தேவையானவை:

கோதுமை ரவை............................1 ஆழாக்கு
பாசிப் பருப்பு....................................1 /2 ஆழாக்கு
முந்திரி பருப்பு.................................10
எண்ணெய்/நெய்..............................2 ஸ்பூன்
மிளகு, சீரகம்....................................1 ஸ்பூன்
இஞ்சி.பொடியாய் நறுக்கியது.............1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை..................................1 கொத்து
உப்பு.....................................................தேவையான அளவு

செய்முறை:

ravai_pongal.jpg_370பெரிய கோதுமை ரவையை, வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து, அதில் ரவை, பருப்பு + உப்பு போட்டு, 3 டம்ளர் நீர் ஊற்றி, 4 விசில் வரை வேகவைத்து இறக்கவும்.

குக்கரிலிருந்து ஆவி வெளியேறிய பின், அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய்/நெய் விட்டு, அதில் இஞ்சி, மிளகு, சீரகம் + முந்திரி போட்டு, அது சிவந்ததும், கறிவேப்பிலை போட்டு அதனை, வேகவைத்த ரவையில் கொட்டி கிளறவும்.

இதுவே கோதுமை ரவை பொங்கல்..! செய்வதும் எளிது.! சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உகந்தது.

Pin It