தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 4

உருளைக்கிழங்கு - 1

பெரிய வெங்காயம் - 1

வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி

மல்லித் தூள் (தனியாதூள்) - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

எலுமிச்சம்பழச் சாறு - ஒரு மேஜைக்கரண்டி

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 3 பல்

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

 

செய்முறை

உருளைக்கிழங்கைத் தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். குக்கரில் உருளைக்கிழங்கு, வெங்காயம், முருங்கைக்காய் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீருடன் சேர்த்து 3 விசில் வரை வேகவைக்க வேண்டும். குக்கரில் ஆவி அடங்கியதும், முருங்கைக்காயின் சதைப் பகுதியை தனியே வழித்தெடுக்க வேண்டும். உருளைக்கிழங்கு, வெங்காயத்தை தனியே எடுத்து அரைக்க வேண்டும். ஏற்கனவே குக்கரில் வேகவைத்த தண்ணீரில் முருங்கைக்காய் விழுது, உருளைக்கிழங்கு வெங்காய விழுதைச் சேர்த்து கலக்க வேண்டும்.

மல்லித்தூள், பச்சை மிளகாய், பூண்டு, மிளகுத்தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். வெண்ணெயை உருக்கி அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம் கலந்த வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்ததும் இறக்கி வைத்து எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து பரிமாற வேண்டும்.

Comments

1 comment

1
கி.பிரபா
முருங்கைக்காய் முற்றியவை 6 தேவை.அவற்றை நன்றாக வேக வை. பின் உள்ளிருக்கும் விதையையும் சதையையும் அரைப்பானில் பசை போல செய்.அரைத்த விழுதில் தேவையான அளவு மிளகுத்தூள்,உப்புபோடு.சூடான நீரில் அரைத்த விழுதைப் போட்டு கரைசலாக்கி அவற்றை அடுப்பில் வைத்து சிறிது சூடாக்கி குடித்து வந்தால் சர்க்கரை நோய்,களைப்பு,மயக்கம்,புளிப்பு ஏப்பம்போன்ற்வை வராது. அவரவர் வீட்டிலுள்ள அடுக்களையே மருத்துவமனை.அங்குள்ள பொருட்களே அன்றாட மருந்து ஆகும்.இதுதான் முருங்கைக்காய் சூப்பாகும். நன்றி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.