தொடர்புடைய படைப்புகள்

periyar 307டாக்டர் சுப்பராயன் ஜாதிகளை சிருஷ்டிக்கும் வேலையில் மிகுதியும் ஈடுபட்டு வருகிறார்போல் தெரிய வருகின்றது.

சென்ற வாரம் பார்ப்பனரல்லாதார் என்பதாகப் பிரித்து விஸ்வப் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், தீண்டாதார், தாழ்த்தப்பட்டவர் என்பதாக பல ஜாதிகளை சிருஷ்டித்தார் என்பதாக எழுதி அவற்றைக் கண்டித்து ஒரு இறுதிக் கடிதமும் எழுதினோம்.

இந்த வாரம் கிருஸ்தவ ஆதித் திராவிடர் என்று ஒரு புதிய ஜாதியை சிருஷ்டித்திருக்கின்றார். இந்து என்கிற ஒரு இல்லாத மதக்காரர்களைப் பிடித்த சனியன் கிருஸ்தவ மதக்காரரையும் தொத்திக் கொண்டுவிட்டதாகக் காண்கின்றது. இனி இந்த பாழும் இந்து மதம் என்னும் பொய் மான் இனியும் எந்த எந்த மக்களைப் பிடித்து ஆட்டுமோ தெரியவில்லை.

கொஞ்சமும் தாக்ஷண்யம் பாராமல் இந்து மதம் என்னும் பேதமையை அடியோடு வெட்டிப் புதைத்தாலொழிய நமது நாட்டில் வைப்பாட்டி மக்களையும் தீண்டாதார்களையும் கீழ் ஜாதியார்களையும் உற்பத்தி பண்ணிக் கொண்டே போகும் வேலை நிற்கவே நிற்காது என்றே நினைக்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 06.11.1927)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.