குழந்தைகள் வாந்தி எடுக்கின்றார்கள் என்றால் என்ன நினைப்பீர்...? வயிற்றில் கோளாறு, அஜீரணம், அல்லது சளி நிறைய இருப்பதால் என்று. அதே வாந்தி தினமும் காலையில் மட்டும், தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கோ ஒரு மாதமோ இருந்தால்? எல்லோரும் செய்வது ஒரு மருத்துவர் மாற்றி இன்னொருவருக்கு மாறுவது, மருந்துகள் மாற்றுவது, குழந்தை ஏதோ காரணத்தால் இவ்வாறு செய்கின்றன என்று காத்துக் கருப்பு என்று மந்திரிப்பது என்று என்னென்ன செய்ய வேண்டுமோ யார் யார் என்ன சொலிறார்களோ அதை செய்வது.

இவ்வாறு நாள் முற்றிப்போகும் போது மற்றுமுள்ள அறிகுறிகள் தென்படுகின்றன. நடக்கின்றான், கைகள் தளர்ந்து போகின்றன, ஒரு டம்ளரை கூட கையில் தூக்க முடியாது, கண்மாறு போல தென்படுகின்றது. வாந்தி நிற்கவில்லை, குழந்தை படுத்த படுக்கை ஆனவுடன் ஒரு பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடிவருவர். அந்த நிலையில் பொருளாதாரமும் வீண் விரையமாகியிருக்கும் மற்ற மருத்துவத்தில்.

குழந்தைகள் வாந்தி எடுத்தால், எந்த காரணமாக இருந்தாலும், அது மூன்று அல்லது ஐந்து நாட்களில் குணமாகிவிடும். தீராத வாந்தி என்றால் முதலில் யோசிக்க வேண்டியது மூளையில் ஏதேனும் குறை, இது தெரியாமல் நாம் கடந்து வரும்போது நரம்பியல் துறையினர் ஒன்றும் செய்யமுடியாத நிலை ஏற்படுகின்றது.

நரம்பியலினால் ஏன் வாந்தி ஏற்படுகின்றது. காரணங்கள் ஏராளம்.

1. தலைகாயத்தினால், மூளையில் சிதைந்த காயம், இரத்த கட்டிகள் இருக்கலாம்.

2. மூளைக்காய்ச்சலினால் (வெளிக்காய்ச்சல் தெரியாது) நீர் பை வீங்கி அழுத்தம் அதிகமாகி இருக்கலாம்.

3. வளர்ச்சி அடையும்போது நீர்ப்பை வீக்கம் வந்து நீர் கட்டிகள் இருக்கலாம்

4. மூளையில் பெரு மூளையிலோ, சிறு மூளையிலோ அல்லது முகுளத்திலோ கட்டிகள் இருக்கலாம்.

5. மூளையில் இரத்த நாளத்தில் முடிச்சுகள் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் இரத்தம் பரவலாக கசிந்து இருக்கலாம்.

இதை எவ்வாறு கண்டுபிடிப்பது, முதலில் நரம்பியல் நிபுணர் உடல் ரீதியாக பரிசோதித்து பார்ப்பார்கள். பிறகு சில பரிசோதனைகளை பரிந்துரைப்பர். அவை முக்கியமாக CT ஸ்கேன் அல்லது MRI- ஸ்கேனாக இருக்கும்.

சில இரத்தப் பரிசோதனைகள் செய்வர். இரத்த சோகைக்கு உப்பு சத்து மிகையாக இருக்குமா என்று பார்ப்பதற்கு பின்னர் என்ன காரணம் என்று கூறுவார். அதற்கான சிகிச்சை முறைகளையும் கூறுவர்.

இந்த மாதிரி ஒரு 10 வயது சிறுவன் எங்களிடம் வந்தார். ஒரு மாதத்துக்கும் மேல் வாந்தி என்று வயிற்றுகோளாறு பார்க்கும் மருத்துவரை பார்த்து பார்த்து மிகவும் மோசமானநிலையில் வந்தார்.

அவரை பரிசோதித்ததில் அவருக்கு சிறுமூளையில் கட்டி இருந்தது என்று தெரியவந்தது. அதை அறுவை சிகிச்சை செய்து முழுவதுமாக எடுத்து விட்டு பிறகு தொடர்ந்து சிகிச்சை கொடுத்ததில் அவர் இன்று நன்றாக இருக்கின்றார், எல்லா குழந்தைகளை போல் பள்ளிக்கு சென்று படிக்கின்றான் விளையாடுகின்றான்.

வாந்தி என்றால் மூளையிலும் குறை இருக்கலாம் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Pin It