முன்னுரை
நிகண்டுக்குத் தோற்றுவாய் தொல்காப்பிய சொல்லதிகாரத்திலுள்ள இடையியல், உரியியல் என்னும் இரு பகுதிகளிலும், பொருளதிகாரத்திலுள்ள உவமவியல், மரபியல் என்னும் பகுதியிலும் சொற்பொருள் கூறும் பகுதி அமைந்துள்ளது. இலக்கியத்திலிருந்தே நிகண்டுகளின் பட்டியல் அமைக்கும் முறை தோற்றம் கொண்டது என்பதற்குப் புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றன சான்று. நிகண்டுகள் வெறும் அகராதிகள் அல்ல. அவையே இலக்கியங்கள். இச்சிறப்பு வாய்ந்த நிகண்டுகளில் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு, பாரதிதீப நிகண்டு, சூடாமணி நிகண்டு, ஆசிரிய நிகண்டு, பொதிகை நிகண்டு, நாமதீப நிகண்டு ஆகிய ஒன்பது நிகண்டுகளில் மட்டும் பண்புப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அப்பண்புப்பெயர்களில் ஒன்றான அறிவுப்பெயர்கள் குறித்து மட்டும் இக்கட்டுரை அமைகின்றது.
இக்கட்டுரையின் இறுதியில் அகராதி வடிவில் 131 அறிவுப்பெயர்களும் அவ்வறிவுப்பெயர்களின் பொருள்களும், எந்தெந்த நிகண்டுகளில் அவ்வறிவுப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்றும் அட்டவணை வடிவில் அகரவரிசையில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்பது நிகண்டுகளில் பதிவாகியுள்ள அறிவுப்பெயர்களை அடிப்படையாக வைத்து இக்கட்டுரை ஆராய்கின்றது.திறவுச்சொற்கள் அறிவு, அறியாமை, அறிவின் திரிபு, அறிவின் திறம், அறிவின் மிகுதி, அறிவின்மை, அறிவு நுட்பம், அறிவுடைப் பொருள், பேரறிவு, கல்வி, பா, பாட்டு, பாயிரம், வடசொல், வினா, வேதம்
அறிவின் பெயர்கள்
இங்கு முதலில் அறிவின் பெயர்கள் எந்தெந்த நிகண்டுகளில் எந்தெந்த நூற்பாக்களில் என்னென்ன பொருளில் இடம்பெற்றுள்ளன என்று வகைதொகை செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக “அறிவின் பெயர்கள்” திவாகர நிண்டில் 1421ஆம் நூற்பாவில் ‘உரன், காட்சி, உணர்வு, ஒண்மை, புலன், ஞானம்’ போன்ற பொருளில் இடம்பெற்றுள்ளதை முதலில் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து 1521ஆம் நூற்பாவில் அறிவின் பெயர், ‘சேதனம்’ என்ற பொருளில் இடம்பெற்றுள்ளது. அதற்கடுத்து பிங்கல நிகண்டில் 1766ஆம் நூற்பாவில் ‘உணர்வு, காட்சி, உரன், உரை, தெளிவு, புலன், தெருட்சி, போதம், புத்தி, ஞானம்’ போன்ற பொருட்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு அறிவின் பெயர்கள் எந்தெந்த நிகண்டுகளில் இடம்பெற்றுள்ளதோ அதனையெல்லாம் ஒரே இடத்தில் பார்த்து பயன்பெறும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இம்முறையில் பின்வரும் கருத்தின் பெயர், கருதலின் பெயர், நல்லறிவின் பெயர், பேரறிவின் பெயர், அறியாமையின் பெயர் முதலானவை கொடுக்கப்பட்டுள்ளன.
திவாகர நிகண்டு
“உரனே, காட்சி, உணர்வே, ஒண்மை
புலனே, ஞானம், அறவுஎனப் புதல்வர்” (1421)
- உரன், 2. காட்சி, 3. உணர்வு, 4. ஒண்மை, 5. புலன், 6. ஞானம்
“அசேதனம் சேதனம் அறிவே” (1521) - 1. சேதனம்
பிங்கல நிகண்டு
“உணர்வு காட்சி யுரமன மேதை
தெளிவு புலனே தெருட்சி போதம்
புத்தி ஞான மறிவனப் புதல்வர்” (1766)
- உணர்வு, 2. காட்சி, 3. உரன், 4. உரை, 5. தெளிவு, 6. புலன், 7. தெருட்சி,
8. போதம், 9. புத்தி, 10. ஞானம்
பாரதிதீப நிகண்டு
“உணர்வே புலனொன்மை காட்சிமெர் ஞானமுரனறிவாந்” (388)
- உணர்வு, 2. புலன், ஒண்மை, 4. காட்சி, 5. ஞானம்
சூடாமணி நிகண்டு
“மேதைஞா பகந்தெ ருட்சி பினுமதி யுணர்வு ஞானம்
போதமே தெளிவு புலன்வரன் அறிவின் போம்” (555)
- மேதை, 2. ஞாபகம், 3. தெருட்சி, 4. மதி, 5. உணர்வு, ஞானம், 7. போதம்,
8. தெளிவு, 9. புந்தி, 10. புலன், 11. உரன்.
பொதிகை நிகண்டு
“உரமறிவு தெளிவுபுந்தி புலன் போத மேதை
யுணர்வுமதி காட்சிஞா பகந்தேறல் சீலந்
தெருளல்சே தனந்சைதன் னியஞான மாகுந்
தெளியும்பே ரறிவு முதுக்குறைவா மென் றதியே” (281)
- தெளிவு, புந்தி, 3. புலன், 4. மேதை, 5. உணர்வு, 6. மதி, 7. காட்சி, 8. ஞாபகம், 9. தேறல், 10 சீலம், 11. தெருளல், 12. ஞானம்.
நாமதீப நிகண்டு
“சேதணஞ்சை தன்யமுர ஞாபகஞ்சி தந்தெருட்சி
மேதைபுலன் விற்பணம்வி வேகமதிபோத
மறிவுணர்வு ஞான” (604)
- சேதனம், 2. சைதன்னியம், 3. உரம், 4. ஞாபகம், 5. சிதம், 6. தெருட்சி,
7. மேதை, 8. புலன், 9. விற்பனம், 10. விவேகம், 11. மதி, 12. போதம், 13. அறிவு,
14. உணர்வு, 15. ஞானம்.
திவாகர நிகண்டு
கருத்தின் பெயர் 16
“எண்ணல், பேணல், விரும்பல், சேத்து
கண்ணுதல், குறிப்பு, பிரும்பல், வினையே
வன்மை, மெய்ம்மை, ஏமாப்பு, உள்ளல்
கவிஞர், எண்ணிரண்டும் கருத்து எனக் கருதுவர்” (1422)
- எண்ணல், 2. பேணல், 3. ஒடல், 4. சேத்து, 5. கண்ணிதல், 6. குறிப்பு,
7. விரும்பல், 8. வினை, 9. உண்ணல், 10. மதம், 11. இங்கிதம், 12. சிந்தை, 13. வண்மை, 14. மெய்ம்மை, 15. ஏமாப்பு, 16. உள்ளல்
கருதலின் பெயர் - 3
“கண்ணல், நுதலுதல், புகறல், கருதுதல்” (1423)
- கண்ணல், 2. நுதலுதல், 3. புகறல்
நல்லறிவின் பெயர் - 2
“ஞானமும், சிலுமும், நல்லுணர்வு ஆகும்” (1424)
- ஞானம், 2. சீலம்
கருதலின் பெயர் - 2
“சுட்டலும், குறித்தலும் கருதுதல் ஆகும்” (1443)
- சுட்டல், 2. குறித்தல்
பேரறிவின் முதிர்ச்சியின் பெயர் 1
“முதுக்குறைவு பேரறிவின் முதிர்ச்சி ஆகும்” (1450) - 1. முதுக்குறைவு
அறியாமையின் பெயர் 1
“துயவென் கிளவி அறிவின் திவே” (1466) - 1. துயவு
அறிமடத்தின் பெயர் - 1
“பெருஞ்சேத்தன் அம்பர்ப் பெருமானைப் போல
தெரிந்து பிறர் 1. அறிவின் சோர்வு புறம்மறைத்து
அறிந்தும் அறியார் போறல் அறிமடம்.” (1468)
- அறிந்தும் அறியார் போறல்
அறிவின்மையின் பெயர் 1
“அசேதனம், அறிவின்மை” (1522) - 1. அசேதனம்
பிங்கல நிகண்டு
பேரறிவு பெயர் - 2
“முதுக்குறைவு பேரறிவு முகரிமையுமாகும்.” (1847)
- முதுக்குறைவு, 2. முகரிமை
பேதைமை பெயர் - 3
“பேதமை மடமை வெறியே மருட்சி (1859)
- மடமை, 2. வெறி, 3. மருட்சி.
கருதலின் பெயர் 3
“கண்ணல், நுதலுதல், புகறல், கருதுதல்,” (1423)
- கண்ணல், 2. நுதலுதல், 3. புகறல்.
நல்லறிவன் பெயர் 2
“ஞானமும், சீலமும், நல்லுணர்வு ஆகும்” (1424)
- ஞானம், 2. சீலம்.
கருதலின் பெயர் - 2
“சுட்டலும், குறித்தலும் கருதுதல் ஆகும்.” (1443)
- குட்டல், 2. குறித்தல்.
பேரறிவின் முதிர்ச்சியின் பெயர் - 1
“முதுக்குறைவு பேரறிவின் முதிர்ச்சி ஆகும்.” (1450) - 1.முதுக்குறைவு
அறியாமையின் பெயர் - 1
“எய்யாமை, அறியாமை ஆகும் என்ப.” (1466) - 1. எய்யாமை.
அறிவின் திரிவின் பெயர் - 1
“துயதவன் கிளவி அறிவின் திரிவே.” (1466) - 1. துயவு
அறிமடத்தின் பெயர் 1
“பெருஞ்சேந்தன் அம்பர்ப் பெருமானைப் போல
தெரிந்து பிறர் 1. அறிவிஞ் சோர்வு புறம் மறைத்து
அறிந்தும் அறியார் பேறெல் அறிமடம்” (1468)
- அறிந்தும் அறியார் போறல்
அறிவின்மையின் பெயர் - 1
“அசேதனம் அறிவின்மை” (1522) - 1. அசேதனம்
பிங்கல நிகண்டு
பேரறிவு பெயர் 2
“முதுக்குறைவு பேரறிவு முகரிமையுமாகும்” (1847)
- முதுக்குறைவு, 2. முகரிமை
பேதமை பெயர் - 3
“பேதமை மடமை வெறியே மருட்சி” (1859)-1. மடமை, 2. வெறி, 3. மருட்சி
இயம்பல் பெயர் 21
“கதையு நுவலும் காதையுங் நிறவியும்
பனுவலு மறையும் பறையும் வாணியும்
கூற்று மொழியுங் குயிறலும் புகறலும்
மாற்றமு மறையு நொடியும் பரவலும்
இசையு மியமும் பேச்சு முறையும்
எதிர்ப்பு மென்றிவை யியம்ப லாகும்” (2002)
- கதை, 2. நுவல், 3. கதை, 4. கிளவி, 5. பனுவல், 6. அறை, 7. மறை, 8. வாணி, 9. கூற்று, 10. மொழி, 11. குயிறல், 12. புகறல், 13. மாற்றம், 14. மறை, 15. நொடி,
16. பரவல், 17. இசை, 18. இயம், 19. பேச்சு, 20. உரை, 21. எதிர்ப்பு
வாசகம் பெயர் - 3
“வசனம் பாசுரம் வார்த்தையும் வாசகம்” (2003)
- வசனம், 2. பாசுரம், 3. வார்த்தை.
பதம் பெயர் - 2
“பாழியு முரையும் பதமென லாகும்” (2004)
- பாழி, 2. உரை
பேசுதல் பெயர் - 5
“இசைத்த லிறுத்தல் இயம்பல் புகறல்
பிதற்ற லென்றிவை பேசுத லாகும்” (2005)
- இசைத்தல், 2. இறுத்தல், 3. இயம்பல், 4. புகறல், 5. பிதற்றல்
பல்கால் விளம்புதல் - 1
“மீதுரை பல்கால் விறம்புதலாகம்.” (2006) - 1. மீதுரை
துதித்தல் பெயர் - 6
“பரவல் வழுத்தல் ஏத்தல் போற்றல்
பழிச்சல் வாழ்த்தல் துதித்தலாகும்” (2007)
- பரவல், 2. வழுத்தல், 3. ஏத்தல், 4. போற்றல், 5. பழிச்சல், 6. வாழ்த்தல்
வாழ்த்தல் பெயர் 2
“ஆசிடை யாசி வாழ்த்தா கும்மே” (2008) - 1. ஆசிடை, 2. ஆசி
சொல்லுதல் பெயர் - 22
“இயம்பல் விரித்தன் மொழிதல் விளம்பல்
பகர்தல் பன்னல் நவிறல் கத்துதல்
உரைத்தல் கூறல் வழங்கல் குயிலல்
புகலல் பேசல் நொடித்தல் பணித்தல்
சொற்ற லாடல் சொல்லுத லென்ப” (2009)
- இயம்பல், 2. விரித்தல், 3. மொழிதல், 4. விளம்பல், 5. பகர்தல், 6. பன்னல்,
7. நவிறல், 8. கத்துதல், 9. உரைத்தல், 10. கூறல், 11. வழங்கல், 12. குயிலல், 13. புகலல், 14. பேசல், 15. நொடிதல், 16. பிறழ்தல், 17. பறைதல், 18. செப்பல், 19. அதிர்தல்,
20. பணித்தல், 21. சொற்றல், 22. ஆடல்.
படித்தல் பெயர் 3
“பாடலோதல் வாசித்தல் படித்தல்” (2010)
- பாடல், 2. ஓதல், 3. வாசித்தல்
பெருஞ்சொல் பெயர் - 1
“பெருஞ்சொல் பலரறி சொல்லெனப் பெயர்பெறும்” (2011)
- பலரறி சொல்
சிறுசொல் பெயர் - 3
“சிறுசொ லிழிச்சொற் நீச்சொற் பழிச்சொல்” (2012)
- விழிச்சொல், 2. தீச்சொல், 3. பழிச்சொல்.
பழமொழி பெயர் - 3
“அம்பலுங் கௌவையு மலரும் பழமொழி” (2013)
- அம்பல், 2. கௌவை, 3. அலர்
திசைச் சொல் பெயர் - 1
“தேசிக மென்பது திசைச்சொல் லாகும்” (2014) - 1. தேசிகம்
மறைத்து மொழி கிளவி பெயர் - 2
“இடக்கர் மறைமொழி யெக்கரு மாகும்” (2015)
- இடக்கர், 2. ஏக்கர்
சிலர் அறிந்து தம்முன் தூற்றுதல் பெயர் - 1
“அம்பல்சில ரறிந்துதம் முட்புறங் கூறுதல்” (2016) - 1. அம்பல்
பலர் அறிந்து தூற்றுதல் - 1
“அவரே பலரு மறிர்தலர் தூற்றுதல்” (2017) - 1. அலர்
உறுதிக் கட்டுரை பெயர் - 3
“கழநலு மிடித்தலு நெடுங்கலு மென்றிவை
யுறுதிக் கட்டுரை யெனவுரைத் தனரே” (2018)
- கழறல், 2. இடித்தல், 3. நெருங்கல்
நயச்சொல் பெயர் - 3
“முகமன் சம்மான முபசார நயச்சொல்” (2019)
- முகமன், 2. சம்மானம், 3. உபசாரம்
குறளைமொழி பெயர் - 5
“கொடுவாய் பிசுனம் தொகுப்புக் குர்சம்
குறளை மொழிகொண் டியமு மாகும்” (2020)
- கொடுவாய், 2. பிசுனம், 3. தொகுப்பு, 4. குர்சம், 5. கொண்டியம்.
கதை பெயர் - 1
“கதையென் றுரைப்பது காரணச் சொல்லெனல்” (2027)
- காரணச் சொல்
வினாவல் பெயர் - 1
“வினாவல் கடாவல்” (2028) - 1. கடாவல்
எதிர்மொழி பெயர் -1
“விடையதற் கெதிர்மொழி.” (2029) - 1. விடை
வினாவும் விடையுங் கூடிய பொருள் பெயர் - 1
“வினாபொடு விடையம் விளம்புதல்சல் லாபம்” (2030) - 1. சல்லாபம்
பாயிரம் பெயர் 7
“அணிந்துரை பெய்துரை புனைந்துரை நூன்முகம்
முகவுரை தந்துரை புறவுரை பாயிரம்” (2031)
- அணிந்துரை, 2. பெய்துரை, 3. புனைந்துரை 4. நூன்முகம், 5. முகவுரை,
6. தந்துரை, 7. புறவுரை.
கல்வி பெயர் - 5
“செவியிற் றேறுந் திறனினி துரைக்கி
லுறுதியுங் கேள்வியு மோதியுங் கலையும்
பனுவலுங் கல்விப் பெயரெனப் பகரும்” (2053)
- உறுதி, 2. கேள்வி, 3. ஓதி, 4. கலை, 5. பனுவல்
சொல் மாலை பெயர் - 4
“தோற்றந் சீரொளி சுலோகஞ்சொன் மாலை” (2054)
- தோற்றம், 2. சீர், 3. ஒளி, 4. சுலோகம்
புகழ்பெயர் - 7
“ஏற்றங் கியாத மிசை மெய்ப் பலி
கீர்த்தி கீர்த்திசொல் திகழ்புக ழாவும்” (2055)
- ஏற்றம், 2. கியாதம், 3. இசை, 4. மெய்ப்பாடு, 5. கீர்த்தி, 6. கீர்த்திசொல்
புகழ் (தொடர்ச்சி) பெயர் - 1 +7 (8)
“மீக்சுற் றென்று விளம்பவும் பெறுமே” (2056) - 1. மீக்கூற்று
நூல் பெயர் - 7
“அதிகாரம் பிடக மாலிடந் தந்திரம்
பனுவ லாகமந் சுத்திர நூலே” (2057)
- அதிகாரம், 2. பிடகம், 3. ஆரிடம், 4. தந்திரம், 5. பனுவல், 6. ஆகமம்,
7. சூத்திரம்.
நற்பொருள் பெயர் - 2
“ஞாபகம் பிசியாவை நற்பொரு ளாகும்” (2058)
- ஞாபகம், 2. பிசி
வேதம் பெயர் - 7
“இருக்குச் சுருதிமறை பெயழுதாக் கிளவி
ஆதிநூல் சாகை யாரணம் வேதம்” (2059)
- இருக்கு, 2. சுருதி, 3. மறை, 4. எழுதாக் கிளவி, 5. ஆதிநூல், 6. சாகை,
7. ஆரணம்
முதல் வேதம் பெயர் - 2
“பௌடிக மிருக்கு முதல் வேத மாகும்” (2060)
- பௌடிகம், 2. இருக்கு
இரண்டாம் வேதம் பெயர் - 2
“இரண்டாம் வேதம் யசுதைத் திரியம்” (2061) - 1. யசு, 2. தைத்திரியம்.
மூன்றாம் வேதம் பெயர் - 2
“மூன்றது சாம வேதங் கீதநடை” (2062) - 1. சாமம், 2. கீதநடை
நான்காம் வேதம் பெயர் - 1
“நான்காம் வேத மதர்வண மென்ப” (2063)
- அதர்வணம், (அதர்வணம் – அதர்வம் எனவும் வழங்கும்)
வேதத்து உட்பொருள் பெயர் - 1
“உபநிடதம் வேதத்தி னுட்பொரு ளாகும்” (2064) - 1. உபநிடதம்
வேத மார்க்கம் பெயர் - 1
“வைதீகம் வேதமொழி மார்க்க மாகும்” (2065) - 1. வைதீகம்
உதாரணம் பெயர் - 3
“இதிகாச மிலக்கிய மெடுத்துக் காட்டல்
உதாரண மெனவு முரைக்கப்படுமே” (2066)
- இதிகாசம், 2. இலக்கியம், 3. எடுத்துக்காட்டல்
ஆகமம் பெயர் - 1
“ஆகம ஞானம்” (2067) - 1. ஞானம்
அத்தியாயம் பெயர் - 5
“படல மிலம்பகஞ் சுருக்கங் காண்டம்.”
பரிச்சேத மத்தி யாய மாகும்” (2068)
- படலம், 2. சிலம்பகம், 3. சுருக்கம், 4. காண்டம், 5. பரிச்சேதம்
நூற்பா அகவல் பெயர் – 1
“அடிவரை யின்றி விழுமதி டைக்கு
நூற்பா வகவல் சூத்திர மென்ப” (2069) - 1. சூத்திரம்
ஒத்து பெயர் – 1
“நிரல்பட வைப்ப தோத்தென மொழிப” (2070)
- ஓரினப் பொருளை வரிசைப்பட வைப்பது
படலம் பெயர் – 1
“பொதுமொழி தொடர்வது படலாமாகும்” (2071)
- ஒருவழிப்படாமல், பல பொருள்களைத் தரும் பொதுச் சொற்றொடர்வது
பொழிப்புரை பெயர் – 1
“பொழிப்புரை பிண்டப் பொருள தென்ப” (2072)
- பலபொருளைப் பிண்டமாக்கிக் கூறுவது
வரித்துரை பெயர் – 3
“வரித்துரை பரவுரை விரித்த சூரணை
தொகுதி பகுதிப் பொருள தாகும்” (2073)
- பதவுரை, 2. கருத்துரை, 3. தொகுத்துரை முதலிய பகுதிப் பொருளையுடையது.
வெண்பா பெயர் – 1
“முதற்பா வெண்பா” (2079) - 1. முதற்பா
கலிப்பா பெயர் – 1
“விகற்பங் கலிப்பா” (2080)
- வெண்பா விகற்பித்து வருவது.
ஆசிரியப்பா பெயர் – 2
“அகவலுந் தொகையு மாசிரி யப்பா.” (2081)
- அகவல், 2. தொகை
வஞ்சிப்பா பெயர் – 1
“அதனின் விகற்பம் வஞ்சியாகும்.” (2082)
- ஆசிரியப்பா விகற்பித்து வருவது.
அராகம் பெயர் – 2
“அராகம் முடுகியல் வண்ண மாகும்.” (2083)
- முடுகியல், 2. வண்ணம்.
குளகச் செய்யுள் பெயர் – 1
“குற்றெழுததுத் தொடரினது குளகச் செய்யுள்.” (2084)
- குற்றெழுத்துத் தொடர்ந்து வருவது.
நால்வகை எழுத்து - 4
“வடிவுபெயர் தன்மை முடிவு நான் கெழுத்தே.” (2087)
- வடிவெழுத்து, 2. பெயரெழுத்து, 3. தன்மை யெழுத்து, 4. முடிவெழுத்து.
ஒற்றெழுத்து பெயர் - 3
“விராமமும் புலுதழு மெய்யுமொற் றெழுத்தே.” (2088)
- விராமம், 2. புலுதம், 3. மெய்.
இருவகைப் பாயிரம் - 2
“பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே.” (2089)
- பொதுப்பாயிரம், 2. சிறப்புப்பாயிரம்.
முதல்வன் வாக்கு பெயர் 1
“ஆக முதல்வன் வாக்க தாகும்” (2089) - 1. ஆகமம்
அந்தணர்க்கு உரிய மார்க்கம் பெயர் 1
“அந்தண ரவர்க்கே வேத மார்க்கம்” (2091) - 1. வேத மார்க்கம்
தந்திரம் பெயர் 3
“மிருதி யாரிடம் பனுவ நந்திரம்” (2092)
- மிருதி , 2. ஆரிடம், 3. பனுவல்
பா பெயர் 6
“தூக்கு மியாப்புஞ் செய்யுளுங் கவியும்
பாட்டுந் தொடர்பும் பாவென் றாகும்” (2093)
- தூக்கு, 2. யாப்பு, 3. செய்யுள், 4. கவி, 5. பாட்டு, 6. தொடர்பு
இடத்தின் சந்தேகச் சொல் பெயர் 2
“யாண்டையு மியாங்கு மிடந்தினை யுறற்சொல்.” (2097)
- யாண்டை, 2. யாங்கு.
ஐயச் சொல் பெயர் 5
“யாதெவ னென்னை யேதுகொல் லையம்.” (2096)
- யாது, 2. வென், 3. என்னை, 4. ஏது, 5. கொல்.
இசைநிறை அசைச்சொல் பெயர் 2
“ஏயுங் குரையு மிசைநிறை யசைச்சொல்” - 1. ஏ, 2. குரை.
முன்னிலை அசைச் சொல் பெயர் 6
“மியாவிக மோமதி யிருஞ்சின் வென்று
மின்னவை முன்னிலை யகைச்சொ லென்ப” (2098)
- மியா, 2. இக, 3. மோமதி, 4. இகும், 5. சின்.
சுட்டு பெயர் 3
“அஇ உஅம் மூன்றுஞ் சுட்டே.” (2099)
- ஆ, 2. ஏ, 3. ஒ.
சாரியைச் சொல் பெயர் 8
“இன்னே வற்றே யிக்கே யம்மே
யொன்னே யானே யக்கே யன்னே
யின்னவை தயலாந் சாரியைச் சொல்லே.” (2101)
- இன், 2. வற்று, 3. சுக்கு, 4. அம், 5. ஒல், 6. ஆன், 7. அக்கு, 8. அன்
எழுத்தின் சாரியை பெயர் 5
“கரமுங் கானுங் காரமு மகரமு
மேனமும் பிறவு மெழுத்தின் சாரியை.” (2102)
- கரம், 2. கான், 3. காரம், 4. அகரம், 5. ஏனம்.
இடைச்சொல் பெயர் 15
“அரோபோ மாதோ வல்லா லுறை கெகு
வாங்குத் தெய்ய வெனவே ஞான்று. (2103)
- அரோ, 2. போ, 3. மாது, 4. ஓ, 5. அல், 6. அ, 7. உறை, 8. கெழு, 9. ஆங்கு,
10. பெய்யா, 11. என, 12. ஏ, 13. ஞான்று, 14. அந்தி, 15. ஓடும்.
அதிசய மொழி பெயர்
“அரசு ஓரு வந்தோ வந்தோ
வன்னோ வையோ வக்கோ வச்சோ. (2104)
- ஆஅ, 2. ஓஓ, 3. அத்தோ, 3. அந்தோ, 4. அன்றோ, 5. ஐயோ, 6. அக்ரோ,
7. அச்சோ, 8. என்னோ, 9. எற்றே.
இகழ்ச்சிக் குறிப்பு பெயர் 4
“ஏா சீச்சீ யெல்லெ னிகழ் மொழி.” (2105)
- ஏஎ, 2. சீச்சி, 3. எல், 4. என்.
வேற்றுமை உருபு பெயர் 6
“ஐயொடு குஇன் அதுகண் ணென்னு
மவ்வா றென்பா வேற்றுமை யுருபே.” (2106)
- ஐ, 2. ஓடு, 3. கு, 4. இன், 5. அது, 6. கண்.
செவி அறிவு பெயர் 5
“சத்தம் பிரச ரூபரசம் சந்தமென்
றொத்த வைம்புலனுஞ் செவியறி வென்ப.” (2120)
- சத்தம், 2. பரிசம், 3. ரூபம், 4. ரசம், 5. கந்தம்.
(பரிசம் முதலிய நாற்புலங்களின் குணங்களைச் செவி கேட்டுணர்தலால், சத்தத்தையும் அடக்கி ஐம்புலனும் என்றார்)
எழுதுதல் பெயர் 7
“தெரித்தல் வரித றீட்டல் பொறித்தல்
வரைதல் கீறல் கிறுக்குதே லெடுதல்.” (2124)
- தெரித்தல், 2. வரிதல், 3. தீட்டல், 4. பொறித்தல், 5. வரைதல், 6. கீறல்,
7. கிறுக்குதல்.
உழுத்து பெயர் 4
“விரியும் பொறியுமக் கரடு மன்றி
யிரேகையு யெழுத்தின் பெயரா கும்மே.” (2125)
- வரி, 2. பொறி, அக்கரம், 4. இரேகை.
கயாதரம் நிகண்டு
அறிவின் மிகுதி பெயர் 2
“அறிவின்மிகுதியு நன்மையு மொன்மை. .” (330)
- நன்மை, 2. ஒண்மை.
பாரதி தீபம் நிகண்டு
அறிவு, கருத்து இவற்றின் பெயர்கள் 4+12 - 16
“உணர்வே புலனொண்மை காட்சிரமஞ் ஞானமுரனறிவாந்
.. சூழல் செத்துப் புணர்குறிப்பிங்கிதஞ் சிந்தை
நினைவுன்னல் போதமுள்ளல்
கணமொடு கண்ணல் விரும்பல் கலைஞர் கருத்தென்பரே.” (388)
அறிவு பெயர் 4
- உணர்வே, 2. புலன், 3. ஒண்மை, 4. காட்சி விஞ்ஞானம்.
கருத்து பெயர் 12
- செத்துப், 2. புணர், 3. குறிப்பு, 4. இங்கிதம், 5. சந்தை, 6. நினைவு, 7. உன்னல், 8. போதம், 9. உள்ளல், 10. கண்ணல், 11. விரும்பல், 12. கலைஞர்.
பேரறிவு பெயர் - 1
“பேரறி வென்பதாகு முதுக்குறையே.” (395) - 1. முதுக்குறை
கருதுதல் பெயர் - 4
“தித்தல் குறித்த லுணருதல் சுட்டல் கருதுதலா. ” (396)
- கதித்தல், 2. குறித்தல், 3. உணருதல், 4. சுட்டல்.
அறிமடம் அறியாமை, அறிவின்திறம் இவற்றின் பெயர்கள் 1+1+1 = 3
“அறிமட மாகு மறிந்தறி யாமையெய் யானம்யென்னுந்
திறனறி யாமையுந் துயவே யறிவின் நிறமதென்பர்.” (399)
அறிமடம் பெயர் - 1. அறிந்தறி யாமை
அறியாமை பெயர் - 1. திறன் அறியாமை
அறிவின் திறம் பெயர் - 1. உயவே
அறிவுள்ளது, அறிவில்லாதது இவற்றின் பெயர்கள் 2
“ சேதன மென்ப தறிவுள தாகு மசேதனமே
போதமி லாதவை மேலாந் தலைதலைமைப் பொருட்டே.” (415)
- சேதனம், 2. மசேதனம்.
சூடாமணி நிகண்டு
அறிவின் பெயர் - 11
“மேதைஞா பகந்தெருட்சி மினுமதி யுணர்வு ஞானம்
போதமே தெளிவு புந்தி புலன்வின் அறிவின் பேராம்.” (555)
- மேதை, 2. ஞாபகம், 3. தெருட்சி, 4. மதி, 5. உணர்வு, 6. ஞானம், 7. போதம்,
8. தெளிவு, 9. மெந்தி, 10. புலன், 11. உரன்.
அறிவுடைப் பொருளின் பெயர், அறிவில் பொருளின் பெயர் அறிந்து மறியார் போறல் பெயர் 2 + 3 + 1 - 6
“அறிந்திடும் பொருட்பேர் சித்துச் சேதனம் என்பர் ஆய்ந்தோர்
அறிந்திடாப் பொருள்அ சித்தோடு அசேதனஞ் சுடும் ஆகும்” (574)
- சித்து, 2. சேதனம், 3. அசித்து, 4. அசேதனம், 5. சடம்.
அறிவுடைப் பொருளின் பெயர் - 1. சித்து, 2. சேதனம்.
அறிவில் பொருளின் பெயர் - 1. அசித்து, 2. அசேதனம், 3. சடம்.
அறித்துமறியார் போறல் - 1. அறிமடம்.
அறிவின்மையின் பெயர், பேரறிவின் பெயர் 4 + 1 - 5
“அறிவின்மை மடமெய் யாமை மருட்சிபே தைமை யென்றாகும்
பெறுமுதுக் குறைவு தானே பேரறிவு என்று கூறும்” (575)
அறிவின்மையின் பெயர் - 1. மடம், 2. எண்ணாமை, 3. மருட்சி, 4. பேதமை.
பேரறிவின் பெயர் - 1. முதுக்குறைவு.
நாமதீப நிகண்டு
அறிவின் பெயர், அறிவுத் திட்பத்தின் பெயர்,
அறிவின்மையின் பெயர் 15 + 1 + 2 - 18
“சேதனஞ்சை தன்யமுர ஞாபஞ்சி தந்தெருட்சி
மேதைபுலன் விற்பனம்வி வேகமதி - போத . .” (604)
அறிவின் பெயர் 15
- சேதனம், 2. சைதன்னியம், 3. உரம், 4. ஞாபகம், 5. சிதம், 6. தெருட்சி,
7. மேதை, 8. புலன், 9. விற்பனம், 10. விவேகம், 11. மதி, 12. போதம், 13. அறிவு,
14. உணர்வு, 15. ஞானம்.
அறிவுநுட்பத்தின் பெயர் - 1. முதுக்குறைவு,
அறிவின்மையின் பெயர் - 1. அறிவிலி, 2. அசேதனம்.
கல்வியின் பெயர், கல்லாமையின் பெயர் 5 + 12 - 17
“ஓதிகலை விச்சை வித்தை கல்வியின் பேர் கல்லாமை
யாதமஞ்ஞ மேனமேழமையஞ் ஞானமிச்சை - பேதமட” (620)
கல்வியின் பெயர் 5
- ஓதி, 2. கலை, 3. விச்சை, 4. வித்தை, 5. கல்வி.
கல்லாமையின் பெயர் 12
- கல்லாமை, 2. சதம், 3. அஞ்ஞாமை, 4. மை, 5. அஞ்ஞானம், 6. மிச்சை,
7. பேதம், 8. மடம், 9. அண்ணம், 10. அழுதம், 11. பாமரம், 12. மூடல்.
சொல்லின் பெயர் 25
“சொல்பறைநீர் வாணிகதை தோல் வசநங் காதைபனு
வல்பதந்தீர்ப் புக்கிளவி வாக்கு மொழி - நல்வார்த்தை” (651)
- சொல், 2. பறை, 3. நீர், 4. வாணி, 5. கதை, 6. தோல், 7. வசனம், 8. காதை,
9. பனுவல், 10. பதம், 11. தீர்ப்பு, 12. கிளவி, 13. வாக்கு, 14. மொழி, 15. வார்த்தை,
16. கூற்று, 17. நொடி, 18. செப்பு, 19. குயில், 20. உரை, 21.இயம், 22. பேச்சு, 23. மாற்றம், 24. இசை, 25. வாக்கியம்.
சொல்லின் பெயர் 27
“வரைத்தல் வானம் பல்புகறல் ஓதல்செப்ப லாடல்
வரித்தலறை தல்கதைத்தல் வள்ளல் - தெரித்தல்பன்ன” (652)
- வரைத்தல், 2. விளம்பல், 3. புகறல், 4. ஓதல், 5. செப்பல், 6. ஆடல், 7. வளித்தல், 8. அறைதல், 9. கதைத்தல், 10. விள்ளல், 11. தெரித்தல், 12. பன்னல், 13. இயம்பல்,
14. பேசல், 15. இசைத்தல், 16. பகர்தல், 17. நுவறல், 18. சாற்றல், 19. ரவிற்றல்,
20. மொழிதல், 21. கூறல், நொடித்தல், 23. மிழற்றல், 24. தீர்த்தல், 25. குறிறல்,
26. சொற்றல், 27. சொல்லல்.
பல்காற் கூறலின் பெயர், துதியின் பெயர் 1 + 10 - 11
“கூறனொடித் தல்மிழற்றல் தீர்த்தல் குயிறல் சொற்ற
லூறுசொல லாமீ துரைபலகாற் கூறல் துதி” (653)
பல்காற் கூறலின் பெயர் 1. மீதுரை
துதியின் பெயர் 1 துதி, 2. வாழ்த்தல், 3. மெச்சல், 4. போற்றல், 5. வழுத்தல், 6. பாசல்,
7. தோத்திரம், 8. ஏத்தல், 9. பழிச்சல், 10. பரவல்
வக்கணையின் பெயர், ஆசில்வாழ்த்தின் பெயர், நிந்தையின் பெயர்
“வாசகமும் பாசுரமும் வாக்கணையா மாசில்வாழ்” (654)
வக்கணையின் பெயர் - 1. வாசகம், 2. பாசுரம், 3. வக்கணை
ஆசில்வாழ்த்தின் பெயர் - 1. ஆசிடை
நிந்தையின் பெயர்
- திட்டு, 2. அம்பல், 3. பரியாசம், 4. நிந்தை, 5. வீ, 6. சி, 7. எஏ, 8. ஏச்சு,
9. உவர்ப்பு, 10. இகழ்ச்சி, 11. பழப்பு, 12. எள்ளல், 13. வைதல், 14. கவ்வை, 15. அலர்,
16. தூ, 17. சிற, 18. சொல், 19. ஏய், 20. கிளி, 21. தீச்சொல்.
மெய்யின் பெயர், பொய்யின் பெயர் 14 + 8 - 22
“மெய்சரத மாணையுண்மை சத்தியம்வே ளாண்மை நிலை” (655)
மெய்யின் பெயர் - 14
- மெய், 2. கரதம், 3. ஆணை, 4. வண்மை, 5. சத்தியம், 6. வேளாண்மை,
7. நிலை, 8. சாதம், 9. தீர்த்தம், 10. நிசம், 11. வாய்மை, 12. திடம், 13. பரமம், 14. நிச்சயம்.
பொய்யின் பெயர் 8
- மெய், 2. பழுது, 3. பிசி, 4. வலற்காரம், 5. மிச்சை, 6. சடம், 7. பேடு, 8. ரொக்கம்.
புறங்கூறலின் பெயர், திசைச்சொல்லின் பெயர், வினாவின் பெயர், எதிர்ச்சொல்லின் பெயர் 9 + 3 + 3 + 4 - 19
“கொண்டியங்குஞ் சந்தொடுப்புக் கோள்பினஞ் சாடிறே
ளண்டுகொடுவா புறங்கூற் றாம்படை - யொண்டிகைச்சொற்” (656)
புறங்கூறலின் பெயர் 9
- கொண்டியம், 2. குஞ்சம், 3. தொகுப்பு, 4. கோள், 5. பிசினம், 6. சாடி, 7. குறள், 8. கொடுவாய், 9. புறங்கூற்று.
திசைச்சொல்லின் பெயர் (3) - 1. பாடை, 2. திசைச்சொல், 3. தேசிகம்,
வினாவின் பெயர் (3) - 1. கடா, 2. வசா, 3. வினா.
எதிர்ச்சொல்லின் பெயர் (4) - 1. செப்பு, 2. விடை, 3. உத்திரம், 4. இறுப்பு.
வடச்சொல்லின் பெயர், தமிழின் பெயர், பாட்டின் பெயர் 7 + 3 + 8 - 18
“ஆரியஞ் சங்கிருத மண்டர்சொற்பி ராகிகுருஞ்
சீர்வடசொ லாங்கிரந்தந் தென்சொல் தமிழ் - ஒருந்” (657)
வடசொல்லின் பெயர் - 7
- ஆரியம், 2. சங்கிருதம் 3. அண்டர்சொல், 4. பிராகிருதம், 5. வடசொல்,
6. கிரந்தம்.
தமிழின் பெயர் - 3 - 1. தென்சொல், 2. தமிழ், 3. கிர்தம்.
பாட்டின் பெயர் - 8
- யாப்பு, 2. தூக்கு, 3. கவிதை, 4. செய்யுள், 5. கவி, 6. பா, 7. தொடர், 8. பாட்டு.
வெண்பாவின் பெயர், ஆசிரியப்பாவின் பெயர், கலிப்பாவின் பெயர், தனிச்சொல்லின் பெயர், அம்போதரங்கத்தின் பெயர், அராகத்தின் பெயர், கலிப்பாவற்றின் பெயர் 3 + 2 + 2 + 2 + 2 - 14
“வெள்ளை முற்பா வெண்பா வியனகவ லாசிரியங்
கொள்ளுங் கலிமுரற்பாக் கூன்றனிச்சொற் - றுள்ளு” (658)
வெண்பாவின் பெயர் (3) - 1. வெள்ளை, 2. முற்பா, 3. வெண்பா
ஆசிரியப்பாவின் பெயர் (2) - 1. அகவல், 2. ஆசிரியம்
கலிப்பாவின் பெயர் (2) - 1. கலிப்பா, 2. முரற்பா
தனிச்சொல்லின் பெயர் (2) - 1. கூன், 2. தனிச்சொல்,
அம்போதரங்கத்தின் பெயர் (2) - 1. அசையடி, 2.அம்போதரங்கம்.
அராகத்தின் பெயர் (2) - 1. முடுகு, 2. அராகம்.
கவிப்பாவீற்றின் பெயர் (1) - 1. சரிதம்.
இலக்கணத்தின் பெயர் சோதிடத்தின் பெயர், வைத்தியகாலின் பெயர் 4+5+4-13
“எண்ணாங் கணிக்கெழுத்தி லக்கணம்வி யாகரணந்
திண்ணியலு மாஞ்சோசி யங்கரண - மெண்கணிதந்” (659)
இலக்கணத்தின் பெயர் (4)
1.எழுத்து, 2. இலக்கணம், 3. வியாக்கரணம், 4. இயல்
சோதிடத்தின் பெயர் (4)
- சோசியம், 2. சந்தோபிசிதி, 3. ஆயுள், 4. வைத்திய நூல்.
பாத்திரத்தின் பெயர், ஆகமத்தின் பெயர், மந்திரத்தின் பெயர் 11 3 3 17
“சாத்திரமங் கம்பிடகந் தந்திரந்தந் தாரிடநூல்
யேத்திலக்கி யம்பனுவ லேசமையஞ் - சூத்திரமா” (660)
சாத்திரத்தின் பெயர் - 11
- சாத்திரம், 2. அங்கம், 3. பாகம், 4. தந்திரம், 5. தந்து, 6. ஆரிடம், 7. நூல்,
8. இலக்கியம், 9. பனுவல், 10. சமையம், 11. சூத்திரம்.
ஆகமத்தின் பெயர் 3
- மனு, 2. குய்யம், 3. மந்திரம்.
மந்திரவெண்ணின் பெயர், மந்திரத்தைச் சிந்தித்தலின் பெயர், மந்திரத்தைச் சொல்லுதலின் பெயர், ஒரு பொருளை யொருகாரணத்தான் முன் சொல்லி, அந்தப் பொருளை வேறொரு காரணத்தாற் பின்னும் வைத்தலின் பெயர் 3+1+1+1 - 6
“மந்திரத்தி னெண்ணுருவா முச்சரித்தல் மந்திரத்தைச்
சிந்தை செய்தல் மந்திரத்தைச் செப்பல்செப - முந்தியொன்றை”(661)
மந்திரவெண்ணின் பெயர் 3 - 1. மந்திர, 2. வெண், 3. ஒரு
மந்திரத்தைச் சிந்தித்தலின் பெயர் - 1. உச்சரித்தல்
மந்திரத்தைச் சொல்லுதலின் பெயர் - 1. செபம்
ஒரு பொருளை யொருகாரணத்தான் முன்சொல்லி, அந்தப் பொருளை வேறொரு காரணத்தாற் பின்னும் வைத்தலின் பெயர் - 1. அனுவாதம்
வேதத்தின் பெயர், வேதபாகையின் பெயர், வேதமார்க்கத்தின் பெயர், வேதப்பொருளின் பெயர் 10+3+1+1 -15
“ஆதினூல் சாகையிருக் காரணம்மோத் துச்சுருதி
கேதுபொது நூலெழுதாக் கேள்விமறை - வேதமதின். (662)
வேதத்தின் பெயர் - 12
- ஆதி, 2. நூல், 3. சாகை, 4. இருக்கு, 5. சூரணம், 6. ஒத்து, 7. கருதி, 8. பொது, 9. நூல், 10. எழுதாக்கேள்வி, 11. மறை, 12. வேதம்.
வேதமார்க்கத்தின் பெயர் 3 - 1. கன்மபாகை, 2. ஞானபாகை, 3. சுத்தபாகை.
வேதமார்க்கத்தின் பெயர் - 1. உபநிடதம்
முதல்வேதத்தின் பெயர், இரண்டாம் வேதம், மூன்றாம் வேதம், நான்காம் வேதத்தின் பெயர், வேதத் தலைச்சொல்லின் பெயர்
“தோன்றிருக்குப் பௌடிகமுன் வேதமிரண்டாஞ்சுருதி
சான்ற வெசுருத் தயித்திரிய - மூன்றுதாத்” (663)
முதல் வேதத்தின் பெயர் 3
- இருக்கு, 2. பௌடிகம், 3. முதல் வேதம்,
இரண்டாம் வேதத்தின் பெயர் 2
- எசுரு, 2. தயித்திரியம்
மூன்றாம் வேதத்தின் பெயர் 2
- உதாத்தானுவாத்தம், 2. சாமம்
நான்காம் வேதத்தின் பெயர் 1
- அதர்வணம்
படலத்தின் பெயர், படலக்கூட்டத்தின் பெயர், உரையின் பெயர், பொழிப்புரையின் பெயர், சொற்கூட்டலின் பெயர் 5+1+2+2+1 - 11
“இலம்பகப் ரிச்சேத மேற்றவத்தி யாயங்
கலந்தசருக் கம்படலங் காண்டஞ் - சொலும் படலத்(604)
படலத்தின் பெயர் 5
- இலம்பகம், 2. பரிச்சேதம், 3. அத்தியாயம், 4. சுருக்கம், 5. படலம்.
படலக்கூட்டத்தின் பெயர் 1
- காண்டம்
உரையின் பெயர் 2
- வியாக்கியானம், 2. உரை
பொழிப்புரையின் பெயர் 2
- பொழிப்பு, 2. பிண்டம்
சொற்கூட்டலின் பெயர் 1
- அனுவயம்
அ, ந், அ, ந, நி, கு, வி இவற்றின் பெயர் முன் கூறியதைப் பின்னுங் கூறலின் பெயர், பலவினக் கூட்டத்தின் பெயர்,
ஓரினக் கூட்டத்தின் பெயர் 6+1+1+1 - 9
“இன்மைபிறி தேற்றமறை யாக்கும் வட சொன்முனவரும்
அந்நநநி குவ்விமுன றைந்தபொருட் - பின்னும் வைத்தல்” (665)
அந், அ, ந, நி, கு, வி என்று ஆளும், வட சொற்களின் முன் வந்தால் இன்மை, பிறிது, ஏற்றம், எதிர்மறையென்னும் பொருள்களை யுணர்த்தும்.
(உம்) அநங்கன், அகனங்கன், நபண்டிதன், நிமலன், குயுக்தி, விமலன்.
முன் கூறியதைப் பின்னுங் கூறலின் பெயர் - 1
- புணருத்தம்
பலவினக் கூட்டத்தின் பெயர் - 1
- படலம்
ஓரினக் கூட்டத்தின் பெயர் - 1
- ஒத்து
பாயிரத்தின் பெயர், உதாரணத்தின் பெயர் 8+5 - 13
“ஆய்பதிக நாந்தி யணிந்துரை நுன்முகஞ்
சாய்வில் முகவுரையுந் தந்துரையும் – பாயிரமா(666)
பாயிரத்தின் பெயர் 8
- பதிகம், நாந்தி, 3. அணிந்துரை, 4. நூன்முகம், 5. முகவுரை, 6. தந்துரை,
7. பாயிரம்.
உதாரணத்தின் பெயர் 5
- ஒப்பு, 2. எடுத்துக்காட்டு, 3. இதியாசம், 4. உபகரணம், 5. உதாரணம்.
கதையின் பெயர் 4
“மூதுரைபு ராண முதுசொல்கதை” (667)
- மூதுரை, 2. புராணம், 3. முகுசொல், 4. கதை.
தன்னைப் புகழ்தலின் பெயர், வினாவும் விடையுமாகப் பேசிக் கொள்ளுதலின் பெயர், ஒரு சொல்லைப் பலகாலுந் சொல்லின் பெயர், உபசாரத்தின் பெயர்
“தற்புகழ்ச்சி தர்ப்ப நெருமொழிவி னாவிடையாயச்
செப்பல்லா பம்பிரத்தா பம்விரசாந் – கப்பேர்சொல்” (668)
தன்னைப் புகழ்தலின் பெயர் 3
- தற்புகழ்ச்சி, 2. தர்ப்பம், 3. நெடுமொழி.
வினாவும் விடையுமாகப் பேசிக்கொள்ளுதலின் பெயர் 3
- சா்லாபம், 2. பிரத்தாபம், 3. பிரசங்கம்,
ஒரு சொல்லைப் பலகாலுந் சொல்லின் பெயர் 2
- அலட்டல், 2. பிதற்றல்
உபசாரத்தின் பெயர் 5
- முகமன், 2. சன்மானம், 3. மென்சொல், 4. உபசாரம், 5. நயம்.
வழுச்சொல்லின் பெயர், புகழின் பெயர்
“கொஞ்சல் மிழலையுல்லா பங்குதலை யேமழலை
யஞ்சுழற லேகழற லாம்வழுச்சொல் – மிஞ்சுபுகழ். ‘ (669)
வழுச்சொல்லின் பெயர் 8
- கொஞ்சல், 2. மிழலை, 3. உல்லாபம், 4. குதலை, 5. மழலை, 6. உழறல்,
7. குழறல் 8. வழுச்சொல்.
புகழின் பெயர் 10
- புகழ், 2. கீர்த்தி, 3. பிரதாபம், 4. ஒளி, 5. பிரபலம், 6. தோற்றம், 7. கீர்த்தி,
8. சுவேதம், 9. இசை, 10. சீர்.
உறுதிச் சொல்லின் பெயர், மறைத்த சொல்லின் பெயர் 3+3 - 6
“. . முறுதிச் சொற்கழற
லேற்றிடிப்பாங் கூகனமிடக்கர் மறைக் – கூற்றா” (670)
உறுதிச் சொல்லின் பெயர் 3
- கூகனம், 2. இடக்கர், 3. மறைக்கூற்று,
வேண்டிக் கொள்ளுதலின் பெயர், தர்க்கத்தின் பெயர், குதர்க்கத்தின் பெயர், ஒரயச்சொல்லின் பெயர் 2+2+2+3 - 9
“.லோம்படையே – பின் வேண்டல்
தர்க்கம்வா தங்குதர்க்கந் தான் விதண்டை ஞாயச்சொல்” (671)
வேண்டிக் கொள்ளுதலின் பெயர் (2)
- ஓம்படை, 2. வேண்டல்
தர்க்கத்தின் பெயர் (2)
- தர்க்கம், 2. வாதம்
குதர்க்கத்தின் பெயர் (2)
- குதர்க்கம் 2. விதண்டை
ஞாயச்சொல்லின் பெயர் (3)
- ஞாயச்சொல், 2. விவகாரம், 3. வழக்கு
பொருளின் பெயர், பொருளின்மையின் பெயர், நற்பொருளின் பெயர், படித்தலின் பெயர், கேள்வியின் பெயர் 4+2+2+4+2 - 14
“அத்தம் பயன்நாற் பரியம் பொருளாம
னத்தமது வின்மைபிசி நற்பொருள்வா – சித்தல்படி” (672)
பொருளின் பெயர் (4)
- அத்தம், 2. பயன், 3. தாற்பரியம், 4. பொருள்
பொருளின்மையின் பெயர் (2)
- பிசி, 2. நற்பொருள்
படித்தலின் பெயர் (4)
- வாசித்தல், 2. படிப்பு, 3. ஓதல், 4. அத்தியானம்.
கேள்வியின் பெயர் (2)
- சிரவணம், 2. கேள்வி
உழுத்தின் பெயர், எழுச்சாரியையின் பெயர், எழுத்துறுப்பின் பெயர் 10+5+3- 18
“வன்னம் பொறியிலிகி தங்கணக்கி லேகைவரி
தன்மை யிலிபியெழுத் தக்கதமாம் – பின்னகரம்” (673)
எழுத்தின் பெயர் 10
- வன்னம், 2. பொறி, 3. இலிகிதம், 4. கணக்கு, 5. இலேகை, 6. வரி, 7. தன்மை,
8. இலிபி, 9. எழுத்து, 10 அக்கரம்.
எழுச்சாரியையின் பெயர் 5
- அகரம், 2. ன, 3. கரம், 4. காரம், 5. கான்.
எழுத்துறுப்பின் பெயர் 3
- தீர்க்கம், 2. விலங்கு, 3. கோடு.
உயிரெழுத்தின் பெயர், குற்றெழுத்தின் பெயர், நெட்டெழுத்தின் பெயர், ஒற்றெழுத்தின் பெயர், ஆய்தத்தின் பெயர், சுட்டெழுத்தின் பெயர், வினாவிறுதியின் பெயர் 3+2+2+4+4+3+8-26
“ஆவிசுர மச்சிருசு வங்குறிலாந் தீர்க்கநெடி
லோவில் புள்ளி மெய்புலுத மொற்றாய்த – வுனி” (674)
உயிரெழுத்தின் பெயர் (3)
- ஆவி, 2. சுரம், 3. அச்சு.
குற்றெழுத்தின் பெயர் (2)
- இருசுவம், 2. குறில்.
நெட்டெழுத்தின் பெயர் (2)
- தீர்க்கம், 2. நெடில்.
ஒற்றெழுத்தின் பெயர் (4)
- புள்ளி, 2. மெய், 3. புலுதம், 4. ஒற்று.
ஆய்தத்தின் பெயர் (4)
- ஆய்தம், 2. தனி, 3. அக்கேணம், 4. புள்ளி
சுட்டெழுத்தின் பெயர் (3)
- அ, 2. இ, 3. உ
வினாவிறுதியின் பெயர் (8)
- யார், 2. யாது, 3. ஓ, 4. உ, 5. கொல், 6. வென், 7. யா, 8. என்.
பொதுவகைச் சொல்லின் பெயர், முன்னிலை யசைச்சொல்லின் பெயர் 22+11-33
“சின்குரையோ ரும்பிறமா திட்டிருந்தாந் தாந்தானை
பெயன்பிறக்க ரோகாபோ வென்பமதி – யன்றிகுமால்” (676)
பொதுவகைச் சொல்லின் பெயர் 22
- சின், 2. குரை, 3. ஓரும், 4. பிற, 5. மாது, 6. இட்டு, 7. இருந்து, 8. ஆம், 9. தாம், 10. தான், 11. ஐ, 12. என், 13. பிறக்கு, 14. அரோ, 15. கா, 16. போ, 17. என்ப, 18. மதி,
19. அன்று, 20. இரும், 21. ஆல், 22. யா.
முன்னிலை யசைச்சொல்லின் பெயர் 9
- மியா, 2. மாள, 3. யாழ, 4. அத்தை, 5. வாழி, 6. மதி, 7. மோ, 8. இக, 9. ஈ
பொருள்கொள் ளிடைச்சொல்லின் பெயர், வேற்றுமையின் பெயர் 21+8 - 29
“என்றெனவோ தஞ்சமன்கொ னெற்றந்திலாங்கொடுமா
மன்றதிங்கோ லம்மதெய்ய மற்றும்மெனா - வென்றாவே” (677)
பொருள் கொள்ளிடைச் சொல்லின் பெயர் 21
- என்று, 2. என, 3. ஓ, 4. தஞ்சம், 5. மன், 6. கொன், 7. எற்று, 8. அந்தில்,
9. ஆங்கு, 10. ஓடு, 11. மா, 12. மன்ற, 13. தில், 14. கொல், |15. அம்ம, 16. தெய்ய,
17. மற்று, 18. உம், 19. எனா, 20. என்றா, 21. ஏ.
வேற்றுமையின் பெயர் 8
- ஐ, 2. ஆல், 3. கு, 4. இன், 5. அது, 6. கண், 7. விளி, 8. பெயர்.
செயலின் பெயர், செய்தலின் பெயர் 11+9 - 20
“காரியந்தொ ழிற்காமி, யங்கிருத்தி யங்கிரியை
காரகங்கன் மங்கருமம் வேலைவினை - யோர்செயலா” (689)
செயலின் பெயர் 11
- காரியம், 2. தொழில், 3. காமியம், 4. கிருத்தியம், 5. கிரியை, 6. காரகம்,
7. கன்மம், 8. கருமம், 9. வேலை, 10. வினை, 11. செயல்.
பல வென்பதின் பெயர் 24
“காழ்மலிகூர் பொங்கல்பெருக் கங்கழும லீட்ட” (772)
- கதழ், 2. மலி, 3. கூர், 4. பொங்கல், 5. பெருக்கம், 6. கழுமல், 7. ஈட்டம், 8. மதம்,
9. உறு, 10. தவ, 11. பிறங்கல், 12. சால, 13. விதப்பு, 14. நனி, 15. பூரிப்பு, 16. இறப்பு,
17. அமலை, 18. பூங்கு, 19. சிறப்பு, 20. ஆன்றல், 21. மிகல், 22. வெகு, 23. நாரை, 24. பல
அகராதி வடிவில் நிகண்டுகளின் அறிவுப்பெயர்கள்
அகராதிகள் எழ, நிகண்டுகளில் காணப்பெறும் சொற்பொருள் கூறும் பண்பு அடிகோலின. அகராதி எனும் சொல் முதன்முதலில் திருமந்திரத்தில்தான் இடம்பெற்றுள்ளது. அடுத்து 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய அகராதி நிகண்டில் இச்சொல் நிகண்டுக்கு அடையாக அமைந்தது. 17ஆம் நூற்றாண்டில் எழுந்த அகராதி மோனைக்ககராதி எதுகை பத்துச்சொல் அகராதி ஆகியவற்றில் இச்சொல் இடம்பெற்றிருப்பினும், 18ஆம் நூற்றாண்டில் சதுரகராதியில்தான் இச்சொல் இன்று வழங்கும் பொருளில் அறிமுகமாகியது. இதனையடுத்து, இச்சொல் பெருக வழங்கி நிலைத்தது.
ஒன்பது நிகண்டுகளில் இடம்பெறும் அறிவுப்பெயர்களை அகராதி வடிவில் அகரவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே இடம்பெறும் அட்டவணையில் முதலில் அறிவுப் பெயர்களும் அடுத்து அப்பெயருக்குரிய பொருள்களும், அடுத்து அவ்அறிவுப்பெயர்கள் எந்தெந்த நிகண்டுகளில் எந்த நூற்பாவில் இடம்பெற்றுள்ளன என்பதும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலே கட்டுரையில் செய்யுள் வடிவில் குறிப்பிடப்பட்ட ஒன்பது நிகண்டுகளில் இடம்பெற்ற அறிவுப்பெயர்களை அடிப்படையாக வைத்து இவ்வட்டணை அமைகின்றது. ஒவ்வொரு நிகண்டின் செய்யுளிலும் இடம்பெற்ற அறிவுப்பெயர்களில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய சொற்களை விட்டுவிட்டு அறிவுப்பெயரிலும், அதன் பொருள்களிலும் ஒருமுறை மட்டும் அச்சொல் இடம்பெறும் வண்ணம் 131 அறிவுப்பெயர்கள் இவ்வட்டவணையில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
வ.எ |
சொற்கள் |
பொருள் |
நிகண்டுப் பெயர்கள் |
அத்தியாயம் |
படலம், இலம்பகம், சருக்கம், காண்டம், பரிச்சேதம் |
பிங்கலம் – 2068 |
|
அதிசய மொழி |
ஆஅ, ஓஓ, அத்தோ, அந்தோ, அன்றோ, ஐயோ, அக்ரோ, |
பிங்கலம் – 2104 |
|
அதிசயம் |
வியப்பு, விம்மிதம், இறும்பூது, விபரீதம், விசித்திரம், அற்புதம், வித்தகம், ஆச்சரியம், சித்திரம், உற்பனம், இறும்பு, அதிசயம் |
திவாகரம் – 1439, 2287, 2288 கயாதரம் – 316 பாரதிதீபம் – 392, 572 நாமதீபம் – 634, 643 சூடாமணி – 572 பொதிகை – 291 பிங்கலம் – 2287, 2288 |
|
அந்தணர்க்குரிய மார்க்கம் |
வேதமார்க்கம் |
பிங்கலம் – 2091 |
|
அம்போதரங்கம் |
அசையடி |
பிங்கலம் – 2083 நாமதீபம் – 658 |
|
அராகம் |
முடுகு, வண்ணம், முடுகியல் |
பிங்கலம் – 2083 நாமதீபம் – 658 |
|
அறியாமை |
எய்யாமை, அறிமடம், அறிந்தும் அறியார் |
பிங்கலம் – 2299 கயாதரம் – 322 பொதிகை – 282 பாரதிதீபம் – 399 சூடாமணி – 574 |
|
அறிவில்லாதது |
அசேதனம், அசித்து, சடம், அறிவிலி |
பாரதிதீபம் – 415 சூடாமணி – 574 நாமதீபம் – 604 |
|
அறிவின் திரிபு |
துய்வது |
கயாதரம் – 322 பாரதிதீபம் – 399 |
|
அறிவின் திறம் |
உயவு |
கயாதரம் – 399 |
|
அறிவின் மிகுதி |
நன்மை, ஒண்மை |
கயாதரம் – 330 |
|
அறிவின்மை |
மடம், எண்ணாமை, மருட்சி, பேதமை, அறிவிலி, அசேதனம் |
சூடாமணி – 575 நாமதீபம் – 604 |
|
அறிவு |
உரன், காட்சி, உணர்வு, ஒண்மை, புலன், சேதனம், உரை, தெளிவு, தெருட்சி, போதம், புத்தி, மேதை, ஞாபகம், மதி, தேறல், தெருளல், சைதன்னியம், சிதம், விற்பனம், அறிவு, விவேகம், விஞ்ஞானம், மெந்தி, நன்மை, துயவு, உயவு |
திவாகரம் – 1421, 1521 பிங்கலம் – 1424, 1766, 1847, 1450 கயாதரம் – 310 பாரதிதீபம் – 388 சூடாமணி – 555 பொதிகை – 281 நாமதீபம் – 604 |
|
அறிவு நுட்பம் |
முதுக்குறைவு |
நாமதீபம் – 604 |
|
அறிவுடைப் பொருள் |
சேதனம், சித்து |
பாரதிதீபம் – 415 சூடாமணி – 574 |
|
அனுவாதம் |
ஒருபொருளை ஒரு காரணத்தான் முன்சொல்லி அந்தப் பொருளை வேறொரு காரணத்தான் பின்னும் வைத்தல் |
நாமதீபம் – 661 |
|
ஆகமம் |
ஞானம், சிறப்புநூல், அனாதி நூல் |
பிங்கலம் – 2067 நாமதீபம் – 660 |
|
ஆசிரியப்பா |
தொகை, ஆசிரியம் |
பிங்கலம் – 2081 நாமதீபம் – 658 |
|
ஆசில்வாழ்த்து |
ஆசிடை |
நாமதீபம் – 654 |
|
ஆய்தம் |
தனி, அக்கேணம், புள்ளி |
நாமதீபம் – 674 |
|
இகழ்ச்சிக் குறிப்பு |
ஏஎ, சீச்சி, எல், என், திட்டு, அம்பல், பரியாசம், நிந்தை, சீசி, எஏ, ஏச்சு, உவர்ப்பு, இகழ்ச்சி, பழிப்பு, எள்ளல், வைதல், கவ்வை, அலர், தூ, சிறுசொல், ஏய், இளி, நகை, தீச்சொல், இகழ்வு, ஒல்லாமை |
பிங்கலம் – 2105 நாமதீபம் – 654 திவாகரம் – 1462 |
|
இசைநிறை அசைச்சொல் |
ஏ, குரை |
பிங்கலம் – 2097 |
|
இடத்தின் சந்தேகச் சொல் |
யாண்டை, யாங்கு |
பிங்கலம் – 2095 |
|
இடைச்சொல் |
அரோ, போ, மாது, ஓ, அல், ஆல், உறை, கெழு, என, ஆங்கு, தெய்ய, ஏ, ஞான்று, அந்தில், ஓரும் |
பிங்கலம் – 2103 |
|
இயம்பல் |
கதை, நுவல், கதை, கிளவி, பனுவல், அறை, மறை, வாணி, கூற்று, மொழி, குயிறல், புகறல், மாற்றம், மறை, நொடி, |
பிங்கலம் – 2002 |
|
இரண்டாம் வேதம் |
யசுர், தைத்திரியம் |
பிங்கலம் – 2061 நாமதீபம் – 663 |
|
இருவகைப் பாயிரம் |
பொதுப்பாயிரம், சிறப்புப் பாயிரம் |
பிங்கலம் – 2089 |
|
இலக்கணம் |
எழுத்து, வியாக்கரணம், இயல் |
நாமதீபம் – 659 |
|
உதாரணம் |
இதிகாசம், இலக்கியம், எடுத்துக்காட்டல், ஒப்பு, உபகரணம் |
பிங்கலம் – 2066 நாமதீபம் – 666 |
|
உபசாரம் |
முகமன், சன்மானம், மென்சொல், நயம் |
நாமதீபம் – 668 |
|
உயிரெழுத்து |
ஆவி, சுரம், ஆச்சு |
நாமதீபம் – 674 |
|
உரை |
வியாக்கியானம் |
நாமதீபம் – 664 |
|
உழுத்து பெயர் |
வரி, பொறி, அக்கரம், இரேகை |
பிங்கலம் – 2125 |
|
உறுதிச்சொல் |
கழறல், இடித்தல், நெருங்கல், இடிப்பு |
பிங்கலம் – 2018 நாமதீபம் – 670 |
|
எதிர்ச்சொல் |
செப்பு, விடை, உத்திரம், இறுப்பு |
நாமதீபம் – 656 |
|
எதிர்மொழி |
விடை |
பிங்கலம் – 2029 |
|
எழுத்து |
வண்ணம், பொறி இலிகிதம், கணக்கு, இலேகை, வரி, இலிபி, தன்மை, அக்கரம், இரேகை |
பிங்கலம் – 2125 நாமதீபம் – 673 |
|
எழுத்து உறுப்பு |
தீர்க்கம், விலங்கு, கோடு |
நாமதீபம் – 673 |
|
எழுத்துச் சாரியை |
அகரம், ன, கரம், கான், காரம், ஏனம் |
பிங்கலம் – 2102 நாமதீபம் – 673 |
|
எழுதுதல் |
தீட்டல், வரித்தல், பொறித்தல், கீறல், தெரித்தல், வரைதல் |
நாமதீபம் – 728 |
|
ஐயச்சொல் |
யாது, எவன், என்னை, ஏது, கொல் |
பிங்கலம் – 2096 |
|
ஒரு சொல்லைப் பலகாலம் சொல்லல் |
அலட்டல், பிதற்றல் |
நாமதீபம் – 668 |
|
ஒற்று |
புள்ளி, மெய், புலுதல், விராமம், வேய் |
பிங்கலம் – 2088 நாமதீபம் – 674 பிங்கலம் – 1813 நாமதீபம் – 707 |
|
ஓரினக் கூட்டத்தின் பெயர் |
அநங்கன், அகனங்கன், பண்டிதன், நிமலன், குயுக்தி, விமலன், ஓத்து |
நாமதீபம் – 660, 665 பிங்கலம் – 2070 |
|
கதை |
மூதுரை, புராணம், முதுசொல், காரணச் சொல் |
பிங்கலம் - 2027 நாமதீபம் – 667 |
|
கருத்து |
எண்ணல், பேணல், ஏடல், சேத்து, கண்ணுதல், குறிப்பு, விரும்பல், வினை, உண்ணல், மதம், இங்கிதம், வண்மை, மெய்ம்மை, ஏமாப்பு, உள்ளல், சிந்தை, நினைவு, சிந்தனை, குட்டல், செத்து, புணர், உன்னல், போதம், கலைஞர், படர்தல், ஊர்தல், கருதல், முன்னல், அறிதல், வலித்தல், சிந்தித்தல், தெளிவு, தியானம், நுதலல், காணல் |
திவாகரம் – 1422 பாரதிதீபம் – 388 பொதிகை – 286 |
|
கருதுதல் |
கண்ணல், நுதலுதல், புகறல், சுட்டல், குறித்தல், கதித்தல், உணருதல், இங்கிதம், கருத்து, எண்ணம், நாட்டியம், கண்ணல், நுதலல், காணல், புகறல், எண்ணல், பேணல், கருதல், சுட்டல், உண்ணல், வண்மை, கண்ணுதல், உணர்தல், கொள்ளல், சொன்னம், சேத்து, சூழல், மதம், வினை, ஏடல், நன்னல், சுட்டு, முன்னம், யோகம், குறிப்பு, வெங்கியம் |
பிங்கலம்–1774,1775,1776 கயாதரம் – 308, 311 சூடாமணி – 558, 559 பாரதிதீபம் – 396 பொதிகை – 286 நாமதீபம் – 605 |
|
கல்லாமை |
கல்லாமை, ஆதம், ஆஞ்ஞம்மேழமை, அஞ்ஞானம், மிச்சை, பேதம், மடம், அண்ணம், இழுதம், பாமரம், மூடம் |
நாமதீபம் – 620 |
|
கல்வி |
கல்வி, உறுதி, ஓதி, கலை, பனுவல், விச்சை, வித்தை |
பிங்கலம் – 2053 நாமதீபம் – 620 |
|
கலிப்பா |
முரற்பா, வெண்பா விகற்பித்து வருவது |
பிங்கலம் – 2080 நாமதீபம் – 658 |
|
கலிப்பாவிப்பா |
சுரிதகம் |
பிங்கலம் – 2083 நாமதீபம் – 658 |
|
குதர்க்கம் |
விதண்டை |
நாமதீபம் – 671 |
|
குளகம் |
குற்றெழுத்து தொடர்ந்து வருவது |
பிங்கலம் – 2084 |
|
குறளை |
கொடுவாய், பிசுனம், தொகுப்பு, குர்சம், கொண்டியம் |
பிங்கலம் - 2020 |
|
குற்றெழுத்து |
இருசுவம், குறில் |
நாமதீபம் – 674 |
|
கேள்வி |
சிரவணம் |
நாமதீபம் – 672 |
|
சாத்திரம் |
அங்கம், நூல், ஆரிடம், இலக்கியம், பனுவல், சமையல், சூத்திரம், பிடகம், தந்திரம், தந்து |
நாமதீபம் – 660 |
|
சாரியைச் சொல் |
இன், வற்று, இக்கு, அம், ஒன், ஆன், அன், அக்கு |
பிங்கலம் – 2101 |
|
சிலர் அறிந்து தம்முன் தூற்றுதல் |
அம்பல் |
பிங்கலம் - 2016 |
|
சிறுசொல் |
இழிச்சொல், தீச்சொல், பழிச்சொல் |
பிங்கலம் – 2012 |
|
சுட்டெழுத்து |
அ, இ, உ |
பிங்கலம் – 2099 நாமதீபம் – 674 |
|
செயல் |
காரியம், தொழில், காமியம், கிருத்தியம், கிரியை, காரகம், கன்மம், கருமம், வேலை, வினை, ஆற்றல், இழைத்தல், குயிற்றல், பண்ணல், அயர்தல், வனைதல், இயற்றல், செய்தல், புரிதல், செய்தி, செய்கை |
பிங்கலம் – 1814 நாமதீபம் – 689 |
|
செவி அறிவு |
சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் |
பிங்கலம் – 2120 |
|
சொல் மாலை |
தோற்றம், சீர், ஒளி, சுலோகம் |
பிங்கலம் - 2054 |
|
சொல் |
இயம்பல், விரித்தல், மொழிதல், விளம்பல், பகர்தல், பன்னல், நவிறல், கத்துதல், உரைத்தல், கூறல், வழங்கல், குயிலல், புகலல், பேசல், நொடிதல், பிறழ்தல், பறைதல், செப்பம், அதிர்தல், பணித்தல், சொற்றல், சொல், பறை, கீர், வாணி, கதை, தோல், வசனம், காதை, பனுவல், பதம், தீர்ப்பு, கிளவி, வாக்கு, மொழி, வார்த்தை, கூற்று, நொடி, செப்பு, குயில், உரை, இயம், பேச்சு, மாற்றம், இசை, வாக்கியம், புகறல், ஓதல், செப்பல், ஆடல், அறைதல், விள்ளல், கதைத்தல், தெரித்தல், பன்னல், இசைத்தல், நுவறல், சாற்றல், நவிற்றல், மொழிதல், நொடித்தல், மிழற்றல், தீர்த்தல், குயிறல், சொல்லல், சீர், சுலோகம், தோற்றம், ஒளி, கதை, நுவல், பனுவல், அறை, மறை, வாணி, கூற்று, மாற்றம், பரவல், எதிர்ப்பு, இறுத்தல், பிதற்றல், மீதுரை, அலட்டல் |
பிங்கலம் – 2002, 2005, 2006, 2009, 2054 நாமதீபம் – 651, 652, 653, 668 |
|
சொற்கூட்டலின் பெயர் |
அனுவயம் |
நாமதீபம் – 664 |
|
சோதிடம் |
சோசியம், கரணம், எண், கணிதம் |
நாமதீபம் – 659 |
|
ஞாயச்சொல் |
விவகாரம், வழக்கு |
நாமதீபம் – 671 |
|
தந்திரம் |
மிருதி, ஆரிடம், பனுவல் |
பிங்கலம் – 2092 |
|
தமிழ் |
தென்சொல், திராவிடம், கிரந்தம் |
நாமதீபம் – 657 |
|
தர்க்கம் |
வாதம் |
நாமதீபம் – 671 |
|
தன்னைப் புகழ்தல் |
தற்புகழ்ச்சி, தர்ப்பம், நெடுமொழி |
நாமதீபம் – 668 |
|
தனிச்சொல் |
கூன் |
பிங்கலம் – 2083 நாமதீபம் – 658 |
|
திசைச்சொல் |
பாடை, தேசிகம், திசைச்சொல் |
பிங்கலம் – 656 நாமதீபம் – 2014 |
|
துதித்தல் |
துதி, வாழ்த்தல், மெச்சல், போற்றல், வழுத்தல், பரசல், தோத்திரம், ஏத்தல், பழிச்சல், பரவல், ஆசிடை, ஆசி |
பிங்கலம் – 2007, 2008 நாமதீபம் – 653, 654 |
|
நயச்சொல் |
முகமன், சம்மானம், உபசாரம் |
பிங்கலம் – 2019 |
|
நல்லறிவு |
ஞானம், சீலம் |
திவாகரம் – 1424 |
|
நற்பொருள் |
ஞாபகம், 2. பிசி |
பிங்கலம் – 2058 நாமதீபம் – 672 |
|
நால்வகை எழுத்து |
வடிவெழுத்து, பெயரெழுத்து, தன்மையெழுத்து, முடிவெழுத்து |
பிங்கலம் – 2087 |
|
நான்காம் வேதம் |
அதர்வணம் |
பிங்கலம் – 2063 நாமதீபம் – 663 |
|
நிந்தை |
திட்டு, அம்பல், பரியாசம், நிந்தை, வீ, சி, எஏ, ஏச்சு, |
நாமதீபம் – 654 |
|
நூல் |
ஆய்தல், தேர்தல், அதிகாரம், பிடகம், ஆரிடம், தந்திரம், பனுவல், ஆகமம், |
பிங்கலம் – 1820 பிங்கலம் – 2057 |
|
நூற்பா அகவல் |
சூத்திரம் |
பிங்கலம் - 2069 |
|
நெட்டெழுத்து |
தீர்க்கம், நெடில் |
நாமதீபம் – 674 |
|
படலக் கூட்டம் |
காண்டம் |
நாமதீபம் – 664 |
|
படலம் |
ஒருவழிப்படாமல் பல பொருள்களைத் தரும் பொதுச் சொற்றொடர், இலம்பகம், பரிச்சேதம், அத்தியாயம், சருக்கம் |
பிங்கலம் – 2071 நாமதீபம் – 664, 665 |
|
படித்தல் |
வசனம், பாசுரம், வார்த்தை, பாடல், ஓதல், வாசித்தல், படிப்பு, அத்தியானம் |
பிங்கலம் – 2003, 2010 நாமதீபம் – 672 |
|
பதம் |
பாழி, உரை |
பிங்கலம் – 2004 |
|
பல |
கதழ், மலி, கூர், பொங்கல், பெருக்கம், கழுமல், ஈட்டம், மதம், உறு, தவ, பிறங்கல், சால, விதப்பு, நனி, பூரிப்பு, இறப்பு, அமலை, பூங்கு, சிறப்பு, ஆன்றல், மிகல், வெகு, நாரை |
நாமதீபம் – 772 |
|
பல்கால் விளம்புதல் |
மீதுரை |
பிங்கலம் – 2006 நாமதீபம் – 653 |
|
பலர் அறிந்து தம்முன் தூற்றுதல் |
அலர் |
பிங்கலம் – 2017 |
|
பழமொழி |
அம்பல், கௌவை, அலர் |
பிங்கலம் – 2013 |
|
பா, பாட்டு |
தூக்கு, யாப்பு, செய்யுள், கவி, தொடர்பு, கவிதை |
பிங்கலம் – 2093 நாமதீபம் – 657 |
|
பாயிரம் |
பதிகம், நாந்தி, அணிந்துரை, நூன்முகம், முகவுரை, தந்துரை, பெய்துரை, புனைந்துரை, புறவுரை |
பிங்கலம் - 2031 நாமதீபம் – 666 |
|
புகழ் |
ஏற்றம், கியாதம், இசை, மெய்ப்பாடு, சீா்த்தி, கீர்த்திசொல், மீக்கூற்று, புகழ், பிரதாபம், ஒளி, பிரபலம், தோற்றம், சுவேதம், சீர் |
பிங்கலம் – 2055, 2056 நாமதீபம் – 669 |
|
புணருத்தம் |
முன் கூறியதைப் பின்னுங் கூறல் |
நாமதீபம் – 665 |
|
புறங்கூறல் |
கொண்டியம், குஞ்சம், தொகுப்பு, கோள், பிசினம், சாடி, குறள், கொடுவாய், புறங்கூற்று. |
நாமதீபம் – 656 |
|
பெருஞ்சொல் |
பலரறி சொல் |
பிங்கலம் – 2011 |
|
பேசுதல் |
இசைத்தல், இறுத்தல், இயம்பல், புகறல், பிதற்றல் |
பிங்கலம் - 2005 |
|
பேதமை |
மடமை, வெறி, மருட்சி, அறிவின்மை, மடம் |
பிங்கலம் – 1859 சூடாமணி – 575 |
|
பேரறிவு |
முதுக்குறைவு, முகரிமை |
திவாகரம் – 1420, 1450 கயாதரம் – 310, 318 பாரதிதீபம் – 395 சூடாமணி – 575 பொதிகை – 281 நாமதீபம் – 604 |
|
பொதுவகைச் சொல் |
சின், குரை, ஒரும், பிற, மாது, இட்டு, இருந்து, ஆம், தாம், தான், ஐ, என், பிறக்கு, அரோ, கா, போ, என்ப, மதி, அன்று, இரும், ஆல், யா |
நாமதீபம் – 676 |
|
பொய் |
பொய், பழுது, பிசி, வலற்காரம், மிச்சை, சடம், பேடு, பொக்கம், கொண்டியம், குஞ்சம், தொடுப்பு, கோள், பிசினம், சாடி, குறள், கொடுவாய், புறங்கூற்று, படிறு, பொக்கம், பிசி, பெட்டு, பழுது, மிச்சை, மாயம், வழுது, தத்திகாரம், நடலை |
நாமதீபம் – 655, 656 பிங்கலம் – 1889 |
|
பொருள்கொள் |
என்று, உன, ஓ. தஞ்சம், மன், கான், எற்று, அந்தில், ஆங்கு, ஒடு, மா, மன்ற, தில், கொல், அம், தெய்ய, மற்று, உம், எனா, என்றா, ஏ |
நாமதீபம் – 677 |
|
பொருளின் பெயர் |
அத்தம், பயன், தாற்பரியம், பொருள் |
நாமதீபம் – 672 |
|
பொருளின்மை |
அனந்தம் |
நாமதீபம் – 672 |
|
பொழிப்புரை |
பொழிப்பு, பிண்டம், பல பொருட்களை பிண்டமாக்கிக் கூறுவது |
பிங்கலம் – 2072 நாமதீபம் – 664 |
|
மந்திரத்தைச் சிந்தித்தல் |
உச்சரித்தல் |
நாமதீபம் – 661 |
|
மந்திரவெண் - 1. செபம் |
மந்திரம், வெண், உரு |
நாமதீபம் – 660, 661 |
|
மறைத்து மொழி |
இடக்கர், எக்கர், கூகனம், மறைக்கூற்று |
பிங்கலம் – 2015 நாமதீபம் – 670 |
|
முதல் வேதம் |
பௌடிகம், இருக்கு |
பிங்கலம் – 2060 நாமதீபம் – 663 |
|
முதல்வன் வாக்கு |
ஆகமம் |
பிங்கலம் – 2091 |
|
முன்னிலை அசைச்சொல் |
மியா, இக, மோ, மதி, இகும், சின், மாள, யாழ, அத்தை, வாழி, ஈ |
பிங்கலம் – 2098 நாமதீபம் – 676 |
|
மூன்றாம் வேதம் |
சாமம், கீத நடை, உதாத்தானுதாத்தம் |
பிங்கலம் – 2062 நாமதீபம் – 663 |
|
மெய் |
கரதம், ஆணை, வண்மை, சத்தியம், நிலை, வேளாண்மை, சாதம், தீர்த்தம், நிசம், வாய்மை, திடம், நீதி, பரமம், நிச்சயம், ஞாயச்சொல், விவகாரம், வழக்கு, உண்மை, நிலைமை, நியாயம், வாய், மன்றம், சரதம், பட்டாங்கு |
பிங்கலம் – 1089 நாமதீபம் – 655, 671 |
|
வக்கணையின் பெயர் |
வாசகம், பாசுரம் |
நாமதீபம் – 654 |
|
வஞ்சிப்பா |
ஆசிரியப்பா விகற்பித்து வருவது |
பிங்கலம் – 2082 |
|
வடசொல் |
ஆரியம், சங்கிருதம், அண்டர் சொல், பிராகிருதம், கிரந்தம் |
நாமதீபம் – 657 |
|
விரித்துரை |
பதவுரை, கருத்துரை, தொகுத்துரை முதலிய பகுதிப் பொருளையுடையது. |
பிங்கலம் – 2073 |
|
வழுச்சொல் |
கொஞ்சல், மிழலை, உல்லாபம், குதலை, மழலை, உழறல், குழறல் |
நாமதீபம் – 669 |
|
வாசகம் |
வசனம், பாசுரம், வார்த்தை. |
பிங்கலம் – 2003 |
|
வாழ்த்தல் |
ஆசிடை, ஆசி |
பிங்கலம் – 2008 |
|
வினா |
யார், யாது, எ, கொல், எவன், யா, என், ஆ, ஏ, ஓ, கடா, உசா, கடாவல், சிரவணம், கேள்வி |
பிங்கலம் – 2100, 2028 நாமதீபம் – 656, 672, 674 |
|
வினாவல் |
கடாவல் |
பிங்கலம் – 2028 |
|
வினாவிடையாகப் பேசுதல் |
சல்லாபம், பரத்தாபம், பிரசங்கம் |
பிங்கலம் – 2106 நாமதீபம் – 677 |
|
வெண்பா |
முதற்பா, வெள்ளை, முற்பா |
பிங்கலம் – 2079 நாமதீபம் – 658 |
|
வேண்டிக்கொள்ளுதல் |
ஓம்படை, வேண்டல் |
நாமதீபம் – 671 |
|
வேத மார்கம் |
வைதிகம் |
பிங்கலம் – 2065 நாமதீபம் – 662 |
|
வேதத்தின் உட்பொருள் |
உபநிடதம் |
பிங்கலம் – 2064 நாமதீபம் – 662 |
|
வேதம் |
இருக்கு, சுருதி, மறை, எழுதாக் கிளவி, ஆதிநூல், சாகை, ஆரணம், ஓத்து, பொதுநூல், எழுதாக்கேள்வி |
பிங்கலம் – 2059 நாமதீபம் – 662 |
|
வேற்றுமை உருபு |
ஐ, ஆல், ஒடு, கு, இன், அது, கண், ஆல், விளி, பெயர் |
பிங்கலம் – 2106 நாமதீபம் – 677 |
முடிவுரை
அறிவு, அறியாமை, அறிவின் திரிபு, அறிவின் திறம், அறிவின் மிகுதி, அறிவின்மை, அறிவு நுட்பம், அறிவுடைப் பொருள், பேரறிவு, கல்வி, பா, பாட்டு, பாயிரம், வடசொல், வினா, வேதம் முதலான அறிவின் பெயர்கள் பிரித்து ஆராயப்பட்டுள்ளன. அகராதி வடிவில் அட்டவணையில் 131 அறிவுப்பெயர்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
உதாரணத்திற்கு அறியாமை என்ற அறிவுப்பெயரை எடுத்துக்கொண்டால் எய்யாமை, அறிமடம், அறிந்தும் அறியார் என 4 பொருளில் இடம்பெற்றுள்ளன. அப்பொருள்கள் பிங்கலம் 2299, கயாதரம் 322, பொதிகை 282, பாரதிதீபம் 399, சூடாமணி 574 ஆகிய நிகண்டுகளில் இடம்பெற்றுள்ளன. இம்முறையில் 131 அறிவுப்பெயர்களும் இக்கட்டுரையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
சொற்களின் பட்டியல்தான் ஒரு மொழியின் வரலாறு காட்டுபவை. சொற்களின் பட்டியலை வெளியிட்ட நூல்களைப் பாதுகாப்பதும், அவற்றை அடுத்த தலைமுறையினருக்குக் காட்சிப்படுத்தி அவைபோல இன்றைய சூழலில் புதியதாகத் தொடங்குகின்ற அனைத்துத் துறைகளுக்கும் சரியான பொருளுடைய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்திப் பாதுகாப்பது தான் தமிழ் வளர்ச்சிக்கான பணியாக அமையும்.
துணைநூற்பட்டியல்
- ச.வே. சுப்பிரமணியன் (ப.ஆ), தமிழ் நிகண்டுகள் (தொகுதி - 1,2), மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் - 608 001. முதற்பதிப்பு, டிசம்பர் - 2008.
- மு. சண்முகம் பிள்ளை, நிகண்டுச் சொற்பொருட் கோவை, பதிப்புத் துறை, மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 625 021. முதற்பதிப்பு, (1982).
- மா. சற்குணம், தமிழ் நிகண்டுகள் ஆய்வு, இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை - 14. ஆகஸ்டு 2002.
- வீ.ஜே. செல்வராசு, தமிழ்ச் சொற்றொடர் அகராதி (தெசாரசு), மெய்யப்பன் பதிப்பகம், 53 புதுத்தெரு, சிதம்பரம் - 608 001. முதற் பதிப்பு மே 2003.
- வெ. பாலமுருகன், இரா. மோகனா, நிகண்டு ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம் - 608 001. முதற் பதிப்பு நவம். 2009.
- முனைவர் கி. சுமித்ரா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), மல்லுப்பட்டி, பாலக்கோடு, தருமபுரி – 636 805