ராஜாஜியும், ஐயா பெரியாரும் அரசியலில் இரு வெவ்வேறு துருவங்கள். கடவுளே இல்லை என்று பகுத்தறிவு இயக்கம் நடத்தியவர் எங்கள் பெரியார். அதற்கு நேர் மாறானவர் இந்த ராஜாஜி. ஜாதியும் மதமும் கடவுளுமே அவரின் முக்கிய குறிக்கோள்கள். இந்த இருவரும் அரசியலிலும், வாழ்க்கை முறைகளிலும் எதிரெதிர் நிலைப்பாட்டில் இருந்தாலும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர்.
1940களின் இறுதியில் தவமணியம்மையை மணம் முடிக்க முடிவு செய்கிறார் பெரியார். கழகத்தில் அதற்கு ஒருசிலரின் கடுமையான எதிர்ப்பு. யாருக்கும் செவி மடுக்க மறுத்து பெரியார் தன் முடிவைப் பற்றி கடிதம் எழுதி கருத்து கேட்ட ஒரே நபர் ராஜாஜி. அந்த அளவுக்கு இருவரின் நட்பு வலுப் பெற்றிந்தது. அதே போல ராஜாஜி மறைந்ததும் இடு காட்டில் இறுதி அஞ்சலி செலுத்த வந்து தனி நாற்காலியில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார் பெரியார்.
இப்போது ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஏதாவது பொது நிகழ்ச்சியில் சந்திக்கவாவது செய்கிறார்களா? நாட்டின் மிக முக்கிய பிரச்னைகளில் அல்லது ஏதாவது ஒரு விஷயத்தில் ஒருமித்த முடிவை எடுக்கிறார்களா?
அனுப்பி உதவியவர்: விடாது கருப்பு
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நேர்காணலா? நேர்மையற்ற காணலா?
- 'குலத்தொழிலை' தொடருங்கள்! - மோடி
- வாழ்விலிருந்து எனது இலக்கியம்
- மழை நாள்
- தபோல்கர், கவுரி லங்கேஷ் கொலைக் குற்ற வழக்கு திரும்ப பெறப்பட்டு குற்றவாளிகள் விடுதலை
- தீபாவளி - முட்டாள்தனம்
- பெரியார் முழக்கம் செப்டம்பர் 21, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- வீழட்டும் ஆரியம், எழட்டும் திராவிடம், வெல்லட்டும் தமிழ்த் தேசியம்!
- ஒப்பீட்டு நோக்கில் வள்ளுவமும் ஆத்திச்சூடியும்
- ஒவ்வொரு பெட்டியிலும் ரயில் இருக்கிறது
- விவரங்கள்
- விடாது கருப்பு
- பிரிவு: தமிழ்நாடு