டாக்டர் கைராசிநாதனுக்கு பக்கத்து தெருவிலிருந்த டாக்டர் போன் பண்ணினார்.

"ரொம்ப நாளா ஒரு மறதி பேஷண்டுக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்தீங்களே....இப்ப சரியாயிடுச்சா டாக்டர்?"

"என் ட்ரீட்மெண்டை அவ்வளவு சாதாரணமா நினைச்சுட்டீங்களாக்கும்? கம்ப்ளீட்டா கியூர் பண்ணி வீட்டுக்கு அனுப்பிச்சிட்டேன்!..... எனக்குத் தரவேண்டிய பீஸைக்கூட அப்புறமா கொண்டுவந்து கொடுப்பான்னு சொல்லிட்டேன்!.... ஆமா.....ஏன் அவனைப்பத்தி கேக்கறீங்க?"

அந்த டாக்டர், "உங்ககிட்ட ட்ரீட்மெண்ட் எடுத்ததையே மறந்துட்டு, உங்களுக்கு தரவேண்டிய பீஸை இப்ப என்கிட்ட கொண்டுவந்து கொடுத்துட்டுப் போறான் டாக்டர்! ....என் புது ஹாஸ்பிடலுக்கு நீங்க ஆயிரம் ரூபா டொனேஷன் தர்றதா சொல்லியிருந்தீங்களே.. அதுக்கு இந்த பணத்தை எடுத்துக்கறேன் டாக்டர்! தாங்க்ஸ்! " என்று சொல்லி, போனை வைத்துவிட்டார்!

அதிர்ச்சியால் மயங்கிச் சாய்ந்தார் இந்த டாக்டர்!

-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி

Pin It