Big Ben


உலகிலேயே பெரிய கடிகாரம் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலணடனில் உள்ளது. அந்நகரில் உள்ள நாடளுமன்ற மாளிகையின் மேல் உச்சியில் அமைந்துள்ளது. இங்கிலாந்தில் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (BBC) என்ற நிறுவனம், வானொலியையும் தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறது. இதில் ஒலி – ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின்போது, இதை குண்டு வீசித் தகர்க்க, ஜெர்மனி எவ்வளவோ முயன்றது. ஆனால் அதன் முயற்சி பலிக்கவில்லை.