கீற்றில் தேட...

road safety

ஒவ்வொரு ஆண்டும் உலகில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாலை விபத்தில் இறக்கின்றனர். அதேபோல் 50 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்படைகின்றனர்.

விபத்தில் இறக்கக்கூடிய அல்லது பாதிக்கப்படக் கூடியவர்களில் 50% பேர் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள்.

விபத்துகள் ஒரு நாட்டை பொருளாதார ரீதியிலும் பாதிக்கிறது.

வாகனங்களில் Seat belt அணிவதன் மூலம் உயிரிழப்பை 61% வரை தடுக்கலாம்.

குழந்தைகளுடன் வாகனத்தில் செல்லும் போது அவர்களுக்கும் Child restraint அணிவதில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தைகள் உயிரிப்பை 35% வரை தடுக்கலாம்.

அதேபோல் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (Helmets) அணிவதன் மூலம் உயிரிழப்பை 45% வரை தடுக்கலாம்.

உலகம் முழுவதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான சட்ட விதிகளை கடுமையாக்குவதன் மூலம் உலக அளவில் 20% விபத்துக்களை குறைக்கலாம்.

நாம் குறைக்கும் ஒவ்வொரு 1Km/hr க்கும் விபத்து விகிதமானது 2% குறைகிறது. ஆகவே நாம் அனைவரும் மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கினால் விபத்தில்லா சாலையை உருவாக்கலாம்

ஒவ்வொருவரும் சாலை விதிகளை தன்நலனுக்காக இல்லாவிட்டாலும்  பிறர்நலனுக்காக கட்டாயமாக பின்பற்ற வேண்டும்

வாருங்கள் விபத்தில்லா சாலைகளைப் படைப்போம்!!

- ஷேக் அப்துல் காதர்