நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகில் வெலிங்டனில் இயங்கி வருகின்ற இந்திய இராணுவப் பயிற்சி மையத்தில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளிக்கப்பட்டு வந்த செய்தி அறிந்த தமிழ் அமைப்புகள் கொந்தளித்துப் போயுள்ளன.
நாம் தமிழர், பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் இராணுவப் பயிற்சி மையத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஈழத் தமிழர் இனப்படுகொலை, தமிழக மீனவர்கள் மீதான வெறித்தாக்குதல் போன்ற தமிழின விரோத செயல்களில் ஈடுபட்ட - ஈடுபட்டு வரும் இலங்கை அரசு படைகளுக்கு இந்தியாவில், அதுவும் தமிழகத் தில் இராணுவப் பயிற்சி என்பது, இந்திய அரசும் தமிழர் விரோதப் போக்கில் இலங்கைக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதை வெளிப்ப டுத்துவதாகவே உள்ளது.
தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து மெத்தனம் காட்டி வரும் மத்திய அரசு - இலங்கை இராணுவத்தி னருக்கு அளித்திருக்கும் பயிற்சிக்கான அனுமதி தமிழ் மக்களை காயப்படுத் துவதாகவே உள்ளது.
சில வாரங்களுக்கு முன் இந்திய - இலங்கை இரா ணுவத் தளபதிகள் சந்தித் துக் கொண்ட நிகழ்வு நடந்தது. அதில், இலங்கை படையினருக்கு திறன் மேம்பாடு, தீவிரவாதிக ளுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் பயிற்சியளிக்க, ஏற்கெனவே இந்திய இராணுவப் பயிற்சி மையங்களில் ஒதுக்கப் பட்டுள்ள இடங்களின் எண்ணிக் கையை கூடுதலாக்கும் திட்டங்கள் குறித்து பேசப்பட்டிருக்கிறது.
போர்க் குற்றங்களில் ஈடுபட்ட வர்கள் என்று இலங்கை அரசப் படை மீது ஐக்கிய நாடுகள் சபை யும், சர்வதேச சமூகமும் குற்றம் சாட்டி வரும் நிலையில், இலங்கை யில் நடந்த இனப்படுகொலைக் காட்சிகளை "ஹெட்லைன்ஸ் டுடே' தொலைக்காட்சி திரும்பத் திரும்ப ஒளிபரப்பி - தமிழ் மக் களின் உள்ளங்கள் காயப்பட்டி ருக்கும் நிலையில், அந்தப் படைக ளுக்கு தமிழகத்தில் பயிற்சியளிக் கும் ஐந்தாம்படை வேலையை துணிச்சலுடன் செய்திருக்கிறது இந்திய அரசு.
இன்னும் சொல்லப் போனால் இலங்கையில் பயங்கரவாதம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், விடுதலைப் புலி கள் இலங்கையில் அழித்து ஒழிக்கப்பட்டு விட்டார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவே அறிவித்து வரும் நிலையில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க வேண்டிய அவசி யம்தான் என்ன?
இலங்கையைவிட பாகிஸ்தானின் எல்லைப்புறத்தி லும், அதன் உட்பகுதியிலும் பயங் கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக் குதல்களை நடத்தி அங்குள்ள பொது மக்களையெல்லாம் கொன்று குவிக்கிறார்கள். அவர்க ளைச் சமாளிக்க பாக் இராணுவம் திணறித்தான் வருகி து. அதனால் பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பயிற்சியளிக்க இந்திய இராணுவம் முன் வருமா? வராது!
ஆக, தமிழின விரோதிகள் தமக்கு நண்பர்கள் என்ற நிலைப் பாட்டிலல்லவா இருக்கிறது இந்திய அரசு.
வெலிங்டன் பயிற்சி எதற்காக? தமிழக மீனவர்களை எப்படி யெல்லாம் நூதன முறையில் சாகடிக்கலாம் என்பதற்கான பயிற்சியா?
தமிழர்களின் உணர்வுகளை தொடர்ந்து காயப்படுத்தி வரும் மத்திய காங்கிரஸ் அரசு அரசி யல் ரீதியாக தமிழகத்தில் தனி மைப்படுத்தப்படும் பயிற்சியை தமிழக மக்கள் மேற்கொள்வார் கள் என மத்திய காங்கிரஸ் அர சுக்கு எச்சரிக்கையாகவே சொல் லிக் கொள்கிறோம்.
திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை இராணுவம்
தமிழ் அமைப்புகள் எதிர்ப்புக் காட்டத் துவங்கியவுடன் வெலிங்டன் இராணுவப் பயிற்சி மையத்திலிருந்து இலங்கை இராணுவத்தினரை பாதுகாப்பாக பெங்களூருக்கு அனுப்பி வைத்து, பெங்களூர் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைத்திருக்கிறது மத்திய அரசு. இனி தமிழகம் தவிர்த்த வேறு மாநிலங்களில் இலங்கை இரா ணுவத்திற்கு பயிற்சியளிக்க இந்தியா முன் வரும் என எதிர்பார்க்கலாம்.