அரசு வேலைக்கு முயல்பவரா நீங்கள்?  வேலைவாய்ப்புச் செய்திகள் (‘Employment News’) இதழை ஒவ்வொரு வாரமும் வாங்க நினைக்கிறீர்கள்.  ஆனால் வாய்ப்புச்சூழல் அமையவில்லை;  என்ன செய்வது என நினைக்கிறீர்களா?  கவலையை விடுங்கள்.   ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.  நடுவண் அரசு வேலை பற்றிய அறிவிப்புகள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தேடிவரும்.  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்!

http://www.employmentnews.gov.in/job_alert_subscription.html என்னும் இணைப்பில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைப் பதிந்து ‘I want to receive highlights of upcoming issues in advance’ என்பதைத் தேர்ந்து வையுங்கள். ஒவ்வொருவாரமும் வியாழக்கிழமை அன்று அவ்வார வேலைவாய்ப்புச்செய்திகள் இதழில் உள்ள அரசு அறிவிப்புகள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தேடி வரும்!  பிறகென்ன?  விண்ணப்பித்து வெற்றி பெறுங்கள்!

- முத்துக்குட்டி

Pin It