பைபாஸ் என்னும் பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் சமூக வலைத் தளங்களில் இன்று (30.05.2016) பகிரப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீவ்காந்தி படுகொலையின் போது மேற்கொள்ளப்பட்ட தடயவியல் ‘ஆய்வில் உள்ள, இதுவரை வெளிவராத, அடிப்படை பிழைகளை ஆய்வு செய்கிறது இத்திரைப்படம். மருத்துவர்கள் டாக்டர் ரா. ரமேஷ் மற்றும் டாக்டர் புகழேந்தி அவர்கள் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் விளைவுதான் இந்த திரைப்படம்.
ஒரு வகையில் இது ஒரு பயணக் காவியம். பல ஆண்டுகளாக ஆய்வு செய்து பெறப்பட்ட உண்மையின் அழுத்தத்தை உலகிற்கு உரைப்பதற்கு சக பயணி ஒருவரோடு மேற்கொள்ளும் பயணத்தின் கதைதான் இந்த திரைக்காவியம். பல ஆண்டுகளாக, பல நல்ல நெஞ்சங்கள் திரட்டி தந்த அரிய ஆவணங்களிலிருந்து பிறப்பெடுத்திருக்கிருக்கும் ஒரு துளிதான் இத்திரைப் படம்.
இறுதியில், இதைப்போன்ற முக்கிய வழக்குகளில் சாட்சியங்களாக வரும் வல்லுநர்களின் வாக்குமூலத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு உலக நீதித் துறை உயர்த்திப்பிடிக்கும் டாபர் வரையறை மற்றும் கோட்பாட்டை (Daubert Standard) அமல்படுத்த வேண்டுமென இத்திரைப்படம் வாதிடுகிறது.
இத் திரைப்படம் வணிக நோக்கின்றி சமூக வலைத் தளங்களில் வெளியிடப்படுகிறது. வணிக நோக்கமுமின்றி இந்த திரைப்படத்தை எவ்வித மாற்றமுமின்றி பதிவிறக்கம் செய்து யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தங்களின் காத்திரமான திரை விமர்சனத்திற்காக காத்திருக்கிறோம்.
நன்றி
- பொன் சந்திரன், திரைப்பட குழுவிற்காக