periyar 314உயர் திரு காந்தியவர்களை ஒரு தென்னாட்டுப் பார்ப்பனர் ஒருவர் தீண்டாமையைப் பற்றி சந்தேகம் தெரிவிக்குமாறு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு பதிலாக திரு. காந்தி எழுதி இருப்பதில் காணும் குறிப்பாவது,

தீண்டாமை விஷயமான காங்கிரஸ் தீர்மானங்கள் இன்னும் அரசியல் திட்டத்தில் ஒன்றாக நிருவப்படவில்லை. (அதாவது நான் சொல்லுவதுதானே ஒழிய இன்னமும், அரசியல் கொள்கையாக ஒப்புக் கொள்ளவில்லை. ப-ர்) அப்படி நிறுவப்பட்டாலும் நீதிஸ்தலங்கள் (அதாவது கோர்ட்டுகள்) இவற்றை கவனித்துக் கொள்ளும். வேதங்களினுடையவும் சாஸ்திரங்களினுடையவும் கட்டளைகளை புறக்கணிக்கப்பட மாட்டாது. (அதாவது அவைகளுக்கு விறோதமாக ஒன்றும் செய்யப்பட மாட்டாது. ப-ர்) காங்கிரஸ் அமைப்பு போதுமான அளவு விரிவுள்ளதாகவே இருக்கின்றது. (அதாவது எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் செய்து கொள்ள தகுதியாகவே இருக்கின்றது. ப-ர் )

(குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 21.06.1931)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.