தேவையானவை:
 
துவரம் பருப்பு.........................1 ஸ்பூன்
கடலை பருப்பு..........................1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு......................1 ஸ்பூன்
மிளகு ........................................1 ஸ்பூன்
சீரகம்...........................................1 ஸ்பூன்
வெந்தயம் ..................................1 /2 ஸ்பூன்
சுண்டவத்தல் ............................4 ஸ்பூன்
நல்லெண்ணெய்........................4 ஸ்பூன்
கடுகு.............................................1 /2 ஸ்பூன்
துவரம்பருப்பு, கடலைபருப்பு + உளுத்தம்பருப்பு................1 1 /2 ஸ்பூன் ..(தாளிக்க)
புளி.................................................2 எலுமிச்சை அளவு
வெல்லம்..(தேவையானால்)......கொஞ்சம்
மஞ்சள் பொடி.................................கொஞ்சம்
பெருங்காயம்...................................கொஞ்சம்
பூண்டு..தேவையானால்...............10 பல்
மிளகாய்பொடி.................................1 ஸ்பூன்
மல்லி பொடி.....................................2 ஸ்பூன்
உப்பு ..................................................தேவையான அளவு
கறிவேப்பிலை ................................1 /2 ஸ்பூன்

செய்முறை: 
 
vathal_kuzhampu_370துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் + வெந்தயம் இவற்றை கடாயில் எண்ணெய் இன்றி வறுக்கவும். சுண்டவத்தலை கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, நன்கு கருப்பாகும்வரை வறுக்கவும். வறுத்த பொருட்களை மிக்சியில் பொடி செய்யவும். புளியை கொஞ்சம் நீர் ஊற்றி ஊறவைத்து கரைக்கவும். பிறகு, அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, அது காய்ந்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு + கடலைப்பருப்பு போடவும். இவை சிவந்தபின், பூண்டு போட்டு வதக்கவும்.

பின் மிளகாய் பொடி + மல்லி பொடி போட்டு, ஒரு முறை கிளறியபின், உடனேயே புளிகரைசலை ஊற்றவும். (மிளகாய் பொடி ரொம்ப நேரம் இருந்தால் கருகிவிடும். வறுக்காமலும் மிளகாய் பொடியைப் போடலாம்.) இதில் மஞ்சள்பொடி, பெருங்காயம்,வெல்லம்+உப்பு போடவும். பிறகு பொடிசெய்த பருப்பை ஒரு டம்ளர் நீர் விட்டு கரைத்து ஊற்றவும்.

நன்கு கொதித்து, குழம்பு சுண்டி, கெட்டியாக வந்ததும், இறக்கி கறிவேப்பிலையைப் போடவும்.

இட்லி தோசைக்கும் சூப்பராக இருக்கும். தொட்டு சாப்பிட சுட்ட அப்பளம், வடகம் நல்ல துணை. வேண்டுமானால், மிளகுதக்காளி வத்தலை வறுத்தும் இதில் போடலாம்.

Pin It