விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கும்போது அவரது மாத வருமானத்துடன் இதர படிகளையும் சேர்த்துக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்து இழப்பீடு தொடர்பாக காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் எஸ்.எஸ்.பேடி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இக்கருத்தைத் தெரிவித்தனர்.

விபத்தில் ஒருவர் கொல்லப்படும்போது அவரது குடும்பத்தினர் மாதச் சம்பளத்தை மட்டும் இழக்கவில்லை. அதனுடன் இதர படிகளையும் சேர்த்தே அவர்கள் இழக்கிறார்கள். எனவே மத்திய மோட்டார் வாகன வரிச்சட்ட விதி 168ல் கூறப்பட்டுள்ள நியாயமான இழப்பீடு என்பது இறந்தவரின் இதர படிகளையும் கணக்கிட்டு வழங்கப்படுவதாகும் என நீதிபதிகள் விளக்கமளித்தனர்.

Pin It