தேவையான பொருட்கள்:

கோழிக்கறி: 400 கிராம்
முட்டை: 2
கார்ன்ஸ்டார்ச்: 2 மேசைக்கரண்டி
சோயா சாஸ்: 2 மேசைக்கரண்டி
சில்லி சாஸ்: 2 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம்: 2
பூண்டு: 7
பச்சை மிளகாய்: 7
குடை மிளகாய்: 3
வினிகர்: 2 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ: கால் தேக்கரண்டி
மிளகுத்தூள்: அரைத் தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு 

செய்முறை:

கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அத்துடன் 2 மேசைக்கரண்டி கார்ன்ஸ்டார்ச், ஒரு மேசைக்கரண்டி சோயா சாஸ், ஒரு மேசைக்கரண்டி சில்லி சாஸ், தேவையான உப்பு சேர்த்து கலந்து, அதில் சிக்கன் துண்டுகளைப் போட்டு பிரட்டி சுமார் அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். வெங்காயத்தை தோலுரித்து நான்காக நறுக்கி, அதை குறுக்கு வாட்டில் இரண்டாக நறுக்கி, இதழ்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும். பூண்டினைத் தோலுரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். 

பச்சை மிளகாயின் காம்பு நீக்கி, நறுக்கிக் கொள்ள வேண்டும். குடை மிளகாயையும் கழுவி, விதைகளை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு தேக்கரண்டி கார்ன்ஸ்டார்ச் எடுத்து மூன்று மேசைக்கரண்டி தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி, சிக்கன் துண்டங்களைப் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும். பிறகு எண்ணெய் உறிஞ்சு காகிததில் போட்டு எண்ணெய்யை சுத்தமாக வடித்து விட வேண்டும். 

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கின பூண்டினைப் போட்டு இலேசாக வதக்க வேண்டும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். அதன் பிறகு குடை மிளகாய்த் துண்டங்களைச் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு மீதமுள்ள சோயா சாஸ், சில்லி சாஸ், அஜினோமோட்டோ, உப்பு, மிளகுத்தூள், கார்ன்ஸ்டார்ச் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து, அத்துடன் சிக்கன் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். சிக்கன் துண்டங்களுடன் சாஸ் நன்கு படிந்ததும், இறக்கி சூடாகப் பரிமாற வேண்டும்
.

 

Pin It