மனித குல வளர்ச்சியில் ஈடு இணையற்ற பங்கு வகிப்பது மருத்துவ அறிவியலாகும். சிசு உருவாவது முதல் மனிதனின் கடைசி மூச்சு வரை எழும் ஆயிரக்கணக்கான ஆரோக்கியம் பற்றிய கேள்விகளுக்கு விடைகாண முயன்ற மனித அறிவின் வெளிப்பாடுதான் மருத்துவ அறிவியலாக வளர்ந்துள்ளது. ஏராளமான கருவிகளோடு, உடலின் எந்த ஒரு உறுப்பிற்குப் பதிலாகவும் செயற்கை உதிரிபாகங்களைப் பொருத்துகிற அளவிற்கு இன்றைய மருத்துவ அறிவியல் வந்து நிற்கிறது. மருத்துவ அறிவியலின் பாதையும், பயணமும் சரியான திசைவழியில் செல்கிறதா என்பதுதான் இன்றைய காலத்தின் கேள்வியாக நம் முன் நிற்கிறது.

‘இது தான் அறிவியல்பூர்வமானது’ என்று சான்றளிக்க உலகில் எந்த ஒரு அமைப்பிற்கும் அதிகாரம் கிடையாது. ஏனென்றால், அறிவியல் என்பது பன்முகத்தன்மை வாய்ந்தது. ஒற்றைத்தன்மையானது அல்ல. அறிவியல் என்பதை அறிந்துகொள்ள - உரசிப்பார்க்க பொது அளவுகோல் ஒன்றை யாரும் நிர்ணயித்துவிட இயலாது. இன்று நாம் மருத்துவ அறிவியலாக நம்பிக்கொண்டிருப்பது இயந்திரங்களை மட்டும்தான். ஆனால் கருவிகள் கண்டுபிடிக்காத தூரத்தில் உடலின் பல விளைவுகள் அமைந்துள்ளன.

உயிர் மறைவானது. அதனை அளவிடவோ, கண்டுபிடிக்கவோ கருவிகள் இல்லை. உடலின் அடிப்படை நோயான வலி மறைவானது. வலியின் தன்மையை கண்டுபிடிக்க இன்று வரை கருவிகள் இல்லை. மருத்துவ அறிவியல் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை மனித அறிவை, சிந்தனையை நம்பியிருந்தது. இன்றைய அறிவியலின் பாதை சிந்தனையைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு இயந்திரங்களை முன்னிறுத்துகிறது.

உதாரணமாக, ஒரு மனிதனுக்கு தலைவலி ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. மலச்சிக்கல் ஏற்பட்டு மலக்குடலில் மலம் தங்கிவிடுவதால் தலைவலி தோன்றலாம். நாம் சாப்பிட்ட உணவு இரைப்பையிலோ, சிறுகுடலிலோ செரிமானமாகவில்லை என்றால் தலைவலி தோன்றலாம். பசி ஏற்பட்டு சாப்பிடவில்லையென்றால் மண்ணீரல் பலவீனம் ஏற்பட்டு தலைவலி வரலாம். இன்னும், கல்லீரல் சோர்வாலும், சுவாசக் கோளாறாலும், உடல் வெப்ப நிலை மாறுபாட்டாலும் தலைவலி தோன்றலாம். இப்படி, தலைவலி ஏற்படுவதற்கு உள்ளுறுப்புக்கள் ரீதியாக அறுபதுக்கும் மேற்பட்ட காரணங்களை அடுக்குகிறது அக்குபங்சர். அப்படி ஏற்படும் வலியின் தன்மையை நூற்றுக்கும் அதிகமானதாக பட்டியலிடுகிறது ஹோமியோபதி. ஆனால், இதைப்பற்றியெல்லாம் எந்தக்கவலையும் இல்லாமல் தலைவலிக்கான காரணத்தை தலையிலேயே தேடிக்கொண்டிருக்கிறது -ஆங்கில மருத்துவத்தின் அறிவியல் கருவிகள்.

இங்கே மருத்துவ அறிவியலின் பாதை எங்கே செல்கிறது? அறிவின் பின்னால் செல்லவேண்டிய கருவிகள் - அறிவிற்கு தலைமையேற்று வழிகெடுக்கிறது.

மருத்துவ அறிவியலின் இன்றைய வளர்ச்சி எத்தகையது?

முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் நம் கிராமத்து நாட்டு மருத்துவர்கள் முறிவு ஏற்பட்ட எலும்பை நேராக வைத்து இணைத்து வெளிப்பகுதியில் மரத்தட்டையாலான கட்டு ஒன்றைப் போட்டுவிடுவார்கள். மூன்று, நான்கு முறைகள் பத்து ரூபாய் கொடுத்து கட்டை புதுப்பித்துக் கொண்டால் போதும் - எலும்பு இணைந்துவிடும். இப்போது விஞ்ஞான மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள்? முறிவு ஏற்பட்ட எலும்பின் மேலுள்ள தோலைக்கிழித்து, தசையை அறுத்து உலோகத்திலான பிளேட்டை வைத்து அதன் நான்கு முனைகளிலும் ஸ்க்ரூ போட்டு தைத்து விடுகிறார்கள். சில மாதங்களில் எலும்பு தன்னியல்பில் இணைந்துவிடும். ஆனால் உள்ளே வைத்துத் தைக்கப்பட்ட உலோகம் என்ன ஆகும்? உடலிற்குச் சம்பந்தமில்லாத அந்நியப்பொருளை உடல் உள்ளே விட்டுவைக்காது. வலியையும், சீழையும் ஏற்படுத்தும். வலியை மறக்க - வலி நிவாரணியும், சீழ் வராமல் பாதுகாக்க நுண்ணுயிர்க்கொல்லி மருந்தும் கொடுக்கப்படும். ஓர் ஆண்டிற்குப்பிறகு மறுபடியும் ஒரு லட்ச ரூபாய் செலவுசெய்து உள்ளே சும்மாயிருக்கும் பிளேட்டை எடுத்துவிடலாம். இது கட்டாயமில்லை; வசதி வாய்ப்பு இருப்பவர்கள் செய்துகொள்ளலாம். இல்லாவிட்டால் அவ்வப்போது ஏற்படும் வலிக்கு மாத்திரைகளை உண்டு காலத்தைக்கடத்தலாம்.

எப்படிப்பட்ட எலும்பு முறிவாக இருந்தாலும் ஒரு சாதாரண கிராமத்து கட்டு போதுமானதாக இருந்தது. நம் அறிவியலின் தவறான வழிமுறை ஒரு எலும்பு முறிவிற்கு பல லட்சங்களைப் பறித்துக்கொண்டு புதிய நோய்களையும் பரிசாகத்தருகிறது. மருத்துவ அறிவியல் உண்மையிலேயே வளர்ந்து வருகிறதா? அல்லது நாம் மருத்துவ அறிவியலைத் தவற விட்டு விட்டு கருவிகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோமா? இன்றைய விஞ்ஞானத்தைத் தீர்மானிக்கும் ஒற்றைச்சக்தியாக நாம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப்பேசும் எந்த ஒரு முறையையும் ‘அறிவியல் பூர்வமானது இல்லை’ என்ற நம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்ட கருத்தால் புறந்தள்ளுகிறோம்.

உலக சுகாதார நிறுவனமும், உலக நாடுகளும் ஏற்றுக்கொண்ட ஒரு மருத்துவ முறை ஹோமியோபதி. இம்மருத்துவ முறை கடந்த இருநூறு ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. விஞ்ஞான வளர்ச்சியின் உச்ச கட்டம் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிற இந்த நூற்றாண்டில் கூட ஹோமியோபதி மருந்துகளில் என்ன இருக்கிறது என்பதை எந்த கருவியாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஹோமியோபதி அறிவியல் பூர்வமற்றது என்று கூறவும் வழியில்லை. ஏனென்றால் அம்மருந்துகளின் ஆற்றல் உலகம் முழுவதும் பயன்பாட்டு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் என்பது கருவிகளைக் கடந்தும் இருக்கலாம் என்பதை ஏற்றுகொள்கிற பக்குவம் நமக்கு வரவேண்டும். இப்படியான சிந்தனைதான் அறிவியலை அதன் அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதாக அமையும். இன்னும், சராசரி மக்களுக்கு எட்டாத தூரத்தில் மருத்துவ அறிவியலின் ரகசியங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

# உலகத்திலேயே ஆறு நாடுகளில்தான் போலியோ சொட்டு மருந்து புழக்கத்தில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளே இல்லாத பல நாடுகளிலும் இன்று போலியோவின் தாக்கம் குறைந்துள்ளது.

# தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்து விஞ்ஞானிகளில் ஒரு பிரிவினர் அதை எதிர்த்து வருகின்றனர். உலகம் முழுவதும் தடுப்பூசி மருந்துகளால் பாதிக்கப்பட்ட மக்கள் “தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம்”( Anti Vaccination Leaque) ஒன்றை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தி வருகிறார்கள்.

# சமீபத்தில் பீதியைக்கிளப்பிய சிக்கன்குனியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்துகளோ, கட்டுப்படுத்தும் மருந்துகளோ கண்டுபிடிக்கப்படாத நிலையில் அந்நோய் தானே குறைந்துபோய் உள்ளது.

# திடீர், திடீரென பீதியைக்கிளப்பி பின் மறைந்து போகும் இந்த நோய்கள் உருவாகக் காரணம் என்று நம்பப்படும் கிருமிகளின் தோற்றம், அழிவு பற்றிய முழுமையான தீர்வுகள் இன்னும் முன்வைக்கப்படவே இல்லை. என்றாலும் வணிக ரீதியாக விற்பனை செய்யப்படும் எல்லா பொருட்களுக்குமான விளம்பரங்கள் அனைத்தும் கிருமிகளின் மீதே கட்டமைக்கப்படுகின்றன.

# ஆட்கொல்லி நோய் என நம்பப்படும் எய்ட்ஸுக்கு காரணமாகக் கூறப்படுவது - H.I.V. `என்னும் கிருமிதான். இந்த கிருமியக் கண்டுபிடித்த விஞ்ஞானி டாக்டர்.லுக் மோன்பிக்னியர் “H.I.V. கிருமி எய்ட்ஸுக்கு காரணமல்ல: இதைப்பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் எக்கச்சக்கமான குளறுபடிகளும், பித்தலாட்டங்களும் உள்ள்ன” என்று (மியாமி ஹெரால்டு 23.12.1990) தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

வித விதமான குழப்பங்களும், எண்ணற்ற கேள்விகளும் கண்டுபிடிப்புகளின் பின்னால் வருகின்றன என்றாலும் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முழுமையாவதற்கு முன்பே யாருடைய கட்டாயத்தினாலோ சந்தைக்கு வந்துவிடுகின்றன.

அமெரிக்காவில் சர்க்கரை நோய் முதல் முறையாக ஒரு நபருக்குக் கண்டுபிடிக்கப்பட்டால் 6 மாதங்களுக்கு மருந்துகள் கொடுப்பதில்லை. ஏனென்றால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாகவே மாறுபடும் சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் இங்கே சர்க்கரையின் அளவு ஒருமுறை கூடியதாகக் கண்டு பிடிக்கப்பட்டால் - அவருக்கு சாகிற வரை மருந்துகளைப் பரிந்துரைக்கிறார்கள். இங்கிலாந்தில் ஆங்கில மருத்துவ கருத்தோட்டங்களுக்கு எதிரான ஆய்வுகள் கவனிக்கப்படுகின்றன. இந்தியாவில் மாற்றுச்சிந்தனைக்கான இடம் முற்றாக நிராகரிக்கப்படுகிறது. வெவ்வேறு விதமான மாற்று மருத்துவங்களின் எல்லா நிரூபணங்களும் ஆங்கில மருத்துவத்தின் ஆய்வுக்கூடங்களிலிலேயே நிகழவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எப்படி அறிவியல் ஆகும்?

விதம் விதமான ரசாயன மருந்துகளையும், நவீன அறுவை சிகிச்சைகளையும் புறந்தள்ளி விட்டு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்துவருகிறார்கள். மண்ணில் போடும் ரசாயன உரங்களை தவிர்த்து விட்டு எப்படி இயற்கை விவசாயம் சாத்தியமோ அதே போல ரசாயன மருந்துகளை கைவிட்டு இயற்கையான ஆரோக்கிய வாழ்வை அமைத்துக்கொள்வதும் சாத்தியமே.

இவ்வகையான இயற்கை வழி வாழ்வியலை மையமாகக்கொண்ட இயற்கை மருத்துவத்தை ( Naturopathy) பயிற்றுவிக்க உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அறிவியல் பல்கலைக்கழகங்களும், பயிற்சிபெற்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இருக்கவே செய்கிறார்கள். மாற்று மருத்துவங்கள் குறித்த உலக நடப்புகள் அனைத்தும் இந்தியா போன்ற அடிவருடி அரசாங்கங்களால் மூடி மறைக்கப்படுகின்றன.

இந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் கூட இரண்டு விதமான பாடத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அதில் ஒன்று கிருமிகளால் நோய்வருகிறது என்று கூறும் ஆங்கில மருத்துவ (MBBS) பாடத்திட்டம். இன்னொன்று, கிருமிகளால் நோய் பரவுவதில்லை என்று கூறும் இயற்கை மருத்துவ (BNYS) பாடத்திட்டம். ஆனால், இதே விதமான இயற்கைப் பாடத்திட்டத்தைக் கொண்டிருந்த சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவங்களின் பாடங்கள் சமீபத்திய வருடங்களில் ஆங்கில மருத்துவ அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகை மருத்துவக் கோட்பாடுகளும் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டும். அது தான் அறிவியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

ஒற்றைத்தன்மையை - ஒரு மருத்துவத்தை வலியுறுத்துவதுதான் மருத்துவ அறிவியல் என்றால் . . அந்தச் சர்வாதிகாரத்தைப் புறக்கணிப்பதில் தவறேதும் இல்லை.

- மருத்துவர் அ. உமர் பாரூக், M.Acu, D.Ed (Acu)