தேவையான பொருட்கள்: வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்த பின்பு உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் ரவையையும் சேர்த்து நன்கு சிவக்க வறுக்க வேண்டும். வறுத்த பிறகு கீழே இறக்கும்போது பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
ரவை - 1 டம்ளர்
நல்லெண்ணெய் சிறிது
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைத் தேக்கரண்டி
இஞ்சி சிறு துண்டு
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தயிர் ஒரு டம்ளர்
புளித்த இட்லி மாவு - 2 டம்ளர்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
பிறகு மஞ்சள்தூள் சேர்த்து, புளித்த இட்லி மாவைக்கலந்து அதனுடன் தயிரையும் ஊற்றி கலந்து மூடி வைத்துவிடவும். அரைமணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி வைத்து எடுக்கவேண்டும்.
கீற்றில் தேட...
ரவா இட்லி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்