சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே டைப் 1 சர்க்கரை நோய் (Diabetics) வரும் வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தத் தகவலுக்கான உறுதியான ஆதாரம் இல்லாவிட்டாலும், மருத்துவமனைகளில் காணப்படும் பாக்டீரியா போன்ற காரணிகளுடன் தொடர்பிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பரம்பரை மரபணுவுடன் கிருமித்தொற்றும் சேர்ந்து குழந்தைப் பருவத்திலேயே சர்க்கரை நோய் ஏற்பட ஏதுவாகிறது என்று தெரிய வந்துள்ளது. 

குழந்தைகளின் பான்கிரியாவில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை தன்னிச்சையாக உருவாகும் செல்கள் தாக்குவதால் சர்க்கரை நோய் ஏற்படுவதாகத் தெரிய வந்துள்ளது. 

டைப் 1 சர்க்கரை நோயானது பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஏற்படக்கூடியது. மேலும் ஆயுள் முழுவதும் இந்நோய் நீடிக்கக் கூடியது. டைப் 2 சர்க்கரை நோயானது வாழ்க்கை முறையைப் பொருத்தும், உடல் பருமனைப் பொருத்தும் ஏற்படக்கூடியது. 

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளின் 23 விழுக்காட்டினருக்கு டைப் 1 சர்க்கரை நோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தை பிறக்கும் போதே அதிக எடை, தாயின் வயது, குழந்தைப் பேறின் போது சர்க்கரை நோய், தாய்ப்பால் குடித்ததா? அல்லது இல்லையா? என்பன எல்லாம் இந்த நோய் ஏற்படும் வாய்ப்புகளில் அடங்கும்.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

Pin It