தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 2 கப்
வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 5
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்துமல்லி - 1 கப் (அரிந்தது)
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - அரை லிட்டர் 

செய்முறை:

கடலைப்பருப்பை 4 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த கடலைப்பருப்பை மிக்ஸியில் போட்டு பாதி பாதியாக கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சிறிதாக அரிந்து கொள்ள வேண்டும்.  அரைத்த கடலைப்பருப்புடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்தவுடன், பருப்பு கலவையை உருண்டைகளாக செய்து, அதை கைகளினால் வட்டமாக தட்டி போட வேண்டும். வடைகள் சிவந்தவுடன் அதனை எடுத்து விட வேண்டும்.

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.