தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு: கால் கிலோ
பால்: 100 மில்லி
தேங்காய்: அரை மூடி
எண்ணெய்: 100 கிராம் ரவை: 50 கிராம்
சர்க்கரை: 150 கிராம்

செய்முறை:

முதலில் தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் பாலை காய்ச்ச வேண்டும். அதன் பின்பு பால், சர்க்கரை, ரவை, தேங்காய் துருவல் ஆகியவற்றை மாவில் போட்டு நன்றாக பிசைய வேண்டும். பின்பு தோசை கல்லை வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் மாவை போட்டு அடையாகத் தட்ட வேண்டும். அதை சுற்றி எண்ணெயை விட வேண்டும். வெந்ததும் திருப்பிபோட்டு எடுத்தால் இனிப்பு அடை சாப்பிடத் தயார்.

Pin It