தொடர்புடைய படைப்புகள்

ambedkar periyarஉயர்திரு. W.P.A. சௌந்திரபாண்டியன், எம்.எல்.சி. அவர்கள் “இராமனாதபுரம் ஜில்லா தேவகோட்டை முதலிய சுற்றுப்பக்கங்களிலுள்ள ஆதி திராவிடர்கள் என்பவர்களை அங்குள்ள உயர்ந்த ஜாதியார்களென்பவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தி வருவதால் அரசாங்கத்தார். அதை விசாரித்து உண்மை அறிந்து அதன்மேல் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள ஒரு கமிட்டி நியமிக்க வேண்டு” மென்று சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசாங்க இந்திய அங்கத்தினரும் பார்ப்பன சட்டசபை அங்கத்தினர்களும் எதிர்த்தும், மந்திரிகள் விரோதமாய் ஓட்டுக் கொடுத்தும் தீர்மானம் நிறைவேறியது குறித்து மகிழ்வெய்துகின்றோம். ஆயினும் சர்க்காரார் அத்தீர்மானத்தை மதித்து ஒரு சரியான கமிட்டி நியமிக்கக் கவலையெடுத்து கொள்வார்களோ, அல்லது தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்களோ என்பது சந்தேகமேயாகும். எனினும் திரு.பாண்டியன் அவர்களின் இம் முயற்சி போற்றத்தக்கதேயாகும்.

(குடி அரசு - செய்திக் குறிப்பு - 23.08.1931)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.