1

மணிரத்னத்தின் கதைக்களம் எப்போதுமே பற்றி எரியும் நாளிதழில் வெளிவரும் பரபரப்பான செய்திகள் அல்லது இதிகாசங்கள்தான். இவற்றை தேர்ந்தெடுப்பதற்கு ஏதாவது காரணங்கள் உண்டா? இந்த இரு கதைக்களங்கள்தான் பணம் கொட்டுவதற்கான வழிமுறைகளாக உள்ளன. இதை விட்டு விட்டு அவர் வேறு எதையும் தேர்தெடுப்பது அபூர்வம். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு புராணங்களும் இதிகாசங்களும் எப்போதுமே அமுத சுரபிகளாக உள்ளவை. என்னதான் புராணங்களையும் இதிகாசங்களையும் தழுவி திரைப்படங்களை எடுத்தாலும் அவை சந்தை என்ற அளவில் இந்து மக்கள் மட்டுமே பார்த்து தொலையக் கூடிய படங்களாக உள்ளன. எனவே அவற்றை விட்டு விடுவோம்.

raavanan_340பற்றி எரியும் சமூகப்பிரச்சினைகளை திரைப்படமாக எடுத்தால் அவை அனைத்து தரப்பினராலும் பார்க்கப்படும். போதாக்குறைக்கு முற்போக்கு முகமும் கிடைக்கும். இதே பாணியில் மதக் கலவரங்கள் மற்றும் காஷ்மீர் பிரச்சினையை மையமாகக் கொண்டு தமிழக சந்தையிலிருந்து அகில இந்திய சந்தை வரை விரிவுபடுத்த திட்டமிட்டு முதன்முதலில் எடுத்த படம் தான் ரோஜா. அதனைத் தொடர்ந்தது பம்பாய். ஆனால் இப்போது யாரும் இந்திய சந்தையோடு நின்று விடுவதில்லை. அகில உலக சந்தையை குறி வைத்துதான் படங்கள் எடுக்கப்படுகின்றன.  அதனால்தான் சந்தைக்காகவும் பணத்தை அள்ளுவதற்காகவும் படத்திற்கு கதையை தேர்வு செய்வதில் மணிரத்னத்திற்கு கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

காஷ்மீர் பிரச்சினை குறித்து நாளிதழில் வந்த செய்தி கத்தரிப்புகளின் ஆழமான பொது அறிவுடன்தான் ரோஜா எடுக்கப்பட்டது. பம்பாயும் அப்படித்தான் எடுக்கப்பட்டது, கூடுதலாக அவருக்கு படம் ஓட கை கொடுத்தது மனிஷா கொய்ராலாவின் கவர்ச்சியும் வட இந்திய இந்துக்களின் மத உணர்வும்தான். பல ஆயிரம் பேர் கொத்து கொத்தாக செத்து மடியும் பிரச்சினைகள்தான் மணிரத்னத்திற்கு இந்திய அளவில் கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகள். இதில் வெளிப்படும் அனுதாபத்தில் ஆதாயம் தேடுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 2

.இந்தியாவின் தரம் மிக்க இயக்குனரை இப்படி பேசலாமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் வடகிழக்கில் அன்றாடம் கொல்லப்படும் மக்களிடையே நீங்கள் இருக்க நேர்ந்தால், அங்குள்ள பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதற்கு சாட்சியாக நீங்கள் இருந்தால், உங்கள் குடும்பமே இராணுவத்தினால் சுட்டு கொல்லப்படும் சூழ்நிலை இருந்தால் நீங்கள் எப்படி மனிஷா கொய்ராலாவுடன் டூயட் பாடுவதை ரசிக்க முடியும்? கன்னத்தில் முத்தமிட்டால் இரக்கமே இல்லாத போராளிகளாக ஈழப்போராளிகளை சித்தரிக்கவில்லை. அவர்களின் இரக்கமின்மையால் குழந்தை அனாதையாவதை வைத்தே கதை பின்னப்பட்டிருக்கும். எதை வைத்து அனுதாபத்தை உருவாக்குகிறார்? அந்த அனுதாபத்தில் எப்படி குளிர்காய்கிறார் என்பதுதான் இங்குள்ள முக்கிய பிரச்சினையே.

அஞ்சலியில் கேவலமான முறையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தையை வைத்து ஆதாயம் தேடினார். இது எப்படி ஆதாயமாகும் என்ற கேள்வி எழுப்பவர்கள் அந்தப் படத்தை மனதில் ஒரு முறை ஓட விட்டு பாருங்கள். கதையின் களம் உயர் தர நடுத்தர வர்க்கம். மிக அழகான குழந்தை. அனைவரின் கவனத்தையும் பரிதாபத்தையும் ஈர்க்கும் ஒரு குழந்தை மரணிப்பதை யார்தான் பொறுத்துக்கொள்வார்? திரையரங்குகளில் அனுதாபத்தால் கூட்டம் குவிந்தது. மணிரத்னத்திற்கும் காசு குவிந்தது. ரோஜாவின் இந்திய தரப்பு (அ)நியாயத்தையே ஒரு அழகிய கதாநாயகியின் மூலம் எடுத்து வைத்தார். பம்பாயில் யார் குற்றவாளி என்பதையே பூடகமாகக் கூட தெரிவிக்காமல் மூடி மறைத்து குற்றவாளியையும் (இந்து மதவெறி அமைப்பினரையும்) தாக்குதலுக்குள்ளான சிறுபான்மையினரையும் சமப்படுத்தினார்.

அவருடைய பெண்கள் குறித்த பாலியல் பார்வையோ ஆண்களின் மீது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இரண்டு பொண்டாட்டிக்காரர்களின் மன அழுத்தத்தை அவர்களின் மீது பரிதாபம் வரும்படி அக்னி நட்சத்திரத்தில் சித்தரித்தார். திராவிட இயக்கக்களின் வரலாற்றையே மோசடியாக இருவரில் காட்டினார். இதனைத் தொடர்ந்து தளபதியும் இப்போதைய ராவணனும் இதிகாசங்களின் உல்டாக்கள். அதுவும் மணிரத்னம் பிராண்டு முற்போக்கு உல்ட்டாக்களாக வந்துள்ளன. அவரின் அறிவு ஆழத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்தோம். கிராமங்கள் குறித்த இன்னொரு பார்வையையம் பார்ப்போம். அமெரிக்கா ரிட்டர்ன் மயிலாப்பூர் மாமியையும் அம்பியையும் திருநெல்வேலிக்காரர் மாதிரி பேச வைத்தால் என்ன நடக்கும்? ஏதாவது ஒட்டோ உறவோ இருக்குமா? செயற்கையான பாவனைகள்தான் மிஞ்சி நிற்கும். செயற்கைகளின் மொத்த உருவமாகத்தான் ஏற்கனவே ரோஜா இருந்தது, இப்போது ராவணன் உள்ளது.

3.

இதிகாசமான ராமாயணத்தை எடுக்கிறேன் என்று எடுத்துத் தொலைந்தாலும் பரவாயில்லை, அதில் ராவணன் பாத்திரத்திற்கு மனதில் இரக்கம் உள்ளதாகவும் இராமனுக்கு இரக்கமே இல்லாதவனாகவும் பாத்திரப்படைப்பு வேறு. சூர்ப்பனகையாக பிரியாமணியை பாலியல் வன்முறைக்குள்ளாகி உள்ளார். இதைத் தவிர அனுமனாக கார்த்திக்கையும் நிராயுதபாணியில் ராவணன் சாவதாகவும் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன, இல்லை சிதைக்கபட்டுள்ளன.

திருநெல்வேலி மக்கள் அவ்வளவு கருப்பாகவும் அவர்கள் ஏதோ காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். இது மிக வன்மையாக கண்டிக்கத்தக்க வேண்டிய வக்கிரமாக வெளிப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இப்படிப்பட்ட இடம் எங்கே உள்ளது? ரிலையன்ஸ் அம்பானியின் பணத்தில் நாயகன் விக்ரமும் பிரபுவும் மேட்டுக்குடித் திமிர் பற்றி அடிக்கடி வசனம் பேசுகிறார்கள். இதில் சுகாசினி மாமியின் வசனம் வேறு.

raavanan_500

மணிரத்னத்தின் படங்களில் எல்லாமே செயற்கையாக இருக்கும் என்பதற்கு இந்த படத்தில் பல இடங்களைக் கூறலாம். கதாபாத்திரங்கள் காட்சிகளில் அறிமுகவாவதும்,  பாடல்களும் திடீரென்று குதிப்பதாக உள்ளன. வீரய்யாவும் அவர்களது கூட்டாளிகளும் எங்கிருந்து வருகிறார்கள், என்ன செய்கிறார்கள்? திருநெல்வேலி தமிழ் பேசுபவர்கள் காட்டுக்குள் வாழ்கிறார்கள். அங்கு திடீரென்று பங்களாக்கள் முளைக்கின்றன. வீரய்யா அதாவது ராவணனின் தங்கை சூர்ப்பனகை பாலியல் வன்முறைக்குள்ளாவதால் அதற்குக் காரணமான போலீஸ் அதிகாரி பிருத்விராஜ் அதாவது ராமரின் மனைவி ஐஸ்வர்யாராயை கடத்தி பழி வாங்குகிறார். இந்தக் கடத்தல் படம் முழுவதும் ஓடுகிறது.

கடத்தல் காட்சிகளில் இருந்த விறுவிறுப்பு பின்னர் படிப்படியாகக் குறைந்து இடைவேளைக்கு முன்னரே படம்பார்ப்பவர்களுக்கு சோதனையாகி விடுகிறது. பின்னர் மனம் திருந்தி மனிதாபிமானத்துடன் வீரய்யா போலீஸ் அதிகாரியின் மனைவியை அவரிடம் விட்டு விடுகிறான். அவன் மனைவியை சந்தேகப்பட மனைவி திரும்பி வீரய்யாவிடம் திரும்பி வந்து சேருகிறாள். அப்போது பின்தொடர்ந்து வரும் போலீஸ் அதிகாரி வீரய்யாவை சுட்டுக் கொல்கிறான். அவனிடம் காதலா அல்லது பச்சாதாபமா என்ற இனம் காண முடியாத குரலில் வீரய்யா என்று கத்துவதோடு படம் முடிகிறது. இந்தக் கதையை எடுப்பதற்கு பல இடங்களில் சுற்றி அலைந்துள்ளனர். பல நட்சத்திரங்கள் என பெரும் படையே உள்ளது. மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குனர் இதற்காக இவ்வளவு ஏன் மெனக்கெட்டார் என்பது கடைசி வரை புரியவில்லை.

 4

கதைக்காக குப்பையைக் கிளறியுள்ளார். அதற்காக மட்டும் மக்கள் இந்தப் படத்தை நிராகரிக்கவில்லை. படம் முழுவதும் உள்ள சுகாசினி மாமியின் மேட்டுக் குடிமைத்தனம் பாணியிலான வசனங்கள். ஆனால் திருநெல்வேலி வழக்கில் பேசுகிறார்கள். சில இடங்களில் முணுமுணுக்கிறார்கள். இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஒரு பாடலில் மாவை அப்பிக்கொண்டு ஆடுகிறார்கள். அதில் இடையிடையே மீன்களை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுகிறார்கள். எதற்காக என்று தெரியவில்லை.

சாதாரணமான வணிகப்படத்தில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. அப்படங்களில் இருக்கும் நேர்த்தியும் கூட இதில் இல்லை. இப்படம் மக்களால் இயல்பாகவே நிராகரிக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மக்களின் மொழியில் கூற வேண்டுமானால் 'என்னலே கோட்டித்தனமாக எடுத்திருக்கே!'

கடைசியாக ஒரு விடயத்தை கூறியே ஆக வேண்டும். இதுவரை மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படங்களில் அவர் மிக உயர்தர மேட்டுகுடியாக வாழ்ந்தாலும் ஆளும் வர்க்கங்களின் பார்வையிலேதான் எல்லா திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. அவரது திரைப்படங்களிலுள்ள பாத்திரப்படைப்புகள் எப்போதும் அவரது கதையைப் போலவே ஒட்டாமல் படு செயற்கையாக அமைந்திருக்கும். இனிமேலும் பிரச்சினைகளுடன் அய்க்கியப்படவோ அவரால் மக்களையோ அவர்களின் வாழ்க்கையின் நுணுக்கங்களையோ பார்க்க முடியாது. ஒரு கலைஞனைப் போல முன்னரும் சரி இப்போதும் சரி பார்க்க முடியாது. இதுபோன்ற கலைச்சேவையை விட்டுவிட்டு மாம்பலத்தில் ஏதாவது ஓட்டல் துவங்கி நடத்தினால் தமிழக மக்கள் தப்பிக்க வாய்ப்புண்டு.

- சேது ராமலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

27 comments

27
மதியழகன் சுப்பையா
''மாம்பலத்தில் ஏதாவது ஓட்டல் துவங்கி நடத்தினால் தமிழக மக்கள் தப்பிக்க வாய்ப்புண்டு''

என்னவே இப்படி சொல்லிட்டியரு,
அவக சாப்பாட்டு கடை ஆரம்பிச்சா எப்படிய்யா தப்பிக்கிறது... அங்கயும் இந்த கிண்டத்தாவே கிண்டுவான். ஹே ஒன்னுகிடக்க ஒன்னு ஆச்சுன்னு என்ன பண்ண... அட தமிழ் நாட்ல எந்தவூருக்காரி ஒத்த மாரப்ப தொறந்து போட்டுகிட்டு அலையுறா?
கவனிச்சியறா, அந்தக் காட்டுச் சிறுக்கி படம் முழுக்க ஒத்த மாற தொறந்து வச்சிருக்காவே...
அட அந்த வீரய்யா சும்மாவா.... பக் பக் பக்குன்னு கோதுமை உருட்டித் திண்ண சேவல் மாதிரி என்னம்மா நெல்லைத் தமிழ்ல அறுத்துக் கட்டுறாரு....
ஏன்யா நீரு பாரட்ட வேண்டாமா...
இந்த படம் பிடிக்கிற பயலுவ ரெண்டு பேரும் நல்ல பிடிச்சிருக்கானுங்களாமே... அதையாவது சொல்லலாமில்லையா...
ஹெவ்வ்.. குருட்டுப் பயலப் பாத்து குருடன்னு சொன்னா அவனுக்கு கோவம் வரும்வே...
இந்தப் பயலுக படத்த திட்டாதிய.... இப்படி நாலு படம் எடுத்து ஓஞ்சி போகட்டும்...

இவகலுக்கு ஓட்டல் தொறக்க ஐடியா தராதிய.. ஏதோ நூறு ரூவா குடுத்து இரண்டு மணி நேரம் கொடும்ன்னா பரவாயில்ல்ல... சாப்பாட கீப்பாட சாப்பிட்டுபுட்டு மனுஷன் காலியாயிடக் கூடாதுவே...

வரட்டா அண்ணாச்சி,
R Nagaraj
படம் சுமார் ரகம்தான் ஆனால் உங்கள் விமர்சனம் படு மோசமான சாதீய கண்ணோட்டத்தில் எழுதப் பட்டுள்ளது. ஒரு பார்ப்பனன் எடுத்திருக்கிறான் என்றால் எதையாவது எழுத வேண்டுமே அதுதான் முற்போக்குத்தனம் என்ற தட்டையான பார்வை.. படத்தை விட உங்கள் விமர்சனம் படு மோசம்
r.moorthy
படத்தில் பல குறைகள் இருந்தாலும் சும்மா குருட்டாம்போக்கில் சாதீய காழ்புணர்ச்சியால் நீங்கள் விமரசிதுளீர்கள். ராமனை ஒரு கோழையாக காண்பித்தும் உங்களுடைய பார்பன எதிர்ப்பு மனப்பான்மையால் படத்தை குறை சொல்கிறீர்கள். விடுதலை புலிகள் மட்டும் என்ன சிறுவர்களுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி தரவில்லையா என்ன..
murugan
padatha veda vemarsanam romba mattam
Balaji
Thappu kandupidikratha vida nalla visyankala paratti encourage panravan than nalla vimarsagan.. Ninga first nalla rasigane kedaiyathu.. rasanaiyum kedayathu..
KA sj
I think your analysis and interpretations are most probably not thought of by the Director himself any way i enjoy going thro' them and it gives me a lot of insight. Thankyou so much.
augustine
மணிரத்னத்தின் படங்கள் குறித்த விமர்சனத்தின் மீதான பின்னு£ட்டங்கள் பற்றி - சேது

1. எனது விமர்சனம் தட்டையானது, படம் எடுத்தவர் பார்ப்பனர் என்பதால் மட்டமாக விமரிச்சித்து உள்ளேன் என்றெல்லாம் எதிர்விமர்சனம் செய்துள்ளனர். எப்படி தட்டையாக உள்ளது, எந்த இடத்தில் பார்ப்பனர் என்று விமர்சித்து உள்ளேன் என்றெல்லாம் அந்த எதிர் விமர்சனங்களில் விளக்கம் இல்லை. முதலாவதாக என்னுடைய விமர்சனம் அரசியல் சார்ந்தது. மணிரத்னம் முன்வைக்கும் கருத்தியல், அரசியல் பார்வை அவருடைய நிலைகள் பற்றி மட்டுமே விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

2.ஒரு பிரச்சினையை பற்றி படம் எடுக்கும்போது குறைந்த பட்ச ஆய்வாவது மேற்கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு மிக மேலோட்டமான நாளிதழ்களில் வந்த செய்திகளை (அதுவும் மிக அப்பட்டமான ஒரு தலை சார்புள்ள மதவெறி கண்ணோட்டமுடைய நாளிதழ்கள்) மட்டும் வைத்து எடுக்கப்பட்ட படங்களை ரோஜா ,பம்பாய் போன்ற படங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ என் விமர்சனத்தில் அப்படி எதிர் கொள்ளப்பட்டது.

3.இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம் ஏன் அவர்கள் போராடுகிறார்கள்? இந்த அடிப்படை கேள்விக்கு கூட போகாமல் ஒரு இயக்குனரால் எப்படி படம் எடுத்து இந்தியா முழுவதும் வெளியிட முடிகிறது?

4.வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சினை ,காஷ்மீர் பிரச்சினை,மும்பை மதக்கலவரங்களின் பின்னணி -இவறறின் வரலாறு கூட தெரியாமல் படம் எடுக்க முடியுமா? அதுவும் இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு இயக்குனரால்.

5.அனைத்து பிரச்சினைகளும் மணிரத்னத்திற்கும் தெரியாமல் எடுக்கவில்லை. தெரிந்தே அவர் சார்ந்துள்ள வர்க்க மற்றும் சாதிய கண்ணோட்டத்திலிருந்து எடுத்துள்ளார். மிகக்கொடுரமாக இராணுவத்தினரால் வதைக்கப்படும் மக்கள் மத்தியில் எப்படி டூயட் எடுக்க முடியும் அந்த மனநிலை யாருடையது என்பதை சிந்திக்க வேண்டும்

6.காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் மணிரத்னத்தின் படங்களை நியாயமாக பார்த்தால் கடுமையாக எதிர்க்க வேண்டும் . அப்படிப்பட்ட அரசியல் சூழல் இல்லை என்பதால் மணிரத்னம் போன்ற பில்டப்பில் மட்டுமே வாழும் இயக்குனர்கள் மஞ்சள் குளிக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

7.இது தொடர்பான ஆரோக்யமான அரசியல் விவாதங்களை எதிர்நோக்குகிறேன். மணிரத்னம் படங்கள் வெறும் வணிக ரீதியான படங்கள் என்று புறந்தள்ள முடியாது. அப்படங்கள் குறிப்பிட்ட அரசியல் விழுமியங்களை (மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்வியலில்)உருவாக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
R Nagaraj
///மணிரத்னம் படங்கள் வெறும் வணிக ரீதியான படங்கள் என்று புறந்தள்ள முடியாது. ///
Puranthalla vendum... adhu thaan pirachinaye.... Neengal eann avarukku peria ''olivattam'' kattukireergal enpathu thaan en kelvi... sarva nichiyamaai sarva sathiyamai avar oru vaniga nookku director... avar annan oru chartered accountant vanigam seithu tharkolai seithu konda oru vaniga kudumbam avarudaiyathu... vaniga nookkam illamal oru aal rajini kamal vikram endru herovai poduvaana... en varutham ellam murpokku endru sollikkondu ethaiyavathu parpaneeyam mettukudi endru neengalthaan avarai vaiththu builtup kodukureergal... alasa neraya pirachanai irukkuthu ayya.. athai ungalidam edhirpaarkireen
ANNIYAN
Summa etho sollaumunu sollurathu romba thabbu.... ungalukku ravanan pudikkalaya illa manirathnam pudikkalaya..... oru nalla vimarsanam yaaraiyum punpaduthama ezhuthurathu thaan....
venkatesh
முற்போக்கு என்றால் சிறுபாண்மையினரை கண் மூடி தனமாக ஆதரிப்பது. இந்துக்களை எதிர்ப்பது தானா?

முஸ்லீம் தீவிரவாதிகளால் ,இந்துக்கள் பாதிக்கபட வில்லையா?

பெருவாரியான மக்கள் இங்கு இந்துக்கள்,அப்படி இருக்க இந்து மதத்தை எதிர்ப்பது அந்த மக்களின் மத உணர்வை மதிக்க வில்லை என்பதாகும்,

ஒரு பெருவாரியான மக்களை மதிக்காத நீ எப்படி மக்களுக்காக குரல் கொடுக்க முடியும்,
**** விமர்சனம் சாதிய ரீதியானது.
சாதி வேறுபாடு நம் நாட்டில் இருக்கிறது மறுக்கவில்லை, அதற்காக இந்து மதத்தை எதிர்ப்பது,இந்துக்களை எதிர்ப்பது , இஸ்லாமியர்கள் ஆதரிப்பது தான் வழி அல்ல, இது பிரச்சனையை தீர்க்காது,
* முற்போக்குவாதி அல்ல, பிற்போக்குவாதி,
இந்துக்களின் மூடநம்பிக்கையை திருத்துவதும், இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருந்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிலர் செயல்படுவதை தடுப்பதே முற்போக்கு.
afsal
nan ithuvarai ippadi yosithathillai, ungalai pondravaruku than ivvalavu aalamaga yosikka mudium nanru
shah
Indhia-vil muslim theeviravaathikal mattum illai, indhu theeviravaathikal, matha-saarpattra theeviravaathikal endru neraiya theeviravaathikal ullanar.
durail ilamurugu
நணபரே,
இன்றைய தமிழ் திரைப்பட சூழலில் ராவணன் ஒரு மாறுதலனா படம் என்று கூறிகிறார்கள். வெறும் கத்தல் , வடிவேலுவின் நகைச் சுவை கதானாயகிகளின் ஆட்டம் , 10 பேரை அடிக்கும் கதை நாயகன் என்று இருக்கும் சூழலில் வாதம் செய்யும் படியான கருத்துகளைக் கொண்ட படங்கள் மிகக் குறைவே .
அவருடைய வர்க்க கருதை சொல்லுவதற்காக் மணி ரத்தினம் படம் எடுப்பதில் என்ன தவறு ?. கருத்துகளே இல்லாமல் வெறும ஆபசக் குப்பைகளாக மிகப் பெரும்பனமையான தமிழ் படங்கள் வரும் போது இது மாறுதல் தானே. மனிரத்தினம் போன்ற பார்ப்பனர்கள் கூட ராவணனைப் பற்றி வேறு விதமாக சிந்திக்க முயன்றிருக்கிறார் என்பது பெரியாரின் கருத்தியலுக்கு கிடைத்த வெற்றியாகும். அதை அவரால் முழமையாக செய்ய இயலவில்லை ஆனால் எதுவுமே செய்யாமல் அரைத மவையே அரைப்பதைவிட இது ஒருவகையில் பரவாயில்லை தான்
Rajendran
If you notice properly maniratnam has justified ravanan and his heroics. he substantiates that by showing how pure/honest/truthful ravanan is when compared to raman. I agree there are lot of sensationalism, grandeur in maniratnam;s movies but there is a strong message in this movie. This time for a change he has taken a bold stance. Lets appreciate that.
K.Easwaran
venkatesh
"..முற்போக்கு என்றால் சிறுபாண்மையினரை கண் மூடி தனமாக ஆதரிப்பது. இந்துக்களை எதிர்ப்பது தானா? முஸ்லீம் தீவிரவாதிகளால் ,இந்துக்கள் பாதிக்கபட.."

India and Pakistan was divided on the concept of religion alone. That was the only criteria. Then Kashmir should be with Pakistan, not with India. This is where the criminal democracy of India is nakedly exposed. Kashmir muslims were held hostage by a hindu King with the help of the mighty British (Indian) army. A hindu king, running away, has no legal status to transfer the nationality of the majority community in the modern world. Yes, Kashmiris were majority in their own land and they were made minority against their will by a criminal democratic India. This is the cause of all the problem. I am ashamed to call myself a hindu.
ssk
தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்து உள்ளது என்றெல்லாம் ஆணவத்தின் உச்சியில் நின்று வசனம் பேசியவர் இந்த சுஹாசினி. தமிழன் உழைப்பால் வந்த சோறு உண்ணும் போது அது நினைவில் வராது. இது போல் வேறு எங்காவது இந்த வசனம் பேச வாய் வருமா? அவல வாழ்வு.
Annal Muhammad
அன்புள்ள சகோதரர் ஈஸ்வரன் சரியாக சொல்லியிருக்கிறார். பாகிஸ்தான் இந்திய பிரிவினை மத ரீதியாகத்தான் நடந்தது. ஆனால் அது சர்யாக நடக்கவில்லை. இந்துக்கள் முஸ்லீம்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர். காஷ்மீர் மட்டுமல்ல, கீழக்கரை, ராமநாதபுரம், கேரளாவில் மல்லப்புரம் ஆகிய பகுதிகள் பாகிஸ்தானையே சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ராசாசி என்ற பார்ப்பனரும், கெரளாவில் நம்பூதிர்பாடு என்ற பார்ப்பனரும் சதி புரிந்து இந்த நிலங்களை இந்துக்களிடம் கொடுத்திருக்கிறார்கள். இதனை எதிர்த்து போர் புரிந்து பாகிஸ்தானிடம் சேர்ப்பதே முற்போக்காளார்களின் கடமை.
ராஜ
தளபதி படத்தில் மட்டும் என்ன வாழுதாம், மஹாபாரதத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் துரியோதனனாக மம்முட்டியும் கர்ணனாக ரஜினி பாத்திரமும் இல்லையா? பொதுவாக அவர் சுயமாகயில்லாமல் தழுவல் அதுவும்" தி ஹின்டு" வகையறா
r bathri devanath
மணிரத்னம் படங்கள் வெறும் வணிக ரீதியான படங்கள் என்று புறந்தள்ள முடியாது. aavai atharkkum melaga oru thani manithan sontha karuthukkalai sollum padagal. avai epothume oru samugathin velippado allathu entha oru ilakkanathukkum porunthatha padangal. evaRai naan kandukolvathe illai.
sathees
padaippalikalai kowraviyunkal manam noka vimarsanam ealutha vendam
ekambavanan
என்ன ஒரு அநியாயமான திரை விமர்சனம்? படத்தில் விக்ரமின் கதாப்பாத்திரம் ஒரு சமூக போராட்டக்காரனாக சித்தரிக்கப்பட்டதை பாருங்கள். நடப்பு அரசியல் சூழலில் அவரை பட்டவர்த்தனமாக ஒரு மாவோயிஸ்ட்டாகவோ, விடுதலைப்புலியாகவோ காட்டவே முடியாது, படத்தில் எங்குமே தான் யார் எதற்கு போராடுகிறோம் என்பதை அந்த கதாபாத்திரம் பேச முடியாமல் தவிப்பதை பாருங்கள்.படத்தின் தோல்விக்கு இது பெரிய பங்கானது என்னும் நிஜத்தை காண்பீர், ஒரு ஆரியர் (இயக்குனர்) திராவிடனைத் தூக்கிப்பிடிக்கும் தர்மம் தெரியவில்லையா உங்கள் கண்களூக்கு? இது எதோ உள் நோக்கமான ட் திரை விமர்சனம்
latha ramakrishnan
வணக்கம்,

ராவணன் படம் பற்றிய தனது கருத்துகளைப் பதிவு செய்கையில் மதியழகன் சுப்பையா ”,ஹெவ்வ்.. குருட்டுப் பயலப் பாத்து குருடன்னு சொன்னா அவனுக்கு கோவம் வரும்வே... ” என்று பார்வையற்றவர்களை மதிப்பழிப்பதாய் பேசியிருப்பது தேவையற்றது. மற்றவர்களிடம் மனிதாபிமானம் இருக்கிறதா, சமூகவுணர்வு இருக்கிறதா என்று விமர்சிக்கும்போது நம்மிடம் அது இருப்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமல்லவா?

தோழமையுடன்

லதா ராமகிருஷ்ணன்
பொருளாளர்
வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்
ஊரப்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம்
கண்ணன்
அய்யா,

தங்களின் நோக்கம் பட விமர்சனமா? அல்லது வேறு எதேனும் உள்நோக்கமா? உங்கள் பதிவில் எதுவுமே திரைப்பார்வை சார்ந்ததாகவே இல்லையே? ஏன்?...

அப்புறம், திருநெல்வேலியில், இப்படி ஒரு இடம் உள்ளதா என்ற கேள்வி உங்களுக்கே வித்தியாசமானதாக தோணவில்லை.

அதைப்போல், சினிமாவை வெறும் கேலிக்கூத்தாக எடுக்கும் சில “நபர்களை” விட இது மேல்! முதலில் உங்கள் விமர்சனம் அவர்கள் மீது பாயட்டும்.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டும் தான் ஒரு இயக்குநர் படம் எடுப்பார். நீங்களும், நானும் அதில் விதிவிலக்கல்ல! அதில், கருத்து சிறிதாவது உள்ளதா, என்று மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு சற்று சிறிதே அதிகமாக, விமர்ச்சித்துள்ளீர்கள்!

இந்த சீற்றத்தை அரசியல்வாதிகளின் விமர்சனத்தில் காட்டுங்கள்! இது வெறும் பொழுதுபோக்குதான்.

இதில் வேண்டாமே!
Mohanvel
Islamiyarkalin atharavai peruvatharkkaka kanmoodith thanamaga indukkalin manathai punpaduthuvathu enpathai kolgaiyagave vaithirukkum veenarkal eppothuthan thirunthuvarkalo
anandhan
maniratnam patri vimarsanam seiyya ingey yaarukkum thagudhi illai
stalin
thayavu seithu neengalaam thirai vimarsanam pannathinga sir
RAVANAN
குறை சொல்லும் குரு மார்களுக்கு வணக்கம்ஃMANI NAM THERAI ULAKUKU KIDAITHA ORU POKKISAHM. AVARALATHAN NAMAKU A. R. RAHMAN KIDAICHARU (UNGALUKU ALLAM LOLLU SABA SAINTHANAM THAN CORACT

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.