நீரழிவு எனப்படும் சர்க்கரைநோய் மக்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய் ஆகும். இந்த நோய் இல்லாத நாடுகளே இல்லை. எல்லா நாட்டு மக்களுக்கும் ஏற்படுகிறது. வளரும் நாடுகளில் நமது நாட்டில் இந்த நோயின் பாதிப்பு மிகுதியாக உள்ளது. இங்கு கோடி மக்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.       நீரிழிவு, மதுமேகம், பிரமேகம், மிரமியம், சர்க்கரைநோய், சர்க்கரைவியாதி, டயாபடிக், சுகர் ஆகிய அனைத்தும் இந்த நோயை குறிப்பிடும் பெயர்கள் ஆகும்.

நீரிழிவு நோய் என்பது நம் கணையத்தின் மீது படிந்துள்ள தேவையற்ற நவச்சார உப்பின் படிவமே ஆகும். மனிதனின் சிறுநீர் வெளியேற்றம் சராசரி 1500 மி.லி. அளவு அதற்கு மேல் வெளியேறும் பட்சத்தில் நீரழிவு நோயின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. பெற்றோர் இருவருக்கும் இந்த நோய் இருந்தால் சந்ததியினருக்கு 100 சதவீதம் வர வாய்ப்பு உள்ளது. இதனை மருத்துவ பரி சோதனைகள் மூலம் கண்டறியலாம்.

நீரழிவுக்கான அறிகுறிகள்  

சமீபகாலமாக கூடுதலாக தாகம், பசி, நன்றாக உணவு உட்கொண்டாலும் உடல் மெலிவு, சோர்வு, கை கால் தளர்ச்சி, இரவு நேரங்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட நேரங்களில் சிறுநீர் கழிக்க நேரிடுதல், கண் பார்வையில் பார்வை குறைவு ஏற்படுதல், கால்களில் குறிப்பாக ஆறாத நீண்ட நாள் புண், முன்பு போல் இல்லாமல் அடிக்கடி கை, கால் மரமரத்துபோதல், சமீபகாலமாக தாம்பத்ய ஈடுபாடு குறைவு பசி உள்ள நேரத்தில் உணவு உட்கொள்ள இயலாத வகையில் வியர்வை, தலைசுற்றல், கை, கால் நடுக்கம் முதலிய அறிகுறிகள் இருந்தால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு உள்ளது என அறியலாம்.

சர்க்கரை நோய்க்கு முழுமையான தீர்வு உண்டா? இல்லையா?

தீர்வு இல்லை?

சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் (அலோபதி) மருந்து இல்லை. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டே ஆக வேண்டும். அப்போது தான் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதோடு ஆண்டுக்கு ஆண்டு மருந்தின் அளவை கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறது ஆங்கில மருத்துவம். இதை மெய்ப்பிக்கும் விதமாக இந்திய அரசின் மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940-ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995-ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ஒ என்ற பிரிவின் கீழ் 51 வகை வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும் என்றோ, மருந்துகளை கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.

“Drugs and cosmetics act 1940, 1945, 1995,    ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drug may not purport to prevent or cure or make claims to prevent or cure.”.”

ஆங்கில மருத்துவத்தின் மருந்துகள் இந்த 51 வகை நோய்களை குணப்படுத்த முடியாது என்கிறது மேற்கண்ட சட்டம். இந்த 51 நோய்களில் சர்க்கரை நோயானது 14வது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 1922 வரை நீரிழிவு நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள், ஊசிகள் இல்லாமல் இருந்தது. 1922-ல் இன்சுலின் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. 1942-ல் நீரழிவு வியாதியுடன் இயல்பாக வாழ மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இருந்து மனிதன் நீரழிவோடும், இன்சுலின் ஊசியோடும் மாத்திரைகளோடும் வாழ கற்றுக்கொண்டான்.

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சர்க்கரை நோய் (அ) நீரழிவு நோய் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் அது ஒரு நோய் அல்ல. ஒரு குறைதான். மற்ற நோய்களைப் போல் சர்க்கரை நோயின் தாக்கம் உடனடியாக வெளியே தெரிவதில்லை. வெளிப்படையாக எந்த அறிகுறியும் இருக்காது. நமக்கு ஏற்படும் காய்ச்சல், ஜலதோசம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவம் பார்க்கும் நாம் சர்க்கரை நோய் என்றால் மெத்தனம் காட்டுவதற்கு காரணம் வலியோ உடனடி அறிகுறியோ இல்லாததுதான். இதனால் பலர் சர்க்கரை நோயால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு இடமளித்து விடுகின்றனர். சர்க்கரை நோயை முற்ற விடுவதற்கு இதுதான் காரணம். சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால் நாளா வட்டத்தில் கண், சிறுநீரகம் இதயம், கால்கள் போன்ற முக்கிய உறுப்புக்களைப் பாதிக்கும்.

சர்க்கரை அளவு அதிகரிக்க காரணம் 

ரத்தத்தில் உள்ள குளுகோûஸ சக்தியாக மாற்றுவதற்கான இன்சுலின் கணையத்தில் இருந்து சுரக்காதாலோ அல்லது குறைவாக சுரத்தாலோ அல்லது சுரந்த இன்சுலின் சரிவர வேலை செய்யவில்லையெனில் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகிவிடுகிறது. இவ்வாறு ரத்தத்தில் கட்டுக்கடங்காமல் இருக்கும் குளுக்கோஸ் மெல்ல மெல்ல ரத்தக் குழாய்களைப் பதம் பார்க்கிறது. ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு முறையான ரத்த ஓட்டம் இல்லாததால் உடலின் முக்கிய உறுப்புகள் சேதமடைகிறது.

சர்க்கரை நோயை முழுமையாக குணமாக்க முடியும்

அலோபதி (ஆங்கில) மருத்துவத்தில் சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது என்றும், வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரை, ஊசியோடு கட்டுபாட்டில்தான் வைத்துக்கொள்ள முடியும் என்கிறது. ஆனால் இந்திய மருத்துவத்தில் (சித்தா, ஆயுர்வேதிக்) குறிப்பிட்ட காலம் வரை (6 மாத காலம்) மூலிகை மருந்துகளை எடுத்து, கணையத்தை மீண்டும் இயங்க செய்ய முடியும் என்று கூறுகிறது. மேலும் வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரையின்றி உணவுக் கட்டுபாட்டுடன் மற்றும் சிறிது உடற்பயிற்சி நடைப் பயிற்சிகள் மூலம் முழுமையாக மாத்திரை மருந்து இல்லாமல் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம்.

கட்டுப்பாடான வாழ்க்கை முறையால் மருந்து, மாத்திரையிலிருந்து விடுதலை பெற முடியுமா?

இந்திய மருத்துவத்தில் இது முழுக்க முழுக்க சாத்தியம். சர்க்கரை நோயோடு வந்தவர்கள் மூலிகை மருந்துகளை சிறிது காலம் எடுத்து பின்பு உணவு, உடற்பயிற்சியோடு வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டு உள்ளார்கள் என்பது சிகிச்சை அனுபவத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது. முறையான கட்டுப்பாடான உணவு அதோடு தொடர் உடற்பயிற்சியைக் கடைபிடித் தால் மருந்து, மாத்திரை, இன்சுலின் ஊசியிலிருந்து விடுபட முடியும். கட்டுப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்தால் அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்துகள் தேவைப்படாது. இதுவே சர்க்கரை நோயை வெல்வதற்கான ரகசியம்! இதைப் பலர் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

 

-டாக்டர்.குமரி.ஆ.குமரேசன், RHMP., 
Cell: 94436 07174
(மாற்று மருத்துவம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)

 

Pin It