மூக்கிலுள்ள தந்துகிகள் உடைவதால்தான் மூக்கின் வழியே இரத்தம் வருகிறது.

கால்சியம் சத்துக் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இது போன்று மூக்கிலிருந்து இரத்தம் வருவதுண்டு. கால்சியம் சத்து மிகுந்த மாத்திரைகளை சாப்பிட்டால், இவர்களுக்கு மூக்கிலிருந்து ரத்தம் வருவது சரியாகிவிடும். ஸைனஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட சளியுடன் ரத்தம் வரும். விபத்துகளில் தலையில் அடிபட்டாலும் மூக்கிலிருந்து ரத்தம் வரும். இருதய நோய் உள்ளவர்களுக்கும் மூக்கிலிருந்து ரத்தம் வருவதுண்டு.

அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் சில சமயம் மூக்கிலிருந்து ரத்தம் வருதுண்டு. இது அவர்களுக்கு மிகவும் நல்லதுதான். அதிக ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள் இதுபோல மூக்கிலிருந்து ரத்தம் வரும்போது, அது வருவதை தடை செய்யக்கூடாது. ரத்தம் வரும்போது அவர்களை சாய்வான நிலையில் படுக்க வைக்க வேண்டும். சமதளத்தில் படுக்க வைத்தால் மூக்கின் வழியே வருகிற ரத்தம் உறைந்து கட்டியாகிவிடும். எனவேதான் சாய்வான நிலையில் இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்து இவர்களை படுக்க வைப்பது அவசியம்.

மாறாக மூளையில் ரத்தல் கசிவு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படலாம். மூக்கில் உள்ள தந்துகிகள் உடைவதால் இப்படி நேராமல் தடுக்கப்படுகிறது. இது உடலில் இயற்கையான ஒருவகை சேப்டி மெக்கானிஷம். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அப்போது ரத்த அழுத்தம் குறையும்.

ஹிமோபிளியா என்ற ஒன்று உண்டு. இது மரபு அணுக்களால் ஏற்படுவது. இது குறிப்பாக ஆண்களுக்குத்தான் வரும். ஆனால் தாய் மூலமாகத் தான் பரவும். மரபு அணுக்கள் மூலமாகப் பரவுகிற இந்த வியாதி, ஒருவருடைய பெண்ணிற்குப் பிறக்கிற குழந்தைக்கு வருவதுண்டு. இவர்களுக்கும் மூக்கிலிருந்து ரத்தம் வரும். 

(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)

Pin It