விசேடப் பிரதிநிதித்துவ முறையின் சமத்துவமின்மையைப் பற்றி மாண்டேகுசெம்ஸ்போர்ட் அறிக்கையும் சைமன் கமிஷனும் வெளியிட்ட கருத்துக்கள்

163. தேர்தலில் முக்கியமான சிறுபான்மையினர் பிரதி நிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறப்படுகிறது. முகமதியர்களுக்கு மட்டுமே பின்னால் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு திட்டத்தை இது குறிப்பதாகத் தோன்றுகிறது; பொதுத் தொகுதியிலும் அத்துடன் அவர்களது தனி (விசேஷ)த் தொகுதியிலும் வாக்களிக்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

ambedkar 408மற்ற சில சமுதாயத்தினருக்கும், அதாவது சீக்கியர் போன்றவர்களுக்கு முகமதியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை வழங்க மறுப்பதிலுள்ள கஷ்டத்தைப் பற்றி பிரிதோரிடத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இந்தத் திட்டத்தைத் தயாரித்தவர்கள், பல்வேறு மாகாணங்களிலும் முஸ்லீம் வாக்காளர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டிய விசேஷ தொகுதிகள் பற்றியும் ஒப்புக் கொண்டுள்ளனர், விவாதங்களைத் தவிர, இந்த எண்ணிக்கைகள் எந்த அடிப்படையில் வகுக்கப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியாது.

எல்லா மாகாணங்களில், முகமதியர்கள் பெரும்பாலோராக உள்ள மாகாணங்களிலும், கூட, தனித் தொகுதிகள் முன்வைக்கப்பட்டன, எங்கெல்லாம் எண்ணிக்கை யில் அவர்கள் பலம் குன்றியிருக்கிறார்களோ, அங்கு யோசனை கூறப்பட்ட விகிதாச்சாரம் அவர்களின் எண்ணிக் கைக்கும் இன்றையப் பிரதிநிதித்துவத்திற்கும் அதிகமாகவே உள்ளது.

அதேசமயம், எங்ககளுக்கு எழுதியுள்ள அநேகமாக எல்லா முகமதியர்களின் அமைப்புகளும் அது மேலும் அதிகப்படுத்தப்பட வேண்டுமென்று எங்களை வலியுறுத்தியுள்ளன. இத்தகைய விசேஷ சலுகை ஆட்சேபனைக்கு உட்படும்; இனி வேறு எந்த சமூகத்தினராவது தனிப்பிரதிநிதித் துவம் வேண்டுமென்று உரிமை கோரினால், முகமதியர்கள் அல்லாதவர்களின் தொகுதிகளைக் குறைப்பதம் மூலமே திருப்தி செய்ய முடியும்; அல்லது முஸ்லீம்களுக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுக்குமான தொகுதிகளை விகிதாச்சார அடிப்படையில் குறைக்க வேண்டும்; எத்தகைய முறையைக்கையாள வேண்டுமென்பதில் இந்து, முஸ்லிம் கருத்துகளில் ஒருமைப்பாடு வராமல் போகும் வாய்ப்புண்டு. 

எனவே, கீழே நாங்கள் விளக்கியுள்ள காரணங்களுக்காக, முகமதியர்களுக்கு தனிப்பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ப தற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கும் அதே சமயத்தில் எங்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள், மற்ற நலன்கள் மீது என்ன பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்பதை கண்டறியும்வரை, எங்கள் அங்கீகாரத்தை ஒத்திவைக்கிறோம், அவர்களுக்கும் நியாயமான முறையில் ஒதுக்கீட்டிற்கான ஏற்பாட்டையும் செய்துள்ளோம். தங்கள் சொந்த விசேஷத் தொகுதியிலும், அதே சமயம் பொதுத் தொகுதியிலும் முகமதியர்கள் வாக்காளர்களாக இருக்கக்கூடாது என்ற திட்டத்தை வகுத்தவர்களுடன் நாங்கள் உடன்படுகிறோம்; இது சம்பந்தமாக இன்றுள்ள ஏற்பாடுகளை மாற்ற முஸ்லீம் லீக் ஒப்புக்கொண்டதை நாங்கள் வரவேற்கிறோம்.”

2

இந்திய சட்டக் கமிஷன் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி, தொகுதி II

* * *

முகமதியர்களுக்கான இடங்களின் எண்ணிக்கை

பத்தி 85. பல்வேறு மாகாணங்களின் சட்ட மேலவைகளில் முகமதியர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் விகிதாசாரப் பிரச்சினை பற்றி இப்போது பார்ப்போம்.

நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியதுபோல் ஒவ்வொரு மாகாணத்திலும் முகமதிய சமூகத்துக்கு ஒதுக்கப்படும் இடங்களின் விகிதாசாரம் பற்றி இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே ஏற்பட்ட ஓர் உடன்பாடு லக்னோ ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தது; இப்போதைய மாகாண சட்டமன்றங்களில் இந்த உடன்பாட்டின்படி முகமதியர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

ஆனால் பிரதி நிதித்துவப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான அடிப்படையாக லக்னோ ஒப்பந்தம் இருதரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இரு தரப்புகளும் பரஸ்பரம் முன்வைத்த வாதங்கள் 70ஆம் பத்தியில் தரப்பட்டிருக்கின்றன. இரு தரப்புகளும் புதிதாக ஓர் உடன்பாட்டுக்கு வருவதற்கு முயற்சிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இத்தகைய உடன்பாடு ஏற்பாடத நிலைமையில், தனித்தொகுதி முறை நீடிக்கிறது என்ற அனுமானத்தின் அடிப்படையில் இது விஷயத்தில் மற்றவர்கள் ஏதேனும் உடன்பாடு காண வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

மொத்தம் எட்டு மாகாணங்களில் (பர்மா பிரச்சினை இங்கு எழவில்லை) ஆறில் முஸ்லீம் சிறுபான்மையினர் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதைக் கருத்திற் கொண்டு பார்க்கும்போது, இந்த மாகாணங்களில் முகமதியர்களுக்கு இப்போது அளிக்கப்பட்டு வரும் விசேடப் பிரதி நிதித்துவம் தொடர்வதே சிலாக்கியம் என்று நமக்குத் தோன்றுகிறது.

“பொதுத்” தொகுதிகளிலிருந்து (ஐரோப்பியர்களுக்கான பொதுத் தொகுதிகள் நீங்கலாக) அவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங் களின் விகிதாசாரம் இப்போதிருப்பது போன்று நிர்ணயிக்கப்படும். ஆனால் முகமதியர்களுக்கு இதைவிட அதிகப் பிரதிநிதித் துவம் அளிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை (மேலே உள்ள பத்தி 70 ஐயும் இந்த இயலின் இறுதியிலுள்ள அட்டவணை VII ஐயும் பார்க்க) முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆறு மாகாணங்களில் இப்போது முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் முழு அளவுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், வங்காளத்திலும் பஞ்சாபிலும் தனி வாக்காளர் தொகுதிகள் மூலம் தற்போது அளிக்கப்படும் பிரதிநிதித்துவ முறைக்குப் பதிலாக தங்களது மக்கட் தொகை விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இது இவ்விரு மாகாணங்களிலும் முகமதியர்களுக்கு ஒரு நிலையான, மாற்றமுடியாத பெரும்பான்மையை அளிக்கும். இதற்கு மேல் நாங்கள் செல்ல முடியாது.

ஆறு மாகாணங்களிலும் அவர்களுக்கு விசேடப் பிரதிநிதித்துவம் தொடரும் அதேசமயம் பஞ்சாபிலும் வங்காளத்திலும் இப்போது பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையிலிருந்து விலகிச் செல்லுவது சாத்தியமல்ல. இவ்வாறு முகமதியர்கள் கோருவது நியாயமல்ல. ஏனென்றால் இதன் மூலம் அவர்கள் இப்போது அனுபவித்துவரும் சலுகை தொடர்வதோடு இந்துக்கள், சீக்கியர்களின் எதிர்ப்புக்கிடையே பஞ்சாபிலும், வங்காளத்திலும் அவர் களது பெரும்பான்மையைத் திணிப்பதாகிறது.

அதே சமயம் பரஸ்பர உடன்பாட்டின் பேரில் வங்காளத்தில் தனித்தொகுதிகள் ஒழிக்கப்பட்டு, இந்த மாகாணத்திலுள்ள ஒவ்வொரு சமூகமும் கூட்டுத் தொகுதி வாக்காளர்களின் ஆதரவை நாட வேண்டிய நிலை ஏற்பட் டால் அப்போது இதை அடிப்படையாகக் கொண்டு முஸ்லீம்கள் சிறுபான்மையினராக உள்ள ஆறு மாகாணங்களிலும் அவர்கள் தற்போது அனுபவித்துவரும் விசேடப் பிரதிநிதித்துவத்தை ரத்து செய்ய எந்த நடவடிக்கையும் நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்.

இதே போன்று, பஞ்சாபில் முஸ்லீம்களும் சீக்கியர்களும் இந்துக்களும் கூட்டு வாக்காளர் தொகுதிகள் மூலம் தேர்தலில் ஈடுபடத் தயாராக இருந்தால் இங்கும் மற்ற ஆறு மாகாணங்களில் தனி வாக்காளர் தொகுதிகள் மூலம் முகமதியர்கள் பெற்றுவரும் விகிதா சார முறையை இதனுடன் இணைக்க முயல்வோம்.

இந்தக் கடைசி யோசனைகளில் மூலம், இவ்விரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நல்வாய்ப்பை முஸ்லீம் சமுதாயத்தினருக்கு அளிக்கிறோம். தனி வாக்காளர் தொகுதிகள் அதிகரிப்பதை மட்டுப்படுத்தவும், இதற்கு மாற்றான தேர்தல் முறையை நடைமுறையில் சோதித்துப் பார்க்கவும் நாங்கள் விரும்புகிறோம்.

 ("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, பின்னிணைப்பு 7) 

Pin It