தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் ஒரு புயலாய் உருவெடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படி ஒரு புயல் உருவாகத் தேவையான காலநிலை அப்போது இருந்தது. ‘ரோஜா’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பரவலாய் ஒலித்தபோதும் கூட இளையராஜாவின் இசைத் தாலாட்டில் சொக்கிப் போயிருந்த பலரும் அந்தப் படத்தின் இசையை எப்போதாவது ஒரு படத்தில் நிகழ்ந்து மறையும் அதிசயம் என்றே கூறினர். ஆனால் அந்த அதிசயம் தொடர்ந்தது. ‘ரோஜா’ படத்தின் இசை, தமிழ் மட்டுமின்றி இந்தியத் திரையிசையே அடுத்த சில ஆண்டுகளுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

ரோஜாவில் நடந்த அதே போன்ற சம்பவம் எழுபதுகளின் தொடக்கத்தில் நடந்தது. ‘அன்னக்கிளி’ எனும் திரைப்படத்தில் பண்ணைப் புரத்தில் இருந்து வந்த ராசைய்யா எனும் இளைஞனின் இசையைக் கேட்ட ரசிகர்களுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. தன்னுடைய அடுத்தடுத்த சில படங்களின் மூலம் அன்னக்கிளியில் நடந்தது ஒருபட அதிசயம் இல்லை என்பதைப் புரிய வைத்தான் அந்த இளைஞன். ஒரு புதிய திரையிசை வரலாற்றின் தொடக்கமாகவே ‘அன்னக்கிளி’ அமைந்தது. ஆனால் ‘அன்னக்கிளி’யில் தொடங்கிய இசைப்பயணத்துக்கும் ‘ரோஜா’வில் தொடங்கிய இசைப்பயணத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. இளையராஜா தன்னுடைய இலக்காகக் கொண்டிருந்தது தமிழ்த் திரையிசையை மட்டும்தான். பின்னாளில் அவருடைய பாடல்கள் இந்தி உட்பட இந்தியாவின் பிற மொழிப்படங்கள் பலவற்றில் நகலெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இளையராஜாவுக்கும் இந்தியத் திரையிசை மீதான ஆர்வம் உண்டானது. ஆனால் அது அவருடைய குருதியில் ஊறிய இசை மரபுக்கும், அவருடைய மனநிலைக்கும் ஒத்திசைவானதாக இல்லாமற் போனதால் அந்த முயற்சிகளைக் கைவிட்டார். அது தமிழ் சினிமா ரசிகர்களின் பெரும்பாக்கியமாக அமைந்தது.

எண்பதுகளில் இருந்து தொண்ணூறுகளின் தொடக்கம் வரை ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் இளையராஜாவின் இசை மழையில் தமிழ் மக்கள் திகட்டத் திகட்ட நனைந்தனர். இக்கால கட்டத்தில் திரையுலகமே இளையராஜாவின் காலடியில் கிடந்தது என்பதே உண்மை. படத்துக்கு அவருடைய இசை கிடைத்துவிட்டாலே படத்தின் வெற்றி உறுதி செய்யப்படும் அளவுக்கு உயர்ந்த நிலையில் அவர் இருந்தார். ஒரு ஆண்டின் பிரபலமான பாடல்களைப் பட்டியலிட்டால் அதில் எண்பது சதவீதம் அவருடைய பாடல்களாகவே இருந்தன. இக்காலத்தில் சக இசையமைப்பாளர்களாயிருந்த சங்கர்கணேஷ், டி.ராஜேந்தர், சந்திரபோஸ், தேவேந்திரன், அம்சலேகா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா போன்றவர்களால் இவருடைய உயரத்தை நினைத்துப் பார்க்கக் கூட முடியாத தூரத்தில் இருந்தார். மோகன், ராமராஜன், பிரபு போன்ற நடிகர்கள் சினிமாவில் நீடித்திருந்ததே ராஜாவின் இசையால்தான். ஆர்.சுந்தரராஜன், ஆர்.வி.உதயகுமார், கஸ்தூரிராஜா, பி.வாசு போன்ற இயக்குனர்களும் ராஜாவின் இசையால் உருவானவர்கள்தான். பாரதிராஜா, கே.பாலச்சந்தர், மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாக்கியராஜ் போன்றவர்களை இந்த வரிசையில் சேர்க்க முடியாது என்றாலும், அவர்களின் வெற்றிகளுக்குப் பக்கபலமாக ராஜாவின் இசை இருந்ததை மறுக்க முடியாது.

‘அன்னக்கிளி’யில் இளையராஜா கொண்டு வந்தது மிகப்பெரிய மாற்றம். அதற்கு முன் இருந்த திரை இசை மரபுகளை உடைத்தெறிந்து பட்டி தொட்டியெங்கும் பரவிய புதுவிதமான இசையை அந்தப் படத்தில் இசை ரசிகர்கள் அனுபவித்தனர். அப்படத்தில் ராஜாவின் இசையில் தனித்தன்மையாக விளங்கியது மன உணர்வுகளை மீட்டக்கூடிய தரமான இசைக் கோர்ப்பு. ‘ரோஜா’வில் ரகுமான் செய்ததும் மிகப்பெரிய மாற்றம்தான். ரசிகர்களுக்கு அந்தப் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் புதுமையான விருந்தாக அமைந்தது. ஆனால் ‘அன்னக்கிளி’யின் இசையைக் கடந்து செல்லக்கூடிய, அதை விடவும் தரமான இசையைத் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் இளையராஜாவால் கொடுக்க முடிந்தது. ரகுமானால் அது முடியாமல் போனது. இதில்தான் ராஜாவுக்கும் ரகுமானுக்குமிடையிலான வேறுபாடு அடங்கியிருக்கிறது. இன்னமும் ‘ரோஜா’ படத்தின் இசையைக் கடந்து செல்லக் கூடிய தரமான இசையை ரகுமான் தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ரகுமானின் இசையில் குறிப்பிடத்தகுந்த அம்சமே ஒலி ஆளுகைதான். அவருடைய பல பாடல்களின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தது சத்தங்களில் அவர் நிகழ்த்திய அற்புதங்கள்தான். அந்த வகையில் பார்த்தால் ‘புது வெள்ளை மழை’ பாடலுக்கு இணையான உயர்ந்த ஒலி ஆளுகை உள்ள ஒரு பாடலை அதற்குப் பின் அவருடைய இசையில் கேட்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ரகுமானின் இசை வரலாறு பதினாறு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. இந்தப் பதினாறு ஆண்டுகளை முற்பாதி, பிற்பாதி என்று பிரித்தால் முதல் எட்டாண்டுகளை விட, அடுத்த எட்டாண்டுகளில் அவருடைய புகழ் உச்சத்தை தொட்டது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை யாரும் போகாத உயரங்களுக்கு அவர் சென்றார். தேசிய அளவிலும், உலக அளவிலும் உயர்ந்த பல விருதுகள் அவர் முன் குவிந்தன. ஆனால் தமிழ் சினிமாவில் அவருடைய இசையின் தரமும், தாக்கமும் இதற்கு நேரெதிர் நிலையில் இருந்தன.

முதல் எட்டாண்டுகளில் ரகுமான் இசையமைத்த தமிழ்ப் பாடல்களுடன் ஒப்பிட்டால் அடுத்த எட்டாண்டுகளில் அவர் தந்த பாடல்கள் புகழ் பெறவில்லை என்றே சொல்லலாம். ஒலித் தொழில் நுட்பத்தில் உலகத்தரமான இசையை அவரால் பின் பாதியில் தர முடிந்தாலும், அந்த ஒலிகளை நிர்வகிப்பதிலும், இசையைக் கோர்ப்பதிலும் அவர் பெருமளவு சறுக்கியிருக்கிறார். அதே சமயம் பாடல்கள்தான் புகழ் அடையவில்லையே தவிர, அவருடைய புகழ் வளர்ந்துள்ளது. அவர் இசையமைக்கும் ஒவ்வொரு படத்துக்கும் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டேதான் வந்துள்ளது. ஏமாற்றமும்தான். இந்தக் கட்டுரைக்காக ரகுமான் இசையமைத்த பாடல்களில் பிடித்த பாடல்களை வரிசைப்படுத்தும் படி ஏறத்தாழ நூறு பேரிடம் கேள்வி நிரல் தயாரித்துக் கொடுத்து அவற்றை நிரப்பி வாங்கினேன். (படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியோர், ஆண், பெண், நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் என்று பலதரப்பட்ட மனிதர்களையும் இதில் உள்ளடக்கியிருந்தேன்.) அவர்களால் அதிகம் குறிப்பிடப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவை சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் ரகுமான் இசையமைத்தவை. (மிக அதிகமாக குறிப்பிடப்பட்டிருந்த பாடல் ‘புது வெள்ளை மழை.’)

இந்த மாற்றத்துக்கு காரணம் தமிழ் சினிமாவிலிருந்து அவர் படிப்படியாக விலகிச் சென்றிருப்பதுதான். அவரைப் பொறுத்தவரை வளர்ச்சி என்பதை மாநில அளவிலிருந்து தேசிய அளவுக்கும், தேசிய அளவிலிருந்து உலக அளவுக்குமானதாகப் புரிந்து கொண்டு அவ்வாறான திசையில்தான் பயணித்துள்ளார். முற்பாதிக் காலத்தில் தன்னுடைய இசைத் திறனையும் உழைப்பையும் தமிழ் சினிமாவுக்காக வழங்கிய அவர் பிற்பாதியில் அதிலிருந்து தவறியுள்ளார். ‘ரங்கீலா’, ‘லகான்’ போன்ற படங்களின் வெற்றிக்குப் பின்னர் அவருடைய பார்வை இந்தி சினிமாவின் மீது திரும்பியது. இந்தி சினிமாவிலும் உச்சநிலையை அடைந்த பின்னர் அவருடைய பார்வை உலக சினிமாவின் (உலக சினிமா என்று இங்கு சுட்டுவது ஹாலிவுட் சினிமா என்று புரிந்து கொள்ளவும்.) பக்கம் பாய்ந்தது. அதன் பலனாக இந்தியர்களைக் கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படமான ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைக் கையில் பிடித்துக் கொண்டு வந்தார். தமிழனாக அவருடைய சாதனைக்காக பெருமைப்படுவதா, இல்லை தமிழ் சினிமாவில் இருந்து அவருடைய இசை இன்னும் விலகிப் போய் விடுமே என்று வருத்தப்படுவதா என்று குழப்பமாயிருந்தது.

முதலில் வடக்கு நோக்கி நகர்ந்த அவருடைய இசை, தற்போது மேற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் இளையராஜாவுக்குப் பின் மிகப்பெரும் இசை ஆளுமையாக உருவெடுத்திருக்க வேண்டிய ரகுமான், தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறார். இளையராஜாவின் சிறந்த பாடல்களாக குறைந்தது ஆயிரம் பாடல்களையாவது பட்டியலிட முடியும். ஆனால் பதினாறு ஆண்டுகளில் ரகுமான் இசையமைத்தவற்றில் சிறந்த பாடல்களைப் பட்டியலிட்டால் அதிகபட்சம் நூறைத் தாண்டாது. குறைந்த அளவு படங்களுக்கு மட்டுமே இசையமைத்து ஏமாற்றம் தந்தவர், பிற்பாதிக் காலத்தில் குறைந்த அளவே உழைப்பையும், அக்கறையையும் தந்து மேலும் ஏமாற்றமளித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் ரகுமானின் இசை எந்த அளவுக்கு நீர்த்துப் போயுள்ளது என்பதற்கு அவருடைய சமீபத்திய படங்களே நல்ல உதாரணம். அவர் இசையமைத்த ‘பாபா’, ‘தெனாலி’, ‘சிவாஜி’, ‘உதயா’, ‘கண்களால் கைது செய்’, ‘எந்திரன்’, ‘சக்கரக்கட்டி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘ராவணன்’ போன்ற படங்களின் இசையுடன் ‘ரோஜா’, ‘திருடா திருடா’, ‘டூயட்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘இருவர்’, ‘காதலன்’, ‘காதல் தேசம்’, ‘இந்தியன்’, ‘காதலர் தினம்’ போன்ற படங்களின் இசையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

படித்த மேல்தட்டு வர்க்கத்தினரால் கொண்டாடப்பட்ட ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் பாடல்கள் பெரும்பான்மைப் பிரிவைச் சேர்ந்த மக்களிடம் சென்று சேரவே இல்லை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டு மக்களைப் பெரிதும் கவர்ந்த பாடல்களில் பெரும்பாலானவை ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ் போன்றவர்கள் இசையமைத்தவை. இவற்றில் ரகுமான் இசையமைத்த பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இது போன்ற ஏமாற்றங்களை ஏ.ஆர்.ரகுமான் இனியும் தரக்கூடாது. திசைமாறிச் சென்றுவிட்ட இசைப் புயல், மீண்டும் திரும்பி தமிழ்நாட்டில் ஒரு தென்றலாகவாவது தவழ வேண்டும்.

Comments

48 comments

48
aathmaarthi
கணேஷ் எபியின் இந்தக் கட்டுரை நிறைவைத் தருகிறது.அதே சமயத்தில் சில கேள்விகளை நமக்குள் எழுப்பத்தான் செய்கிறது.ரகுமான் என்னும் மகாகலைஞன் உருவானது தற்செயலான நிகழ்வே.திட்டமிட்டு வந்தவரல்ல ரகுமான்.இன்றைக்கும் பழசிராஜா,அழகர்சாமியின் குதிரை போன்ற தன் முன் வைக்கப்படுகின்ற தேர்வுகளில் இருந்து தனக்கு ஸ்கோர் செய்யக்கூடிய படங்களில் தான் யார் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறார் இளையராஜா.ரகுமான் தொட்ட உயரங்களும் ஆஸ்கார் உள்ளிட்ட அவரது சாதனைகளும் மறுக்க இயலாதவை ஆனால் தொடக்கப்புள்ளியில் இருந்து விலகி தொலை தூரத்திற்குப் பயணப்பட்டு விட்டார் ரகுமான் என்பதே நிஜம்.தான் கிளம்பிய நிலத்திற்கு வெற்றிச் செய்திகளாக வந்து சேர்கிறார் என்பது மறுக்க முடியாதது என்றாலும் கூட,ஆஸ்காரும் இந்தி ஆங்கில படங்களும் சர்வதேச புகழ்பெருமைகளும் ரகுமானின் தனி வாழ்வில் பெருமைகளாக இருக்கலாமே தவிர தமிழ் மக்களை கடந்த 10 வருடங்களில் எந்திரன்,சக்கரை கட்டி,ராவணன் போன்ற சிலபடங்களைத் தவிர மற்ற எல்லா படங்களிலும் பாடல்கள் பின் இசை ஆகியவற்றில் ரகுமான் பெரிதாக ஒன்றும் வசீகரிக்கவில்லை என்பதும் நிஜம்.ஒரு வாழ்வியாலாக இது வளர்ச்சியா வீழ்தலா என்பது ரகுமான் மட்டுமே பதில் கூறக்கூடிய கேள்வியாக நிலைக்கிறது
சிவக்குமார்
இளையராஜாவுடன் ரகுமானை ஒப்பிடுவதே எனக்கு சரியாகப்படவில்லை. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் புதுமை மட்டுமே இருந்தது. இளையராஜாவிடம் இருந்த தரம் இல்லை. புதுமை என்பது சில நாட்களில் பழமையாகி மதிப்பை இழக்கும். தரம் மட்டுமே நிரந்தரம். ஆனால் ரகுமானின் இசைப் பயணத்தை மிகச் சரியாக புலப்படுத்தியுள்து இந்தக் கட்டுரை. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ரகுமான் திரும்பத் திரும்ப சொன்னாலும், தனக்கு வாய்ப்பளித்த தெற்கை மறந்து வடக்கு, மேற்கு என்று புகழைத் தேடி அவர் அலைந்துள்ளதாகவே தோன்றுகிறது.
ஆத்மார்த்தி சொல்வது போல் எந்திரன், சக்கரக்கட்டி, ராவணன் போன்ற படங்களில் அவரின் இசை அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை. எனக்குத் தெரிந்த வரை கடைசியாக அவருடைய இசை ரசிக்கும் படியாக இருந்தது ரிதம் படத்தில் மட்டும்தான். அந்தப் படத்துக்குப் பின் கிட்டதட்ட பத்தாண்டுகளில் அவர் தன் முழுத்திறனை எந்தப் படத்திலும் வெளிப்படுத்தவில்லை. இந்தியிலும் கூட பத்தாண்டுகளுக்கு முன் இசையமைத்த ரங்கீலா, லகான், தாள், புகார் போன்ற படங்களுக்குப் பின் சொல்லிக் கொள்ளும் படியாக அவர் எந்தப் படத்திலும் இசையமைக்கவில்லை. ரகுமானின் இசையை குறை கூறுவதாக யாரும் என்மீது வருத்தப்பட வேண்டாம். கணேஷ் எபி சொல்வதைப் போல் அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விருப்பதிலேயே இதைச் சொல்கிறேன். ஒரு தமிழன் என்ற முறையில் இன்னொரு தமிழனிடம் (ரகுமான்) இதைக் கோரும் உரிமை எனக்கு உள்ளதாகவே எண்ணுகிறேன்.
மாணிக் பாட்ஷா
இந்தக் கட்டுரை ரகுமான் கவனிக்க வேண்டிய ஒன்று. தமிழ் சினிமாவின் இசையை உலக அளவிலான இசையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்த அவர், தொடக்க காலத்தில் அதற்காகவே உழைத்தார். பின்னர் அவருடைய கவனம் தன்னுடைய புகழை உலக அளவில் கொண்டு செல்வதற்காக மட்டுமே உழைத்துள்ளார். தன்னை வளர்த்த தமிழ் சினிமா இசையின் வளர்ச்சிக்கு தன்னாலான பங்கை அவர் இனியாவது செய்ய வேண்டும். அறிமுகமான சில ஆண்டுகளில் தான் தந்த இசைக்கு இணையான இசையை மீண்டும் அவர் தர வேண்டும்.
வாணி
எனக்கென்னவோ அவர் இசையை முற்பாதி, பிற்பாதி என்று பிரிப்பது சரியானதாகத் தெரியவில்லை. அவருடைய இசை தற்போதும் நன்றாகவே உள்ளது என்று எண்ணுகிறேன். ராவணன், அழகிய தமிழ் மகன், சிவாஜி போன்ற படங்களில் அவருடைய இசை நன்றாக உள்ளதாகவே தோன்றுகிறது.
BALACHANDRAN
unnmai pathivugal endrume varaverka thakka ondru... rahumanin pani nerukadi kaaranamaga tamil vaaipukul pira puthu isai ammaipalaargal isaiamaithu rahumanin melpaarvail rahumanin isai endru peyaritu veli varuvathaga thagaval arinthen. S.J surya koorugaiyul avarathu aramba kaala padathin A.R. isaikaga oru varudam kathirunthen endru kooriyullar. athe pol ebi in kootru padiyum vadake vaipukal varavum
therkai vida iyalamalum
thinaarum A.R. tamil isaiyil
thadumatram kolvathu enbathu
nisarthanamana unmaye...
makkal rasanai opidumvagail irpathai vida kalathirka etra matrathai virumpukirathu... ilayaraja a.r. endru matrathai nokki paarvaiyil than...
oru sila tholvikal than amaithyai uruvakum
antha amaithiku pin than puyalo?
kathiruppom puyalin poonkatrikaga....
ipadiku ebi in vimarsanathin ethirnokkum
rasikan....
பழனிவேலு
ஏ ஆர் ரஹ்மான் இசை மீது தீராத காதல் கொண்ட எனக்கும் "தமிழனாக அவருடைய சாதனைக்காக பெருமைப்படுவதா, இல்லை தமிழ் சினிமாவில் இருந்து அவருடைய இசை இன்னும் விலகிப் போய் விடுமே என்று வருத்தப்படுவதா" என்று குழப்பமாகதான் இருக்கிறது.
இக்கட்டுரையை அவர் பார்க்க நேரிடின் நிச்சயம் நமது ஏக்கத்தை தீர்க்க முனைவார் என்ற ஆவலுடன்...............
ரகுபதி
இசைப்புயலின் இந்த திசை மாற்றம் தென் --> மேற்கு நோக்கியே உள்ளது என்பது உண்மைதான் .அவர் பயணப்பட்டது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் அவரது இசையும் பயணப்பட்டது என்பதும் உண்மை.இதனாலேயே அவரது இசையை பாமரர்களால் கொண்டாடமுடியவில்லை.

‘ரோஜா’, ‘டூயட்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘காதலன்’, ‘காதலர் தினம்’, இந்தியன் போன்ற படங்களில் உள்ள பாடல்களில் உள்ள வசீகரம் , இரம்யம்
BOYS , அழகிய தமிழ் மகன் ,கண்களால் கைது செய் , சக்கரக்கட்டி , பாபா , எந்திரன் போன்ற படங்களில் இல்லை என்பது அறிந்ததே.

புயலென புறப்பட்ட இசைப்புயல் கரைதாண்டினாரோ ? என்னவோ புயலின் (இசைப்புயலின் ) வருகையை எதிர்பார்த்திருப்போமாக.
rasikan
intha kaddutayai vaasithu siticheen. kaamadithaan poonka. kazhuthai ariyumaa katpoora vaasanai ?
arun
idai padithu ennaku rompa kavalai , innum niraiya manidarkalukku nalla isaiye rasikka mudiyavillai, eppdi ungalal mattum ippdi ellam eluda mudiyuthu

naan ondru ketkuren, padhil tharavum ??

illayaraja vin, dhanam, ponnar shankar, ayyan and mayakannadi ?? indha pada paadalgalil ungalukku tharam edavathu teriyutha ???

araicha mavai tirumbi araichu irukkirar,

idhu ondrum ungada kannuku teriyade
கணேஷ் எபி
hello arun..
thanks for your comment. neengal en katturaiyai nanraga padikkavum. ilayarajavin kaalam enru nan solli iruppathu 80s to 90s mattumthan. neengal kooriyulla entha padamum nan sonna kaalakattathil velivanthavai alla.
ரகுபதி
இங்க யாரு ரஹ்மான் இசை நல்லா இல்லன்னு சொன்னது ரசிகர் அவர்களே இன்னும் நல்லா இருந்தா நல்ல இருக்கும்னுதானே சொல்றோம்.

தமிழ்நாட்டுல பிறந்து தமிழும் இல்லாம ஆங்கிலமும் இல்லாம எழுதின நீங்கள் என்ன குதிரையா ?

புதுசா யோசிங்க ரசிகன் தம்பி ,.,,.,,.,,.,.,.,.,. :-)
Rabindranath
dear ebi,
Your article is crystal clear as well as absolutely true. I wish that isaipuyal should change his path atleast now and dedicate his music again to the tamil world.
அபு
இக்கட்டுரை ஒரு தலை பட்சமானது. ரஹ்மான் புகழை தேடி போகிறார் என்பது சுத்த அபத்தம்.

//படித்த மேல்தட்டு வர்க்கத்தினரால் கொண்டாடப்பட்ட ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் பாடல்கள் பெரும்பான்மைப் பிரிவைச் சேர்ந்த மக்களிடம் சென்று சேரவே இல்லை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டு மக்களைப் பெரிதும் கவர்ந்த பாடல்களில் பெரும்பாலானவை ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ் போன்றவர்கள் இசையமைத்தவை. இவற்றில் ரகுமான் இசையமைத்த பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.///

இங்கு குறிப்பிட்டுள்ள அநேக இசை அமைப்பாளர்கள் ரஹ்மான் பாணியைதான் இன்னும் பின்பற்றுகிறார்கள். ரஹ்மான் பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம் என்றால் அவர் அதிகம் இசை அமைக்கவில்லை அவ்வளவுதான். ஆரம்மகாலத்தில் இருந்தே அவர் எப்போதும் குறிப்பிட்ட படங்கள் அல்லது இயக்குநர்களுக்கு மட்டும் தான் இசை அமைகிறார். காரணம் இசை மற்றும் பாடல்களின் தரம் இழக்க கூடாது என்பதற்காக. ராஜாவின் பாடல்கள் அநேக வர்க்கத்தினரையும் கவர்ந்தாலும் அது எல்லா பாடல்களுக்கும் பொருந்தாது. கானா/கிராமிய பாடல்களை எத்தனை மேல்தட்டு வர்க்கத்தினர் கேட்கிறார்கள்? எல்லா பாடல்களும் எல்லா வர்க்கத்தினரையும் கவரும் என்று சொல்லமுடியாது.

ரஹ்மான், பின்வரும் இந்திய இசை அமைப்பாளர்களுக்கு உலக அரங்கிற்குள் செல்ல இலகு வாக இருக்க பாதை அமைத்து செல்கிறார். இங்கு (தமிழ்/இந்தி) நம்மால் தாக்கு பிடிக்க முடியாது என்று அவர் hollywoodற்கு செல்லவில்லை, உச்சத்தில் இருக்கும் போதுதான் சென்றார், இன்னும் அவர்போல் இசை அமைக்கும் திறன் உள்ளவர்கள் இங்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இசை அறிவு-உள்ள அனைவருக்கும் இது தெரியும்.

இப்போதெல்லாம் உச்சத்தில் உள்ளவர்களை சீண்டினால் வியாபாரமும்/அறிமுகமும் இலகுவாக கிடைக்கும் என்பதால் எல்லோரும் கடைப்பிடிக்கும் எளிய வழி இது.

better luck next time 'கணேஷ் எபி' - "கீற்று" கிழிந்துவிடபோகிறது பார்த்துக்கொள்ளவும்.
கணேஷ் எபி
ரசிகன் மற்றும் அருண்
என் கட்டுரையை நீங்கள் வேண்டுமானால் காமெடியாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். அதனால்தான் பதிலளிக்கிறேன். முதலாவதாக இந்தக் கட்டுரை இளையராஜாவின் புகழ்பாடுவதற்காக எழுதப்பட்டதல்ல. ரகுமான் குறித்து மதிப்புரைக்க அவரை ஓர் ஒப்பீட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்தினேன். இரண்டாவதாக கட்டுரையில் நான் குறிப்பிட்ட ஒன்றை நீங்கள் கவனிக்க வில்லை. இளையராஜாவின் இசைக்காலமாக நான் கூறியிருப்பது எழுபதுகளின் இறுதியிலிருந்து தொண்ணூறுகளின் இறுதி வரையிலான சுமார் பதினைந்து முதல் இருபதாண்டுகள்தான். (அவருடைய இசை சரியில்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்கள் அனைத்தும் இக்காலகட்டத்தில் வெளியானவை அல்ல.) அதற்குப் பின்னர் அவருடைய இசையில் பெரும் தடுமாற்றம் இருப்பது உண்மை. அதற்குக் காரணம் அவருடைய இசையிலிருந்து தமிழ் சினிமா விலகிப் போயிருப்பதுதான். ஆனால் ரகுமானின் நிலை அப்படியல்ல. அவரிடமிருந்து தமிழ் சினிமா விலகிப் போகவில்லை. அவர்தான் விலகிப் போய்விட்டார். கட்டுரையில் கூறவந்த விசயமே இதுதான். (கடந்த பத்தாண்டுகளில் ரகுமானின் இசை என்னை எப்படி வசீகரிக்கவில்லையோ, அதே போல் இளையராஜாவின் இசையும் என்னைக் கவரவில்லை. அவருடைய இசையில் கடைசியாய் என்னைக் கவர்ந்த படம் ‘சிறைச்சாலை’.)

அப்புறம் அபு அவர்களுக்கு..
ஏ.ஆர்.ரகுமானின் சமீப கால இசையில் உங்களுக்கு முழுநிறைவு இருந்தால் மகிழ்ச்சிதான். (உங்களுக்காவது இருக்கிறதே!) உச்சத்தில் இருப்பவர்களை சீண்டினால் வியாபாரமும் பப்ளிசிட்டியும் கிடைக்கும் என்பதற்காக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக கூறியுள்ளீர்கள். இந்தக் கட்டுரையில் ரகுமானைப் பற்றி எந்த சீண்டலும் இல்லை. இதைப் படித்தால் உண்மையில் ரகுமானுக்கே கோபம் வர வாய்ப்பில்லை. (உங்களுக்கு என் வருகிறது?) உச்சத்தில் இருப்பவர்களைச் சீண்டி விளம்பரம் தேடுவது (இஸ்மாயில் தர்பார் செய்தது போல) ஒரு மோசமான மனநிலை. அதே சமயம் உச்சத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கக் கூடாது/விமர்சிக்கக் கூடாது என்பது அதை விட மோசமான மனநிலை. அதை விட்டு விடுங்கள் அபு. அப்புறம் கீற்று பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இது போன்ற கட்டுரைகளால் கிழிந்துவிடும் அளவுக்கு அது பலவீனமாக இல்லை.
arun
ennaku endiran pidikkum, duet pidikkum, yuvraaj kuda pidikkum, that's

AR RAHMAN's Magic !!! (adhu ellorukkum puriyathu)

ella padatukkum duet madiri music pottal adukku peyar '' araicha mavaye tirumbi araikure '' (like Harris jeyaraj)

AR Rahman, madiri creativity inge yarrukume ille, Ilayaraja kuda sarakku pochu (example: his recent films)

ungalukellam ''porkalam ange from thenali, ennuyir tozhiye from kangalal kaidhu sei, usure poguthey from ravanan'' indha padalgal ondrum teriyadha ??

teriyathu endraal ninge music related article eludurethe TOTAL WASTE !!
Suresh
intha katturai... oru thalai patchamaanathu., ezhuthalaruukku AR Rehmananin isai pidikka villai, melum illayarajavin isai thakkam ippadi katturaiyaha vanthullathu. Rehman intha generation isai vazhikatti... ezhuthallar avar vayathai thaandi varum kaalathirku varavum., idnru AR rehman, tamil padangaluku isaiamaithu kondu thaan irukkirrar., pira nadikaikalai pollai vadakeyey thangividavillai..... AR Rehmanin kadai sarrakirkku villai athiham avallavey.. aanaal kidaikaamal illai...
divya
//''porkalam ange from thenali, ennuyir tozhiye from kangalal kaidhu sei, usure poguthey from ravanan'' indha padalgal ondrum teriyadha ??//

arun.. ungaloda isai gnanam meisilirkka vaikkirathu.
sshhhs.. abbaaa.. mudiala..
C.M.Bharathi
iyya thangal eluthiya katturai sirappagave ullathu. A.R.Rahman avargal meendum tamil thirai isaiil thanathu muluthiramaium katta vendum.nalla tamil isai padalkalai namaku thara vendum. nanri
சசிகுமார் Dmr
ரஹ்மான், இவர் இசையை மட்டும் அமைப்பதில்லை. இவர் "இசைஅமைக்கும் பாணியை"யே அமைக்கிறார்.. "டைம் இதழ்" சொல்வதைப் போல. "He has shaped modern India's music for more than a decade": ரஹ்மானின் இசையில் ஒரு புதுமை இருக்கிறது. ‘ரோஜா’, ‘திருடா திருடா’, ‘டூயட்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘இருவர்’, ‘ போன்ற படங்களின் இசையை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றும் கிடைக்காது. ஒரு விஷயத்தை மனதில் வைத்துகொள்வோம், புதுமையை கொண்டு வந்தார் என்பதற்க்காகத்தான் அவரை தமிழ் இசை ரசிகர்கள் திரும்பி பார்த்தனர். மீண்டும் ரஹ்மானால் தாம் இசையமைத்து போலவே (இன்னும் நிறைய இசைதரதுடன்) ‘ரோஜா -(பாகம் இரண்டு)’, ‘திருடா திருடா -(பாகம் இரண்டு)’, ‘டூயட் -(பாகம் இரண்டு)’, ‘கிழக்குச் சீமையிலே -(பாகம் இரண்டு)’, ‘இருவர் -(பாகம் இரண்டு)’, ‘காதலன் -(பாகம் இரண்டு)’, ‘காதல் தேசம் -(பாகம் இரண்டு)’, ‘இந்தியன் -(பாகம் இரண்டு)’, ‘காதலர் தினம் -(பாகம் இரண்டு)’ கொடுக்க முடியும். அனால் ரஹ்மானுக்கு அதில் உடன்பாடில்லை, அவரிடம் வரும் முதல்வகுப்பு இயக்குனர்களுக்கும் அதில் உடன்பாடு இல்லை. பஞ்சதனில் இருந்து வெளியே போகும் ஒவ்வொரு ஒலித்துகல்களும் புதுமையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் ரஹ்மானைபற்றி உண்மையான ரஹ்மான் ரசிகர்கள் அறிவார்கள்.

இளையராஜா: இவரும் ஒரு ஞானிதான். இளையராஜாவின் பாடல்களுக்கென்றே நம் வாழ்வின் சில தருணங்கள் அமையும் அந்தமாதிரி நேரங்களில் இவர் பாடல்கள் தவிர வேறு எவர் பாடலும் நமக்கு இதம் தாரதுதான். ஆனால் ராஜா தமக்கான வெற்றிவட்டத்தின் வெளியே சென்று புதுமுயற்சியில் ஈடுபடும் அளவுக்கு தைரியசாலி இல்லை. தம்மிடம் என்ன எதிர்பர்க்கபடுகிறது அதை சிறப்பாக செய்யும் ஒரு "Music server".

எபி, உங்கள் கையில் இருக்கும் தராசில் நீங்கள் புதிய ரஹ்மான? பழைய ரஹ்மான? என்று பார்க்க விரும்புகிறீர்கள். அனால் உண்மை முற்றிலும் வேறானது. புகைவண்டியின் "கடைசிப் பெட்டி" பழைய ரஹ்மான் அதன் "என்ஜின்"தான் எங்கள் புதிய ரஹ்மான்.
கணேஷ் எபி
//ரஹ்மானின் இசையில் ஒரு புதுமை இருக்கிறது. ‘ரோஜா’, ‘திருடா திருடா’, ‘டூயட்’, ‘கிழக்குச் சீமையிலே’, ‘இருவர்’, ‘ போன்ற படங்களின் இசையை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றும் கிடைக்காது. ஒரு விஷயத்தை மனதில் வைத்துகொள்வோம், புதுமையை கொண்டு வந்தார் என்பதற்க்காகத்தான் அவரை தமிழ் இசை ரசிகர்கள் திரும்பி பார்த்தனர். மீண்டும் ரஹ்மானால் தாம் இசையமைத்து போலவே (இன்னும் நிறைய இசைதரதுடன்) ‘ரோஜா -(பாகம் இரண்டு)’, ‘திருடா திருடா -(பாகம் இரண்டு)’, ‘டூயட் -(பாகம் இரண்டு)’, ‘கிழக்குச் சீமையிலே -(பாகம் இரண்டு)’, ‘இருவர் -(பாகம் இரண்டு)’, ‘காதலன் -(பாகம் இரண்டு)’, ‘காதல் தேசம் -(பாகம் இரண்டு)’, ‘இந்தியன் -(பாகம் இரண்டு)’, ‘காதலர் தினம் -(பாகம் இரண்டு)’ கொடுக்க முடியும். அனால் ரஹ்மானுக்கு அதில் உடன்பாடில்லை, அவரிடம் வரும் முதல்வகுப்பு இயக்குனர்களுக்கும் அதில் உடன்பாடு இல்லை.//
அதில் எனக்கும் உடன்பாடில்லை சசி. அவருடைய இசையில் முன்பு இருந்த புதுமை சமீபத்திய படங்களில் இல்லை என்பதே நான் சொல்ல வந்தது. நீங்கள் ரகுமானை கண்மூடித்தனமாக நேசிப்பதாலேயே உங்களால் அதை உணரமுடியவில்லை என்று தோன்றுகிறது. உங்கள் சொற்பிரயோகம் அருமை. ஆனால் கடைசி சில வரிகள் எனக்குப் புரியவில்லை. என் தவறாகவும் இருக்கலாம்.
arun
appadi endraal ningel enne solla varingal ?? avarudaye vtv, raavanan, endhiran , ellam ore tune, endu solluringala ???

oru pudumaiyum illaya ??

aromale, Hosanna, song madiri different a inge vere yaaravadhu pottu irukangala ?'

indha padalkalil ungalukku pudhumai teriyalayo ????

PS : thanks to sasikumar dmr for your valuable post.
arun
divya, ungalukku isai gnaname ille adhu mattum enneku puriyuthu, adhu ellorukkum kidekathu,

music rasikurathile niraiye vidham irukuthu, naan oru paatu kettal andhe pattukuleye poyviduven, music mudiyathan tirumbi varuven, it's just magical and amazing feel !¨

ungalukku ondru teriyuma music vide oru nalla medicine kuda ille ??

oru naal rompa thala vali, konjam kaichal kuda, ARR's songs ketten , oru 30-45 nimisham kettu iruppen, ellam paraanthu poiytu !!
divya
///divya, ungalukku isai gnaname ille adhu mattum enneku puriyuthu, adhu ellorukkum kidekathu, music rasikurathile niraiye vidham irukuthu, naan oru paatu kettal andhe pattukuleye poyviduven, music mudiyathan tirumbi varuven, it's just magical and amazing feel !¨ ungalukku ondru teriyuma music vide oru nalla medicine kuda ille ?? oru naal rompa thala vali, konjam kaichal kuda, ARR's songs ketten , oru 30-45 nimisham kettu iruppen, ellam paraanthu poiytu !!///

arun.. ithai padithu vittu ennal sirikkamal irukka mudiala. isai gnanam ulla yarum ilayarajavai kurai solla mattarkal. avaraii kurai solvathilirunthe ungaludaia 'isai gnam' purikirathu.. apram innonnu sollanum. a.r.rehman paattu kettu sila samayam enaku nalla iruntha thalaium vaikka arambichurukku.
ரகுபதி
ஆமாங்க திவ்யா ஒவ்வொரு ஊர்ல மருந்து கடைல தலைவலி மாத்திரைக்கு பதிலா ரஹ்மான் CD -தான் விக்கிராங்கனு கேள்விபட்டேன் ,..,.,
arun
naan eppo ilayaraja music koodathu endru sonnan ??

naan sonnathu ippo vara illayaraja padalkalil thaan ondrume ille endru sonnaan,

I love illayaraja's old songs !!!!,
divya
///ஆமாங்க திவ்யா ஒவ்வொரு ஊர்ல மருந்து கடைல தலைவலி மாத்திரைக்கு பதிலா ரஹ்மான் CD -தான் விக்கிராங்கனு கேள்விபட்டேன் ,..,., ///
hahaa.. nice comment ragupathi
ரகுபதி
நண்பர் சுரேஷ் அவர்களுக்கு .,.,

//intha katturai... oru thalai patchamaanathu // இங்கு தராசின் இரு புறமும் ரஹ்மானே வைக்கப்பட்டு உள்ளார் .எனவே இது ஒரு தலை பட்சமாயினும் அதுவும் ரஹ்மான் -ஐ சாரும் .

//ezhuthalaruukku AR Rehmananin isai pidikka villai // இந்த கட்டுரை கீற்றில் வெள்ளி, 24 ஜூன் 2011 அன்று வெளியாகி இருக்கலாம் ஆனால் இதற்கான survey -ஐ ஒன்றரை ஆண்டிற்கு முன்பே முடித்து விட்டார் .இது நீற்று யோசித்து இன்று எழுதியது அல்ல .

//illayarajavin isai thakkam ippadi katturaiyaha vanthullathu // ஆமாம் கண்டிப்பாக எந்த ஒரு போட்டியும் இல்லாத காலத்தில் ராஜாவுக்கு இருந்த வாய்புகளைவிட , ரஹ்மானானுக்கு அதிக வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் உள்ள நேரத்தில் ஏன் அவரால் இசை தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதே.

//Rehman intha generation isai vazhikatti... // ஆமாம் அவர் வழிகாட்டியாக முன்பு இருந்தாரே தவிர அவர் பயணிக்கவில்லை.

//ezhuthallar avar vayathai thaandi varum kaalathirku varavum.,// இதில் தாங்கள் என்ன குறிப்பிட வருகிறீர்கள் என்று எனக்கு பெரியவில்லை ,.,.,

//idnru AR rehman, tamil padangaluku isaiamaithu kondu thaan irukkirrar., pira nadikaikalai pollai vadakeyey thangividavillai..... AR Rehmanin kadai sarrakirkku villai athiham avallavey.. aanaal kidaikaamal illai...// ஆமாம் இன்றும் அவர் தமிழ் படங்களுக்கு இசை அமைக்கிறார், வடக்கே போய் விடவில்லை ,.,

ரஹ்மான் கடை சரக்கு விலை அதிகம் , ஆனால் கிடைக்காமல் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே .,.,
தரம் இல்லாத , போதை தராத சரக்கு கிடைத்து என்ன பயன் , அதை அதிக விலைகொடுத்து வாங்கித்தான் என்ன பயன் ...
divya
//////naan eppo ilayaraja music koodathu endru sonnan ?? naan sonnathu ippo vara illayaraja padalkalil thaan ondrume ille endru sonnaan, I love illayaraja's old songs !!!!,////
ithu a.r.rahmanukum porunthum. ithaithan intha katturaium solkirathu. nanum solkiren. rahmanin old songs enaku pidikum. but new songs ellam waste. avarudaia peyarukkaga mattum konjam hit agirathe thavira, avaridam munbu iruntha standard ippo illai. ilayarajavin recent songs standarda illa nu accept pannum maturity enkaluku irukkirathu. (though, still he is the best in back round music.) but rahman rasikarkaluku antha maturity illai. enthiran, sakkarakatti, vinnai thaandi varuvaya, sillunu oru kathal, ravanan ponra padankalin paadalkal ellam ungaluku deva ganamaka olithal nalla E.N.T. specialist kita unga kaathai kaaturathu nallathu.
azeezur rahman
Nalla karuthu thaan... Annal intha idathil naam ondrai maranthu vida koodathu... A. R. Rahman thanathu illakkai ulaga cinema alavil vaithathaal thaan TAMIL kural Oscar meadayil Ozhithathu...
fareeth
இசைபுயல் கவனிக்கவேண்டிய ஒன்றுதான் . இன்னொரு விஷயம் இக்காலத்தில் பெரும்பாலும் இசையை ரசிப்பது பெரியவர்கள் அல்ல இளைஞர்களும் , குழந்தைகளும்தான் . இக்காலத்தில் கூட இளையராஜாவால் ஒரு பாட்டுகூட அவர் இசையமைக்கும் படத்தில் ஹிட் கொடுக்க முடியவில்லை .மேலும் அவர் சொல்கிறார் நீங்கள் இந்த பாடல்களை கேட்டால் கண்ணீர் வரும், அப்படி வரவில்லை என்றால் ,நான் இசையமைப்பதை நிறுத்திவிடுவேன் என்று சொன்னபின்பும் எந்த பாடலும் ரசிக்கும் படியாக இல்லை . 80 -களில் ராஜா என்றால் 90 முதல் இப்பவரை ரஹ்மான்தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ராஜாவால் ஹிந்தி படங்களில் சொந்தமாக புது டியுன்களை போடா முடியவில்லை . ரஹ்மான் புதிய டியுன்களை போட்டு உச்சத்திற்கு சென்றுள்ளார்
. சச்சின் ,அபிதாப் ,போன்றவர்கள் வரிசையில் ரஹ்மானும் இளைஞர்களுக்கு ரோல் மடலாக இருக்கிறார் . இந்தகால இசைக்கு தகுந்தவாறு தான் ரஹ்மான் இசையமைகிராறாய் தவிர, வேண்டுமேன்றே பாடல்களை கெடுக்க வில்லை .
ரோஜா ,திருடா திருடா, ரிதம் போல இல்லையென்றால் அவை போல கதைகள் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும் . இன்றைய காலகட்டத்தில் ராமராஜன்+கங்கை அமரன் +இளையராஜா கூட்டணியில் ஒரு படம் வரட்டுமே ? அவர்கள் எடுக்க தயாரா . ? பில்லா போன்ற ரீமேக் படங்களுக்கு கூட ராஜா பையன் யுவனை தானே பயன்படுத்துகிறார்கள் ராஜாவை அல்லவே ? என்பதனையும் கட்டுரையாளர் கவனத்தில் கொள்ள வேண்டும் . ரஹ்மான் இசை மாற்றத்திற்கு காரணம் படத்தின் கதைகளே தவிர ரஹ்மான் அல்ல .
Abu
//அப்புறம் அபு அவர்களுக்கு.. ஏ.ஆர்.ரகுமானின் சமீப கால இசையில் உங்களுக்கு முழுநிறைவு இருந்தால் மகிழ்ச்சிதான். (உங்களுக்காவது இருக்கிறதே!) உச்சத்தில் இருப்பவர்களை சீண்டினால் வியாபாரமும் பப்ளிசிட்டியும் கிடைக்கும் என்பதற்காக இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதாக கூறியுள்ளீர்கள். இந்தக் கட்டுரையில் ரகுமானைப் பற்றி எந்த சீண்டலும் இல்லை. இதைப் படித்தால் உண்மையில் ரகுமானுக்கே கோபம் வர வாய்ப்பில்லை. (உங்களுக்கு என் வருகிறது?) உச்சத்தில் இருப்பவர்களைச் சீண்டி விளம்பரம் தேடுவது (இஸ்மாயில் தர்பார் செய்தது போல) ஒரு மோசமான மனநிலை. அதே சமயம் உச்சத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கக் கூடாது/விமர்சிக்கக் கூடாது என்பது அதை விட மோசமான மனநிலை. அதை விட்டு விடுங்கள் அபு. அப்புறம் கீற்று பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இது போன்ற கட்டுரைகளால் கிழிந்துவிடும் அளவுக்கு அது பலவீனமாக இல்லை.//

கோபம் ஒன்றும் எனக்கில்லை, நீங்கள் எப்படி உங்கள் எண்ணங்களை சொன்னிர்களோ அது போல் தான் நான் என் என்னத்தை சொன்னேன். மேலும் கோபம் வந்தால்தான் அது சீண்டல் என்றில்லை, இந்த சின்ன கட்டுரைக்கே எவ்வளவு பதில்கள்/பதிப்புகள் இதைத்தான் பப்ளிசிட்டி/விளம்பரம் என்று சொன்னேன். கேள்வி கேட்க கூடாது என்று நான் சொல்லவில்லை, கேட்க வேண்டியவர்களிடம் கேட்பதில்லை அதுதான் கவலையாக உள்ளது. தேவையில்லாமல் குத்து பாட்டு கொடுப்பவர்களையும், ரஹ்மான் மற்றும் ஆங்கில மெட்டுகளை காப்பி அடிப்பவர்களை பாராட்டியும் ஆனால் அதே சமயம் முடிந்தவரை originality-யை கடைபிடிக்கும் ரஹ்மானை குறைத்தும் சொல்வதுதான் தவறு என்கிறேன். ரஹ்மான் விஷயம் வந்ததால்தான் எனக்கு கீற்று என்று ஒரு இணையதளம் இருப்பதே எனக்கு தெரியவந்தது இதுதான் பப்ளிசிட்டி.
கணேஷ் எபி
///கேள்வி கேட்க கூடாது என்று நான் சொல்லவில்லை, கேட்க வேண்டியவர்களிடம் கேட்பதில்லை அதுதான் கவலையாக உள்ளது.///
அப்படி கேள்வி கேட்க வேண்டியவர்கள் யார் யார் என்பது பற்றியும், அவர்களில் யாரிடம் நீங்கள் கேள்வி கேட்டுள்ளீர்கள் என்பது பற்றியும் ஒரு பட்டியல் தந்தால் நன்றாயிருக்கும் அபு. அதை வைத்து என்னுடைய சமூக உணர்வை நான் அளவிட்டுக் கொள்ள வசதியாய் இருக்கும். தருவீர்கள் என்று நம்புகிறேன்.
mahes
இங்கே எத்தனை பேர் தமிழ்நாட்டில் படித்து தமிழ்நாட்டிற்காக வேலை செய்கிறார்கள்? பின்பு ஏன் ரகுமானை மட்டும் இப்படி கேட்க வேண்டும்.........
செந்தில் ராஜன்
இங்கே எத்தனை பேர் தமிழ்நாட்டில் படித்து தமிழ்நாட்டிற்காக வேலை செய்கிறார்கள்? பின்பு ஏன் ரகுமானை மட்டும் இப்படி கேட்க வேண்டும்.........

'உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன். நன் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன்.' ஏ.ஆர்.ரகுமான் இசைஅமைத்த இந்த வரிகளை நினைவிருக்கிறதா மகேஸ்?
அபு
@கணேஷ், என்னுடைய பதிவில் தெளிவாக எழுதி இருக்கிறேன். நான் யாரையும் கேட்டேன் என்று சொல்லவில்லை. என்னுடைய பதிவை முழுதாக நீங்கள் படிக்கவில்லை போலும். //ரஹ்மான் மற்றும் ஆங்கில மெட்டுகளை காப்பி அடிப்பவர்களை பாராட்டியும் ஆனால் அதே சமயம் முடிந்தவரை originality-யை கடைபிடிக்கும் ரஹ்மானை குறைத்தும் சொல்வதுதான் தவறு என்கிறேன்.//

//உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன். நன் உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன்.' ஏ.ஆர்.ரகுமான் இசைஅமைத்த இந்த வரிகளை நினைவிருக்கிறதா மகேஸ்?//

அவர் ஓடிவிட்டேன் என்று எப்போது சொன்னார். ஒரு சின்ன வெற்றி கிடைத்தாலே தமிழையும் தமிழ் மண்ணையும்/மக்களையும் மதிக்காதவர்கள் மத்தியில் விதிவிலக்காய் தமிழை/தமிழன் பெயரை இன்னும் உயரத்திற்குக்கொண்டு செல்லும் ரஹ்மானை குறை கூருகிறீகள்.

உதாரணத்திற்கு: எவ்வளவோ எடுத்துக்காட்டுக்கள் கொடுக்கலாம் ஆனால் நான் இதை கூறுகிறேன் (இதைவிட அருவறத்தக்க பாடல்களும் இருக்கு): கட்டிபிடி கட்டிபிடிடா கண்டபடி கட்டிபிடிடா: இந்த பாட்டை கேட்டால்/பார்த்தால் உங்களை "வசுந்தரா தாஸ்/மும்தாஜ்/தேவா" ஆகியோர் உண்மையிலேயே அதை கூறுகிறார்கள் என சொல்விர்களா? ஆனால் அதே சமயம் இன்றும் தமிழை மறக்காமல் இருக்கும் ரஹ்மானை ஓடிவிட்டார் என்கிறீர்கள். தமிழனுக்கு தமிழன்தான் எதிரி என்பது உங்கள் விசயத்தில் சரியாகிறது.
Lakshminarayanan S
மிகவும் ஒருதலை பட்சமான வலைப்பதிவு. நானும் இளையராஜவின் விசிறி என்றாலும், திறமை யாரிடம் இருந்தாலும் அதை மதிப்பவன். இளையராஜாவின் இசைப்பயணத்தையும் முற்பகுதி, பிற்பகுதி என பிரித்துப் பார்த்தால் அதில் எதனை சறுக்கல்கள் உள்ளன என தெரிந்து கொள்ளலாம். இளையராஜாவின் ஹிட் பாடல்கள் எத்தனை, A .R . ரகுமானின் ஹிட் பாடல்கள் எத்தனை என்பதை கணக்கு எடுப்பதை விட, ஹிட் பாடல்களில் % எவ்வளவு என்று கணக்கு எடுத்துப்பார்ப்பதே சரியான ஒப்பீடு. ரகுமான் இந்தி மற்றும் ஆங்கிலப்படங்களுக்கு இசையமைத்தால் அவர் புகழின் பின்னால் செல்கிறார் என்று எழுதினால், ஒரு வருடத்தில் 25 படங்களுக்கு ராஜா இசையமைத்த போது அவர் பணத்தின் திசையில் செல்கிறார் என்று சொல்ல முடியுமா? உலகளவில் ஒரு தமிழன் புகழ் பெரும் போது, அதைப்பார்த்து பெருமைப்படுவதை விடுத்து, இம்மாதிரியான ஒப்பீடுகள் வேண்டாமே? அனைவரும் இளையராஜா, ரகுமான் உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையையும் கேட்டு மகிழட்டும், ஒப்பீடுகள் இல்லாமல்!
பிகேஎம்
இசையமைப்பாளர்களை ஒப்பிடக் கூடாது என்று சொல்லும் லஷ்மி நரசிம்மன்தான் கட்டுரையாளரை விட அதிகமாக ஒப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரை அப்படி ஒன்றும் ஒருதலைப்பட்சமானதாக தெரியவில்லை. இளையராஜாவையும் ஏ.ஆர்.ரகுமானையும் ஒப்பிடும் விதத்தில் இது இல்லை. ஏ.ஆர்.ரகுமானைத்தான் இரண்டாகப் பிரித்து ஒப்பிடுகிறது. இந்த ஒப்பீட்டில் உண்மை இருப்பதாக நினைக்கிறேன். இளையராஜாவையும் இப்படி ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆனால் இந்த கட்டுரை ஏ.ஆர்.ரகுமானைப் பற்றியது மட்டுமே. தலைப்பை கவனிக்கவும். ஏ.ஆர்.ரகுமானின் இசை பெரும்பாலும் எந்தக் கவலையும் இல்லாத நடுத்தர, உயர்நடுத்தர மற்றும் மேல் வர்க்கத்தினரின் ரசனையை பிரதிபலிப்பதாக மட்டுமே உள்ளது. இணையத்தில் அதிகம் உலா வருபவர்களும் அவர்கேள. எனவேதான் இந்த கட்டுரையை அவர்களால் ஏற்க முடியவில்லை என்று நினைக்கிறேன். விண்ணை தான்டி வருவாயா படத்தின் ஒரு பாடலை எங்கள் தெரு அயன் தேய்ப்பவரிடம் என் செல்போனில் போட்டுக்காட்டி, இது என்ன படம்? என்று கேட்டேன். அவர் தெரியலை, நான் கேட்டதே இல்லை என்றார். (ஆனால் எந்திரன் பாடல்களை அவருக்கு தெரிந்திருந்தது. அதற்கு காரணம் ஏ.ஆர்.ரகுமான் அல்ல, ரஜினி.) சாதாரண மக்களிடமிருந்து அவருடைய இசை விலகிப் போயிருக்கிறது என்பதே உண்மை.
கணேஷ் எபி
///ரகுமான் இந்தி மற்றும் ஆங்கிலப்படங்களுக்கு இசையமைத்தால் அவர் புகழின் பின்னால் செல்கிறார் என்று எழுதினால், ஒரு வருடத்தில் 25 படங்களுக்கு ராஜா இசையமைத்த போது அவர் பணத்தின் திசையில் செல்கிறார் என்று சொல்ல முடியுமா?///

இளையராஜா ஆண்டுக்கு 25 படங்களுக்கு இசையமைத்தது பணத்துக்காக என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத வாதம். அப்படி பணத்தின் பின்னால் ஓடுவதாயிருந்தால் அவர் ரகுமானைப் போல பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்க முடியும். சினிமாவில் நுழைந்த பல புதிய சின்னச் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களையும் நல்ல கதையம்சத்துடன் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களையும் ஊக்குவிக்கும் வகையில் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு அவர் இசையமைத்துள்ளார். அது இசையின் மீதான காதலால் மட்டுமே. இது குறித்து ஜெயமோகன் விரிவாக எழுதியுள்ள கட்டுரையை அவருடைய தளத்தில் வாசித்துப் பார்க்கவும். இளையராஜாவால் பிழைத்த நடிகர், இயக்குனர்களை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளளேன். ஆனால் அவரால் சினிமாவில் சாதாரணமாக இருந்து பெரிய அளவில் வளர்ந்த தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். அவற்றை நான் குறிப்பிடவில்லை. இப்போது வரை சில நல்ல படங்களுக்காக குறைந்த அளவு ஊதியம் பெற்றுக் கொண்டு அல்லது ஊதியமே பெறாமல் இளையராஜா இசையமைத்து தருவது சினிமா உலகில் இருப்பவர்களுக்கு தெரியும். ஏ.ஆர்.ரகுமானிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? எவ்வளவுதான் நல்ல கதையுடன் இருந்தாலும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு கோடிகள் இன்றி அவரை அணுகவே முடியாது.
கணேஷ் எபி
///ஒரு வருடத்தில் 25 படங்களுக்கு ராஜா இசையமைத்த போது அவர் பணத்தின் திசையில் செல்கிறார் என்று சொல்ல முடியுமா? ////
இளையராஜா ஆண்டுக்கு 25 படங்களுக்கு இசையமைத்தது பணத்துக்காக என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத வாதம். அப்படி பணத்தின் பின்னால் ஓடுவதாயிருந்தால் அவர் ரகுமானைப் போல பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்க முடியும். சினிமாவில் நுழைந்த பல புதிய சின்னச் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களையும் நல்ல கதையம்சத்துடன் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படங்களையும் ஊக்குவிக்கும் வகையில் தன்னுடைய சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு அவர் இசையமைத்துள்ளார். அது இசையின் மீதான காதலால் மட்டுமே. இது குறித்து ஜெயமோகன் விரிவாக எழுதியுள்ள கட்டுரையை அவருடைய தளத்தில் வாசித்துப் பார்க்கவும். இளையராஜாவால் பிழைத்த நடிகர், இயக்குனர்களை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளளேன். ஆனால் அவரால் சினிமாவில் சாதாரணமாக இருந்து பெரிய அளவில் வளர்ந்த தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். அவற்றை நான் குறிப்பிடவில்லை. இப்போது வரை சில நல்ல படங்களுக்காக குறைந்த அளவு ஊதியம் பெற்றுக் கொண்டு அல்லது ஊதியமே பெறாமல் இளையராஜா இசையமைத்து தருவது சினிமா உலகில் இருப்பவர்களுக்கு தெரியும். ஏ.ஆர்.ரகுமானிடம் இதை எதிர்பார்க்க முடியுமா? எவ்வளவுதான் நல்ல கதையுடன் இருந்தாலும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு கோடிகள் இன்றி அவரை அணுகவே முடியாது.
கார்க்கி ஜான்ஸன்
ரஹ்மானின் இசை ஆரம்ப காலத்தில் உள்ளது போலவே தான் உள்ளது என்பது என் கருத்து. இது போல் எனக்குத் தோன்ற நான் அவரின் ரசிகன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். உங்கள் கட்டுரையில் கூறப்பட்டதைப் போல ரஹ்மானின் இசை சற்று மாறியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்குக் காரணம் அவரின் இசைக்கு விலை உயர்த்தப்பட்டிருப்பதும் ஒரு காரணம். அது சாதாரண மக்கள் விரும்பும் இசையில் இருந்து மேல் தட்டு மக்கள் விரும்பும் வகையில் மாறியுள்ளதை யாரும் கவனித்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அது அதிகபட்ச ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. அந்த அதிகபட்சத்தினர் ரஹ்மானிடம் எதிர்பார்பதும் அது போன்ற இசையே. அவர் மறுபடியும் "புதுவெள்ளை மழை" போன்ற பாடல்களை தருவார் என்ற நம்பிக்கையை பிரம்மாண்டத்தின் உச்சத்திலிருக்கும் அவரின் இசை கொடுக்கும், என்பதை சந்தேகத்திற்குரிய ஒன்றாக மாற்றியிருக்கிறது. அது சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கப்பட்டாலும் அவரின் இசைக்கு தலையாட்ட இங்கு தலைகள் எராளம் என்பது மட்டும் மாற்றமுடியாத உண்மை. - கார்க்கி ஜான்ஸன்.
anandhan
ரஹ்மானின் இசை எப்போதும் போல் ஒரே மாதிரி தான் இருக்கு. இயக்குனர்கள் அவர் பாடலை படமாக்கும் விதம் சரி இல்லை.

sakkarakkati, kangalal kaidu sei, paarthaley paravasam, varalaru, udaya, ayudha ezhuthu, jodi, enakku 20-unakku 18.
indha padangalil vandha paadalin tharam kuraiyavillai.
aanal sila padangal flop aagivittana. sila padangalil vandha paadalgal sariyaga padamaakkavillai.
Ippadi pala padaippugal veenaagivittana.

thaangal kooria yuvan, harris pondror ellamey periya padangalukku mattum dan isai amaikkirargal.

aanal arr starting stage'il pudhiya iyakkunargaludan pani purindhar.

so, arr always as like in 'roja'
Divaharan
ரஹ்மானால் இந்தியனாட்டின் இசை மட்டுமல்ல, நாட்டின் மீது மதிப்பும் கூடியிருக்கிறது........ஜெய்ஹிந்த்.......
எதற்காக இப்படி கீட்ரு இணையம் ரஹ்மான் மேல பொறாம படுதொ தெரியல.... கிண்டல் செய்வதற்கு கீட்ருத சிறந்த இணையம்....... நீங்க மொதல்ல ரஹ்மானோட பாட்டுகளையெல்லாம் கேளுகங்க கேட்டுட்டு ரஹ்மான குறைசொல்லுங்க... 90ல் இருந்து ரஹ்ம்னோட இசை யெல்லாம் ஒவ்வொரு படத்துக்கும் தரம் வுயர்ந்தது.. இளையராஜா 10 படத்துக்கு இசை அமைப்பதற்கும் ரஹ்மான் 1 படத்துக்கு இசை அமைப்பதற்கு சமம்..... இனிமேலும் அடுத்தவர்களை குறைகூருவதை விட்டுட்டு உங்களுடைய வேலைய ஒழுங்கா பாத்திங்கனா நீங்க வாழ்கையில முன்னேறலாம்... முதல்ல அத பாருங்க....
எல்லாப்புகளும் ரஹ்மானுக்கே....
கிருஸ்ணா
முன்னைய அளவுக்கு ரஹ்மானின் இசை தரமாக இல்லை என்பது முற்றிலும் உண்மை. ரஹ்மானும் காப்பி அடிப்பவர்தான். அவர் இளையராஜாவின் பல பாடல்களின் சிறு சிறு பகுதிகளைக் காப்பி அடித்து மெட்டுக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். யாருக்காவது சந்தேகம் இருப்பின் youtube இல் சென்று a.r. rahman copycat work என்று தேடிப் பார்க்கவும்.உண்மையைச் சொல்லப் போனால் இளையராஜா என்றுமே யாருடைய இசையையும் திருடி இசையமைத்தது இல்லை.அதுதான் அவரது தனித்தன்மை.மேலே எழுதப்பட்டுள்ள பதிவு ரஹ்மான் மீண்டும் தமிழில் தனது முழுக் கவனத்தையும் தமிழில் செலுத்த வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டுள்ளதே அன்றி அவரை கொச்சைப் படுத்த வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கவில்லை.ஆனால் இங்கே ரஹ்மானின் விசிறிகள் சிலர் அவரை ஏகத்துக்கும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாலேயே எனது கருத்து இப்படியாக அமைந்து போய் விட்டது. என்னை மன்னிக்கவும்...
neethu
anbana sahodari divyavirkku ungalukku talavali ippadi adikkadi vandaal oru nalla doctorai poi paarungal. adai vittuvittu pattu ketkiren endru solli irukkadirgal. adhu pinnal periya piracchanayaga maara vaippu irukiradhu.
divya
//anbana sahodari divyavirkku ungalukku talavali ippadi adikkadi vandaal oru nalla doctorai poi paarungal. adai vittuvittu pattu ketkiren endru solli irukkadirgal. adhu pinnal periya piracchanayaga maara vaippu irukiradhu.//

paattu ketta thalaivali pogum nu nan sollave illa. innoruthar sonnatha quote pannirunthen. sariya parunga neethu.
Isai
இளையராஜா பாடல்களுக்கு தமிழகமே எல்லை. ரகுமான் பாடல்களுக்கு உலகமே எல்லை. எனக்கு ஒரு பத்திரிக்கையில் படித்த கேள்வி - பதில் ஞாபகம் வருகிறது , கேள்வி: இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன ? பதில்: இளையராஜா, தமிழ்நாட்டு மக்களை இந்தி பாடல் மோகத்திலிருந்து விடுவித்து , தமிழ் பாடல் கேட்க வைத்தார். ரகுமான், இந்திகாரர்களையும் தமிழ் பாடல் கேட்க வைத்தார். தமிழ்நாட்டு ரசனைக்கு தட்டுவது மேல் குறிப்பிட்டவர்களது இசை ஞானம். முழு இந்தியாவுமே கேட்க இசை அமைப்பது ரகுமானின் இசை ஞானம்.
main
i told one statement illayaraja is legend of tamil music.A.R.Rahman is legend of world music
divya
mel ulla katturai mutrilum poiyanathu illaiyaraja music nalla irukkumnu yaaru sonnathu a.r.rahman mathiri music illaiyaraja pottathum illa inimelum poda mudiyadhu . a.r.rahman mathiri avaru oruthar mattum thaan enga a.r.rahman pathi neenga yaaru kurai solla.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.