கலீல் கிப்ரான் ஒரு லெபனானிய அமெரிக்க கவிஞர் மற்றும்  எழுத்தாளர். அவரின் சிந்தனைகள் உலக பிரசித்தி பெற்றவை. அவர் எழுதிய  "The Prophet" என்ற ஆங்கிய கவிதையின் தமிழாக்கத்திலிருந்து சில முக்கிய பகுதிகள் இதோ உங்களுக்காக:

• அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள், உங்களிடமிருந்தல்ல.

• அவர்கள் உங்களுடன் இருந்தாலும்  உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல

• உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்குத் தரலாம்; உங்கள் எண்ணங்களை அல்ல.

• அவர்களுக்கென்று தனி சிந்தனைகள்  உண்டு

• அவர்களின் உடல்களுக்குத்தான் நீங்கள்  பாதுகாப்பு தரமுடியும்; ஆன்மாக்களுக்கு அல்ல.

• அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை ; அங்கே நீங்கள் செல்லமுடியாது

• உங்கள் கனவுகளிலும் கூட அவர்களைப் போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களை உங்களைப்போல்  ஆக்கிவிடாதீர்கள்.

• வாழ்க்கை பின் திரும்பிச்செல்லாது; நேற்றுடன் ஒத்துப்போகாது.

• நீங்கள் வில்கள். உங்களிடமிருந்து எய்யப்படும் உயிருள்ள அம்புகளே குழந்தைகள்.

Pin It