1888 ஆம் ஆண்டு ஜெர்மனியை ஆண்டு வந்த, தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள - சமோவா என்றழைக்கப்படும் தீவுக்கூட்டங்களை தன் காலனிக்குள் கொண்டு வர விரும்பினார். அதற்காக ஒரு படைக்கப்பலை சமோவாவிற்கு அனுப்பினார். ஜெர்மானிய வீரர்கள் அந்தத் தீவின்மீது குண்டுகளை வீசித் தாக்கினர். அதில் சில குண்டுகள், அந்தத் தீவிலிருந்த அமெரிக்க நாட்டுக்குச் சொந்தமான சொத்துக்கள் மீதும் விழுந்தன. அங்கிருந்த அமெரிக்கக் கொடியை ஜெர்மானிய மாலுமிகள் கீழிறக்கினர். இதைக் கேள்விப்பட்டு கோபமடைந்த அமெரிக்க அரசு, பதில் தாக்குதலுக்காக தனது போர்க்கப்பலை அங்கு அனுப்பியது. இருநாட்டுக் கப்பல்களுக்கும் இடையே கடும்போர் மூளவிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்த்து. பெரும் புயல் ஒன்று சமோவா துறைமுகத்தைத் தாக்கியது. அதில் இருநாட்டுக் கப்பல்களும் அழிந்தன. அதனால் பெரும்யுத்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது. இரத்தம் மட்டுமே தோய்ந்திருக்கும் உலகப் போர் வரலாற்றில் மெல்லிய புன்னகை வரவழைக்கும் சம்பவமாக இன்றும் இது இருக்கிறது.