சமீபத்தில் கேள்விப்பட்ட மரணம் ஒன்று. அது இயற்கையான மரணம் அல்ல. தற்கொலை. இதற்கும் துயரர் பள்ளிப் பருவத்திலோ, கல்லூரிப் பருவத்திலோ இருப்பவர் அல்ல. மணமாகி குழந்தையும் உள்ளவர். தற்கொலைக்குக் காரணம் மன அழுத்தம் என்று சொல்லப்படுகிறது. இதைக் கேள்விப்படும் யாவரும் சொல்லும் வசனம்- எப்படி இவர்கள் தற்கொலைக்குத் துணிந்தார்கள்? மனைவி, மக்களை நினைத்துப் பார்த்தால் இப்படி செய்ய எண்ணம் வருமா? அவர்கள் கஷ்டப்படுவார்களே என்று நினைக்க மாட்டார்களா? இப்படியாகத்தான் இருக்கும்.
ஆனால், துயரரின் பார்வையில் இருந்து பார்க்கும் போதுதான் அதன் வலியும், வேதனையும் என்னவென்று தெரியும். வாழ்க்கையில் ஏற்பட்ட ஏதாவது ஒரு கசப்பான சம்பவம் அவர் மனதை ஆழமாகப் பாதித்திருக்கலாம். நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் யாராவது இறந்தது மனதைப் பாதித்திருக்கலாம் அல்லது தொழிலில் ஏற்பட்ட இழப்பாக இருக்கலாம் அல்லது தனக்கு இருக்கும் தீராத வியாதியைப் பற்றிய கவலையாக இருக்கும் (தீராத வியாதி என்று அவராக நினைத்துக் கொள்வது) அல்லது யாராவது மனதைப் புண்படுத்தும்படி பேசிய பேச்சாக இருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு விதத்தில் துயரர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதன் மொத்த விளைவாக அவர் மனதில் தோன்றுவதுதான் உயிரோடு இருப்பதே வீண் என்று நினைத்தல். மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கிறோமோ? என்றும், தான் எதற்கும் பயன்படாதவர் என்றும் நினைத்தல். தன் வியாதியை யாராலும் குணப்படுத்த முடியாது என்று நினைத்தல்.
இப்படிப் பலவிதமான நினைவுகளால் அவர் மனதில் அடிக்கடி தோன்றும் எண்ணம்-மரணம். தான் இறப்பது ஒன்றுதான் இதற்கு தீர்வு என்று முடிவு செய்தல். அதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல். அந்த எண்ணமே அவர் மனதில் அடிக்கடி சாகத்தூண்டிக் கொண்டிருக்கும். திரும்பத் திரும்ப அதையே நினைத்துக் கொண்டிருப்பார். அதற்கான முயற்சியிலும் ஈடுபடுவார். இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி சிறிதும் அவரால் சிந்திக்க முடியாது. இதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிகிச்சை முறையின், மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளாலும், அவருடைய சிந்தனைத் திறன் பாதிக்கப்படலாம்.
ஒரு சிலர் தற்கொலை செய்து கொள்ள எண்ணுவார்கள். ஆனால் தைரியம் இருக்காது. சில துயரர்கள் அதற்கும் பயப்பட மாட்டார்கள். தன்னம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள். எதையும் எதிர்கொள்ளலாம் என்ற துணிவு இருக்காது. அவர் எதிர்நோக்கும் ஒரே விஷயம் மரணமாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பார். விளைவு, அவரது மனமே அவரது மரணத்திற்கான தூது அனுப்பிக் கொண்டிருக்கும். இப்படி எத்தனையோ பேர் துயரங்களில் இருந்து வெளிவரத் தெரியாமல், வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.
ஆனால், “ஹோமியோபதி” என்னும் மகத்தான மருத்துவ முறையில், துயரரின் உடல் நலக் குறிகள் மட்டும் கவனித்து சிகிச்சையளிக்கப்படுவதில்லை. மனக் குறிகளும் முக்கியப் பங்கை வகிக்கின்றன. இதனால், துயரர் மனதில் என்ன நினைக்கிறார்? எப்படி பாதிக்கப்பட்டுள்ளார்? துயரத்தில் இருந்து மீள என்ன செய்கிறார்? தனிமையில் இருக்க விரும்புகிறாரா? மற்றவர்களோடு இருந்தாலும் தனிமையை உணர்கிறாரா? துயரப்படும்போது என்ன மாதிரி வார்த்தைகளை உபயோகிக்கிறார்? என்பதெல்லாம் கவனிக்கப்படும்.
t;இவ்வாறு துயரரின் உடல், மனம் இரண்டிலும் தோன்றும் குறிகளை வைத்து துயரரை முழுமையாக ஆய்வு செய்து, அவரை தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்க முடியும். தன்னம்பிக்கை உடையவராக மாற்ற முடியும். தக்க சமயத்தில், தக்க ஹோமியோபதி மருத்துவரை நாடி, சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம், மனமாற்றத்தை பக்க விளைவுகளற்ற மருந்துகள் மூலம், இயற்கையாகக் கொண்டு வந்து, இயற்கை மரணம் நிகழும் வரை தன்னம்பிக்கையோடு, வாழ்க்கையில் வெற்றிநடை போட முடியும்!
இதற்கான சில ஹோமியோபதி மருந்துகளைக் காண்போம்!
ஆரம் மெட்டாலிகம்;
இந்நோயாளி ஆழ்ந்த மன துக்கத்திலும், அளவு கடந்த மன ஏக்கத்துடனும், மிகுந்த சோகத்துடனும் காணப்படுவார். வாழ்க்கையே இவருக்கு பாரமாகத் தோன்றும். தனக்கு ஏதோ கெடுதல் நிகழப் போவது உறுதி என்று எண்ணுவார். எதிலும் நம்பிக்கை அற்றவராக இருப்பார். தனிமையை விரும்புவார். யாருடனும் பேச மாட்டார். யாராவது பேசினாலும் கோபப்படுவார். வெறுப்படைவார். தற்கொலை செய்து கொள்ள இடைவிடாத தூண்டுதல் இருந்து கொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே பேசுவார். அப்படிப் பேசுவது ஒருவித மகிழ்ச்சியாக இருக்கும். துயரத்திலிருந்து மீள மரணம் ஒன்றே தீர்வு என எண்ணுவார்.
ஆரம் மூரியாடிக்கம்;
தன்னுடைய வியாதியை நினைத்து வருத்தப்படுதல். தன் வியாதி தீராது என்று நினைத்தல். தன் உடல் பழையபடி ஆரோக்கியமாக இல்லை என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள எண்ணுதல். தன்னுடைய கடமைகளை, வேலைகளைக் கூட செய்ய சோம்பல், வெறுப்பு.
லாக்கானினம்;
மன வருத்தத்தில் பல வருடங்களாக ஆழ்ந்திருத்தல். பிரமை, பொய்த்தோற்றங்கள். எல்லா விஷயங்களும் கெட்டவையாகத் தோன்றுதல். தன்னுடைய வியாதி தீர்க்க முடியாதது, தனக்குப் பைத்தியம் பிடித்து விடும் என்று நம்புதல். அதிலிருந்து மீள மரணம் ஒன்றே வழி என்று தற்கொலை செய்து கொள்ள எண்ணுதல்.
சோரினம்;
வாழ்க்கையில் அளவு கடந்த வெறுப்பு. தன் குடும்பத்துனருடனுமும் சேர்ந்து இருக்க மாட்டார். தனிமையை விரும்புவார். தன்னுடைய வியாபாரத்தில் நஷ்டமடைந்து தான் ஏழையாகி விடுவோம் என்ற பயம். தன் வியாதியால் உடல் ஆரோக்கியமடையாது, தான் இறந்து விடுவோம் என்று தோன்றும் மரண பயம். இதனால் சாவைப் பற்றி அடிக்கடி நினைத்து, தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுதல் ஏற்படும். மிக்க வேதனையினால், நம்பிக்கையிழந்தும், பலமில்லாமலும் இருப்பார்.
செபியா;
நெருங்கிய உறவுகளையே வெறுத்தல். கணவனை, மனைவியை, குழந்தைகளைக் கூட வெறுத்து அலட்சியப்படுத்துதல். கவலையும், அழுகையும் மேலோங்கி, தன்னுடைய கடமைகளைக் கூட சரியாக நிறைவேற்றாமை. தனியே இருக்க விரும்புவார். பிறரைப் பார்ப்பதைக் கூட தவிர்ப்பார். எந்த ஒரு நிகழ்வும் அவர் மனதை சமாதானப்படுத்தாது. வாழத் தனக்கு தகுதியில்லை என்று எண்ணுதல்.
நாஜா;
ஆழ்ந்த கவலை மற்றும் வேதனையினால் மனம் உடைந்து போகுதல். பொய்த்தோற்றங்களை எண்ணி பிதற்றுதல். திடீரென்று தற்கொலை செய்து கொள்ள எண்ணம். அதற்கான தூண்டுதல் இருந்து கொண்டே இருக்கும்.
(நன்றி: ஹோமியோமுரசு அக்டோபர் 2009)