரும் அந்தப் படத்தைப் பார்க்கவில்லை. அதில் எனது ஒன்பது ஆண்டு வாழ்க்கையை செலவழித்திருக்கிறேன். பம்பாய் பார்சி குடும்பத்தைச் சார்ந்தவள் என்ற வகையில் அப்படத்தின் எழுத்து என்பது எனக்குச் சவாலானது. ஆனால் நீங்கள் ஆராய்ச்சி செய்தால், வீட்டில் உட்கார்ந்து தயாரித்தால், யாரும் எதைப்பற்றியும் எழுதிவிட முடியும். தலித் பிரச்னைகளில் நான் அடைந்த கோபம் என்பது அதிலிருந்து நான் பெற்றதாகும். அம்பேத்கரே எதைக்கடந்து சென்றாரோ அதை நான் உணர்ந்திருக்கிறேன். பார்வையாளர்களிடமிருந்து அந்த போராட்ட உணர்வை பெற விரும்புகிறேன். ஆனால் அந்தப் படம் மறைந்துவிட்டது. சந்தையில் டிவிடிகளும் இல்லை. நான் சில சமயங்களில் இந்த காணாமல் போனது அரசியல் நோக்கமுடையதா என்று ஆச்சர்யப்படுகிறேன்.

திரும்பிப் பார்க்கையில் : எனது இதயத்திலிருந்து படங்களை உருவாக்குகிறேன். படங்களிலும், நான் செய்யும் எல்லாவற்றிலும் சில சமூகப் பிரச்னைகள் உள்ளார்ந்து இருக்கின்றன. காரணம் திரைப்படம் என்பது வெகுஜன ஊடகமாக ஒருவர் கூர்மையாகவும், தீவிர அக்கறையுடனும் பார்க்க வேண்டும். பிறகு சூழ்நிலைகளை மற்றும் வழிகளை தன்னகத்தே கொண்டிருக்கும். மனதி நேயத்தின் அரசியல், அன்பை போதிக்கும் மனிதாபிமானம், சரியான நடைமுறை, சக மனிதர்களை முறையாக நடத்துவது, நீதி பற்றியெல்லாம் அவற்றில் முன் வைக்கிறேன்.
Pin It