இரத்தத்தில் பல வகை உண்டு. அதில் Rh பாஸிட்டிவ், நெகட்டிவ் என்று இரண்டு டைப் Rhesus என்ற ஒரு வகை குரங்கின்ம மூலம் கண்டுபிடிக்கப்பட்டதால் Rh என்கிறோம். உலகில் மிகக் குறைந்த சதவீதம் பேர்தான் Rh நெகட்டிவ் உள்ளவகள். கர்ப்பமாக இருப்பவர்கள் Rh பாஸிட்டிவாக இருக்கும்வரை பிரச்சனை இல்லை. மனைவிக்கு Rh நெகட்டிவ் அமைந்து, கணவன் ரத்தம் Rh பாஸிட்டிவாக அமைந்துவிட்டால் பிரச்சனை. டெலிவரி நேரத்தில் தாயின் Rh நெகட்டிவ் ரத்தத்தில் குழந்தையின் Rh பாஸிட்டிவ் ரத்தம் கலக்கும்போது எதிர்வினை (antibody) உருவாகிறது.

முதல் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுவது இல்லை. இரண்டாவது குழந்தை உருவாகும்போது, தாயின் உடலில் எதிர்ப்பு சக்திக் குறைந்து, வயிற்றில் இருக்கும்போதோ, பிறந்த பின்போ குழந்தைக்கு மஞ்சள்காமாலை, இரத்தச்சோகை என்று கடுமையான நோய்கள் உண்டாகி பாதிப்பை ஏற்படுத்தலாம். அதைத் தடுக்க Rh நெகட்டிவ் இரத்தம் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏழாவது மாததில் தடுப்பூசிப் போட வேண்டும். தற்போது நவீன டெக்னாலஜி மூலம் கருப்பையில் உள்ளக் குழந்தையின் இரத்தத்தை மாற்றுமளவுக்கு முன்னேறி விட்டோம். முதல் குழந்தை பிறந்த 24 மணி நேரத்துக்குள்ளும் இந்த ஊசியைப் போடலாம். இருந்தாலும் முன்பே போட்டுக் கொள்வது நல்லது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.