விவாகரத்தின்போது கணவருக்கு குறைவான சம்பளம் இருந்து, விவாகரத்துக்குப் பின் சம்பளம் அதிகமாகி இருந்தால், இப்போது வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஜீவனாம்சத்தை அதிகப்படுத்தச் சொல்லி வழக்குத் தொடரலாம். மனைவி எந்த ஊரில் வசிக்கிறாரோ அந்த ஊர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். கணவர் எங்கு வசிக்கிறார் என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. நீதிமன்றம் கணவரின் சம்பளச் சான்றிதழை சரிபார்த்து, அதன்படி உங்களுக்கு ஜீவனாம்சம் அதிகமாக கிடைக்கச் செய்யும்.

Pin It