தேவையான பொருட்கள்

பூண்டு – 500 கிராம்

கடுகு - ஒரு மேசைக்கரண்டி

பெருங்காயதூள் - ஒரு மேசைக்கரண்டி

எலுமிச்சைபழம் - 10

வெந்தயம் - ஒரு மேசைக்கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு சிட்டுகை

காய்ந்த மிளகாய்த் தூள் - 150 கிராம்

நல்லெண்ணெய் - 200 கிராம்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சைப் பழத்தை நறுக்கி சாறுபிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள், பெருங்காயத் தூள் போட்டு, அதனுடன் பூண்டையும் போட்டு வதக்க வேண்டும். பூண்டு வதங்கி பொன்னிறமாக வந்தவுடன் உப்பு சேர்க்க வேண்டும்.

பூண்டு நன்கு வதங்கியவுடன் எலுமிச்சைப்பழச் சாற்றை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். சாறு வற்றியவுடன் மிளகாய் தூளை கொட்டி கிளற வேண்டும்.

நன்றாக கிளறியபின்பு இறக்கி வைக்க வேண்டும்.

Comments

1 comment

1
இளம்பிறை
வெள்ளைப் பூண்டு - ஊறுகாய்! தக்காளி, உரித்த பூண்டு இவைகளை எண்ணெயில் வதக்குக. உப்பு, மஞ்சள்பொடி, பெருங்காயத்தூள், காரப்பொடி இவற்றைச் சேர்த்து வதக்குக.நன்றாக வதங்கிய பின் இறக்கிவைக்க! பின்னர் கடுகைத்தாளித்துக் கலந்து வைக்க. ஒரு வாரம் கெடாமல் இருக்கும். சிறுகரண்டியில் எடுத்தால் கெடாமல் இருக்குமே!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.